Skip to main content

நகரத்து விளக்குகள்

 பல வருடங்களுக்கு முன்னால் மதுரையில் சார்லி சாப்ளின் திரைப்பட விழா ஒரு வாரம் நடந்தது. மாப்பிள்ளை விநாயகர் என்ற தியேட்டர். City Lights, The Great Dictator Modern Times என்று வரிசையாக சாப்ளின் படங்கள். இறுதி நாளன்று Limelight என்ற திரைப்படம். அது மட்டும் முழுக்க முழுக்க பேசும் படம்.  The Great Dictator ல் கொஞ்சம் பேச்சு உண்டு. ஏனைய படங்கள் முழுக்க முழுக்க மெளனப் படங்கள். இந்த விழாவில் ஒரு படத்தைக் கூட தவறவிடவில்லை. நானும் நண்பர் ராமச்சந்திரனும். இன்று வாட்ஸப்பில் The Great Dictator என்ற படத்தில் சாப்ளின் பேசும் வசனத்தின் எழுத்து வடிவத்தை பதிவு செய்து அனுப்பியிருந்தார். ஏறக்குறைய அதே சமயத்தில் நானும் சாப்ளினை நினைத்தபடி இருந்தேன்.

இந்த தற்செயல் வியப்பு அளித்தது. இன்று 16 ஏப்ரல் சாப்ளின் பிறந்த தினம் வேறு.



நான் மேலே குறிப்பிட்ட சாப்ளின் திரைப்பட விழாவிற்கு முன்னரே பார்த்திருந்த திரைப்படம் City Lights.

சாப்ளினை முதன் முதல் அறிந்தது இந்தத் திரைப்படம் மூலமாகத்தான்.

மூக்குக்கு கீழே வித்தியாசமாக மீசை.

தலையில் தொப்பி. இறுக்கமான அளவில் சிறிய சட்டை மற்றும் கோட். தொளதொள பேண்ட். பழைய ஷூ. கைத்தடி. வாத்து நடப்பது போல ஒரு மாறுபட்ட நடை. 

தோற்றத்தைப் பார்த்தவுடன் சிரிப்பு வரும். அது மட்டும் தானா சாப்ளின்.

சின்னச் சின்னதாய் எத்தனை உடல் மொழிகள்.  மெளனப் படத்தில் அவர் மெலிதாகத் தீட்டும் உணர்வுக் கோலங்கள் பிரமிக்க வைக்கும். சின்ன அசைவுகள் மானுடத்தைக் கேலி செய்யும். அதன் சிறுமையை பகைமையை போலித்தனத்தை அகந்தையை அன்பின்மையை.

இத்தனைக்கும் சாப்ளின் வீடு வாசல் இல்லாத நாடோடி.(Tramp) உலகம் அவரை விரட்டியடியே இருக்கும். ஆனால் அவரோ உலகின் மேல் பகைமை பாராட்டாது இருப்பார். உலகின் வழமைகளை அறியாதவராக. அப்பாவியாக. வலிமை அதிகாரம் இல்லாத சாதாரண மனிதராக. .


City Lights என்ற திரைப்படத்திற்கு வருவோம். படம் இப்படித் துவங்குகிறது. ஒரு பெரிய நினைவுச் சின்னம் திறக்கப்பட இருக்கிறது. திரையிட்டு மறைக்கப்பட்டு இருக்கிறது. கூட்டம் கூடி இருக்கிறது. அதிகாரத்தில் உள்ளவர்கள் பேசுகிறார்கள். அது கூவிப் பிதற்றுவதாக தெளிவற்ற சத்தமாய் ஒலிக்கும். பின்பு நினைவுச் சின்னத்தை நாட்டுக்கு அர்ப்பணம் செய்யும் விதமாக கயிறு இழுக்கப்படும். திரை விலகும் போது நடுநாயகமாக இருக்கும் சிலையின் மடியில் ஒரு மனிதன் உறங்கிக் கொண்டு இருப்பான். இத்தனை ஆரவாரத்திற்கும் நடுவில். உறக்கத்தில் தலையைச்  சொறிவான். சாவகாசமாக காலை  மடித்து சொறிந்து கொள்வான். அது சாப்ளின். அதிகாரிகள் சத்தமிடுவார்கள். கீழே இறங்கச் சொல்லி சைகை செய்வார்கள். நினைவுச் சின்னமாயிற்றே. அதன் மாண்பு குலையக் கூடாதே. இந்த மனிதன் புரிந்து கொண்டததாக தெரியவில்லை. தலையில் இருந்த தொப்பியை சொற்ப நேரம் நீக்கி பின்பு அணிந்து கொள்கிறான். மரியாதை நிமித்தமாகவும் மன்னிப்புக் கோருதல் போலவும். ஒருவழியாக கீழே இறங்குகிறான்.


