ஒரு நதி எங்கே துவங்குகிறது? அறிதல் கடினம். ஒரு சிரிப்பு எங்கே துவங்குகிறது? அறிய முயலலாம். சில சிரிப்புகள் புருவங்களில் துவங்குகிறது. சில சிரிப்புகள் நெற்றியில் துவங்குகிறது. மூக்கில் பரவி நாசி மடல்களில் சிலிர்க்கிறது. இதழ்களில் கண நேரம் நிலை பெறுகிறது. பின்பு வானவில்லைப் போல மறைந்தும் விடுகிறது. மனதில் மழையும் இள வெயிலும் மாறி மாறி அடிக்கிறது.
பாப்லா நெருடா என்று ஒரு அற்புதமான கவிஞர். சிலி தேசத்தைச் சேர்ந்தவர். கவிஞர் மட்டுமல்ல. தீவிர அரசியலில் ஈடுபட்டவர். பல பதவிகள் வகித்தவர். இவர் பிறந்து 118 ஆண்டுகள் ஆகிவிட்டன.. அவர் சிரிப்பை பற்றி எழுதிய ஒரு கவிதையைப் பார்க்கலாம்.
உனது சிரிப்பு
ரொட்டித் துண்டை எடுத்துச் செல்
என்னிடமிருந்து
நீ விரும்பினால் காற்றை எடுத்துச் செல்
ஆனால் உன் சிரிப்பை மட்டும் என்னிடமிருந்து எடுத்துச் செல்லாதே
நீ பறித்த ரோஜாவை எடுத்துச் செல்லாதே
மகிழ்ச்சியில் திடுமெனத் தெறிக்கும் திவலையை
உனக்குள்ளே ஜனிக்கும் வெள்ளி அலையை..
எனது போராட்டம் கடுமையானது
களைத்த கண்களுடன் நான் திரும்பி வருகிறேன்
சில பொழுது, மாறாத இந்த உலகைப் பார்த்தவனாய்
ஆனால் உனது சிரிப்பு வரும்போதே
வானளவு உயர்கின்றது
என்னை வேட்பதாய்
வாழ்வின் எல்லாக் கதவுகளையும் திறப்பதாய் ..
எனதன்பே!
இருளான கணத்தில் உன் சிரிப்பு திறந்து கொள்கிறது
எனது ரத்தம் தெருக் கற்களைக் கறையாக்குவதை நீ பார்க்கிறாய்
ஏனென்றால் உனது சிரிப்பு என் கைகளில் மின்னும் புதிய வாளைப் போல..
வேனிற்காலத்தில் கடலருகே உனது சிரிப்பு நுரையலையாய் எழுகிறது
வசந்தத்தில் நான் காத்திருக்கும் ஒரு நீல மலராக வருகிறது..
சிரி.. இரவில்.. பகலில்..நிலவில்..
சிரி.. வளைந்து செல்லும் தீவுத் தெருக்களில்
சிரி.. உன்னை நேசிக்கும் இந்த பைத்தியக்காரப் பிள்ளையைப் பார்த்து..
ஆனால்.. எனது கண்கள் திறக்கும் போது
பின்பு மூடும் போது
எனது காலடி செல்லும் போது
எனது காலடி திரும்பும் போது
ரொட்டி, காற்று, வெளிச்சம், வசந்தம்
யாவற்றையும் எனக்கு மறுத்து விடு
ஒரு பொழுதும் உனது சிரிப்பை மறுத்து விடாதே
எனில் நான் மரித்து விடுவேன்
ஆங்கிலம் வழியாகத்
தமிழில்
தி சந்தானம்
சிரிப்பைப் பற்றி அருமையான கவிதை. சமீப காலத்தில் இது சற்று கிடைத்தற்கரிய பொருளாக இருக்கிறது. மொழி பெயர்பிற்கு நன்றி
ReplyDeleteநன்றி
DeleteIt's Very tough to translate Neruda . You have done it so well Santhanam .
ReplyDeleteYour Laughter' was published as part of a collection of poetry by Neruda entitled The Captain's Verses, which was published in the year 1972. 'Your laughter' was one of Neruda's late poems. This is why he is able to look back at his life and examine all the struggles he has been through.
Thanks Ram for reading and commenting
DeleteReference about Your Laughter taken from https://beamingnotes.com/2014/11/11/analysis-laughter-pablo-neruda/
ReplyDeleteThank you Ram for the beaming notes. I landed in your laughter in a aimless search
Delete