அடுத்த காட்சி. நடைபாதையில் அந்தப் பெண் மலர்களை விற்கிறாள். சாப்ளின் கடந்து போகிறார். அந்தப் பெண் ரோஜாவை வாங்கிக் கொள்ள வேண்டுகிறாள். சாப்ளின் கை நீட்டுகிறார். ரோஜா நழுவிக் கீழே விழுகிறது.  சாப்ளின் குனிந்து எடுக்கிறார். அந்தப் பெண் ரோஜாவிற்காக தரையைத் துழாவுகிறாள். அவளுக்கு பார்வையில்லை என்று தெரிகிறது. சாப்ளின் மனதில் கனிவு பிறக்கிறது.

பேண்டைத் துழாவி நாணயத்தை நீட்டுகிறார். பார்வையற்றவள் என்பதை ஒரு கணம் மறந்து. பின்பு நாணயத்தை அவள் கையைத் தொட்டு அழுத்துகிறார். அவள் ரோஜாவை அவரிடமிருந்து வாங்கி கோட்டைத் தடவி உணர்ந்து செருகி விடுகிறாள்.

சாப்ளின் தொப்பியைக் கழற்றி அணிந்து கொள்கிறார். அங்கே நினறு கொண்டிருந்த கார் கிளம்புகிறது. மலர் விற்ற பெண் பாக்கிச் சில்லறையை நீட்டுகிறாள். சாப்ளினை காரில் வந்த கனவான் என்று எண்ணிக் கொள்கிறாள்.


அன்று இரவு ஒரு பெரும் பணக்காரனை சாப்ளின் தற்கொவையிலிருந்து காப்பாற்றுகிறார். அவன் காரில் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்கிறான். ஒயின் கொடுத்து உபசரிக்கிறான். விடிந்தபின் போதை தெளிகிறது. தனது உதவியாளரை அழைத்து இந்த மனிதனை வெளியே துரத்து என்கிறான். சாப்ளின் விரட்டப்படுகிறார். இப்படி டோதையில் சாப்ளினை நண்பனாகக் கொள்வதும் போதை தெளிந்த பின் வெளியே விரட்டுவதும் மாறி மாறி நடக்கிறது. அப்படி நட்பாக இருக்கும் தருணத்தில் மலர் விற்கும் பெண் தான் தங்கியிருக்கும் பணக்காரன் வீட்டைக் கடப்பதைப் பார்க்கிறார் சாப்ளின்.

உடனே உள்ளே ஓடி பணக்கார நண்பனிடம் பத்து ஷில்லிங்கை கேட்டுப் பெறுகிறார். பூ விற்கும் பெண்ணிடம் மொத்தப் பூவையும் வாங்கிக் கொள்கிறார். பணக்கார நண்பனின் காரில் அவளுடைய வீட்டில் கொண்டு வந்து

விடுகிறார். சாப்ளினை பெரும் பணக்காரர் என்றே அந்தப் பெண் முடிவு கட்டுகிறாள்.காரைத் திரும்ப கொண்டு தரும்போது பணக்கார நணபனுக்கு இவரை யாரென்றே தெரியவில்லை. அது போதை தெளிந்த நேரம்.


பின்னொரு சமயம் சாப்ளின் பூ விற்கும் பெண்ணை அவளுடைய வீட்டில் சந்திக்கிறார். ஒரு பேப்பர் செய்தியைப் படித்துக் காட்டி வியன்னாவிலிருந்து வருகை தரும் டாக்டர் மூலம் இழந்த பார்வையைப் பெறலாம் என்று நம்பிக்கை

தருகிறார் சாப்ளின். வாடகை பாக்கியையும் நான் சரிக்கட்டுகிறேன் என்கிறார். பணத்துக்கு என்ன செய்வது. சாப்ளின் வேலை பார்க்கிறார். வேலையைத் தொலைக்கிறார். பாக்ஸிங் சண்டை போடுகிறார். காயமடைகிறார். பணம் மட்டும் கிடைக்கவில்லை. அதிர்ஷ்ட வசமாக வெளிநாடு சென்ற பணக்கார நண்பர் வீடு.திரும்புகிறார். அவரிடம் நிலைமையைச் சொல்ல வீட்டிற்கு அழைத்துச் சென்று பணம் தருகிறார். அப்போது திருடும் நோக்கத்தோடு இருவர் திரையின் பின்னே மறைந்திருப்பதைக் கண்டறிகிறார்கள். சாப்ளின் திருடர்களைத் துரத்த, வந்த போலீஸ் இவரைத் திருடன் என்று முடிவு கட்டுகிறது. காரணம் இவர் கோட் பாக்கெட்டில் இருந்த பணம். பணக்காரனிடம் போலீஸ் கேட்க போதை தெளிந்த அவர் இந்த மனிதன் யார் என்று சாப்ளினைப் பார்த்துக் கேட்கிறார் பணம் கொடுத்ததையே மறந்து. போலீஸ் சாப்ளினைக் கைது செய்ய முற்பட சாப்ளின் தப்பி ஓடுகிறார். பூ விற்கும் பெண்ணின் வீட்டை அடைகிறார். பணத்தைத் தருகிறார் கண் சிகிச்சைக்கும் வாடகைப் பாக்கிக்கும் ஆகுமாறு.


வீட்டை விட்டு வெளியே வந்து திரியும் சாப்ளினை போலீஸ் பிடித்துச் சிறையில் தள்ளுகிறது. சிறையிலிருந்து வெளிவரும் சாப்ளின் பூ விறகும் பெண் வழக்கமாக நிற்கும் நடைபாதையைத் தேடி வருகிறார்.....


 படத்தின் இறுதிக் காட்சியை இங்கே காணலாம்.





கோமாளிகள் இடறி விழும் போது நாம் சிரிப்பவர்களாக இருக்கிறோம். ஆனால் அவர்களுடைய மனதில் கருணையும் காதலும் மெல்லச் சுரந்தபடியே இருக்கிறது 

மேலே கண்ட இறுதிக் காட்சியில் சாப்ளினின் நடிப்பிற்கு கண்கள் பனித்தது 

மெலிதாக ஒரு சோகம் மனதில் கவிந்தது.


தி சந்தானம்




Comments

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. It reminds me a scene from " Njan Prakashan, malayalam film, where the protagonist would suggest to his girlfriend that 'Chaplin is a comedian'to which she would say " no, he is a genius ''.

    That is an important scene in that wonderful film.

    Available on Netflix.

    ReplyDelete
    Replies
    1. That is right.. Not about comedy alone. More about the deep sensitivities and his brilliance an actor. I cherish our Limelight moments

      Delete
  3. நல்ல பதிவு. ரசித்தேன். நன்றி

    ReplyDelete
  4. Well Narrated ., Those Deep sensitivities which is also embedded in all of us were Fantastic ✍️✍️

    ReplyDelete
  5. ஜீ! சாப்ளின் அவர்களின் ஆரம்ப கால வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக அமையவில்லை. தான் மகிழ்ச்சியாக இல்லாவிடினும் உலக மக்களை மகிழ்ச்சி படுத்தினார். அவர் ஒரு மாமேதை. ஒருவரை மனம்விட்டு சிரிக்க வைப்பதென்பது சுலபமான காரியமில்லை. இன்று நாம் காணும் நகைச்சுவை காட்சிகளெல்லாம் அப்படிப்பட்டவைதானா!
    என்ன பண்ணுவது மக்களின் தரமுமம் குறைந்துபோனதே அதற்கு காரணம்.
    சாப்ளினின் படங்கள் அனைத்தையும் பார்த்த நான் அதிர்ஷ்டசாலி என்று எண்ணுகிறேன்.
    நல்ல ஒரு செய்தியை பதிவிட்டதற்கு என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுப்புராஜ். படித்ததற்கும் இங்கே பதிலிட்டதற்கும். நீங்கள் சொன்னது மிகவும் சரி. வாழ்க்கைத் துயரங்களைக் கடந்தபடியேதான் சாப்ளின் எல்லோரையும் சிரிக்க வைத்தார். சிரிப்பையும் மீறி வாழ்க்கை குறித்தும் மனிதர் குறித்தும் ஒரு நுட்பமான பார்வை அவருக்கு இருந்தது.

      Delete
  6. அந்தப் படத்தைப் பார்க்கத் தூண்டுகிறது உன் எழுத்தும், காணொலியும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...