Skip to main content

காகித மலர்கள்

  குரு தத் மேன்மையான கலைஞன். சினிமாவின் மேல் அவர் தீராத தாகம் கொண்டிருந்தார். சொந்த வாழ்க்கையில் அவர் சந்தித்த பிரச்சினைகள் ஏராளம். கீதா உடன் ஆன அவரது திருமண உறவு முறிந்து போனது. அதனால் அவர் பெரிதும் பாசம் வைத்திருந்த மகளையும் பிரிந்து வாழ நேர்ந்தது. தன்னை மாய்த்துக் கொண்ட இரவு வரை அவர் மகளின் நினைவாகவே இருந்தார்.


குரு தத்தின் படங்கள் வெற்றி அடைந்திருக்கின்றன. படு தோல்வியையும் சந்தித்திருக்கின்றன. அப்படி தோல்வியை சந்தித்த திரைப்படம் காகஸ் கே பூல் (காகித மலர்கள்) குரு தத் மற்றும் வஹீதா ரஹ்மான் முக்கிய வேடம் ஏற்றிருந்தார்கள். 1959 ல் வெளி வந்தது. குரு தத் தயாரித்து இயக்கியிருந்தார். அது ஒரு சினிமாஸ்கோப் படம். 


சுரேஷ் சின்ஹா புகழின் உச்சியில் இருக்கும் சினிமா இயக்குனர். சினிமாவில் அவர் இருப்பது அவருடைய மனைவிக்கும் மனைவியின் பெற்றோருக்கும் பிடிக்கவில்லை.  எனவே மனைவியைப் பிரிந்து இருக்கிறார். இவருடைய சினிமா வாடையே படாமல் ஒரே மகள் ஹாஸ்டலில் தங்கிப் படிக்கிறாள். பெண்ணைச் சந்திக்கச் சென்றால் அங்கே அனுமதி மறுக்கப்படுகிறது.


சாந்தி மருந்துக் கம்பனியில் வேலை பார்க்கும் எளிய பெண்.  யாருமற்ற அனாதை.ஒரு மழை நாளில் இருவரும் சந்திக்க நேருகிறது. குளிரில் நடுங்கும் அவளுக்கு தான் அணிந்திருந்த கோட்டைக் கழற்றித் தருகிறார். சிறிய அறிமுக வாரத்தைகளுக்குப் பின் டாக்ஸியை அழைத்துச் சென்று விடுகிறார் சுரேஷ். சாந்தி கோட்டைத் திருப்பித் தருவதற்காக சுரேஷ் இருக்கும் சினிமா ஸ்டூடியோவிற்கு வருகிறாள்.  படப்பிடிப்புத் தளம் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. பதில் சொல்வார் யாரும் இல்லை. திடீரென்று சுரேஷ் வருகிறார் சாந்தி மழை நாளையும் மரத்தடியையும் நினைவு படுத்த முபலுகிறாள். அவர் ஏதோ சிந்தனையில் இவளைக் கவனியாது கடந்து சென்று ஒரு சிறு கதவைத் திறந்து மறைகிறார். இவள் சிறிது தாமதிக்கிறாள். பின்பு அவர் சென்ற கதவைத் திறக்கிறாள். அது ஒரு தெருவைப் போலத் தெரிகிறது. அந்தத் தெருவில் அவள் நடக்கிறாள். ஒளி வெள்ளம் எங்கும் பாய்ந்து கண்களைக் கூச வைக்கிறது. எதிரே ஓரு கிரேன் உயர்ந்து நிற்கிறது. காமிராவின்  கண் அவளையே உற்று நோக்குகிறது.மருண்டு போனவளாக அவள் பின் வாங்குகிறாள். படப்பிடிப்பில் குறுக்கிட்டதற்காக பல குரல்கள் அவளை வசைபாடுகின்றன.

அப்போது கிரேன் மீது இயக்குனர் சுரேஷ் அமர்ந்திருப்பதைப் பார்க்கிறாள். அவரிடம் தான் ஓவர்கோட்டைத் திருப்பித் தர வந்திருப்பதாகக் கூறுகிறாள். சுரேஷ் அவளைக் காத்திருக்கச் சொல்கிறார். உதவியாளரிடம் அவள் அமருவதற்கு நாற்காலி தரச் சொல்கிறார்.


சாந்தி கண்களில் மருட்சியுடன் பின் வாங்கும் காட்சி படச் சுருளில் பதிவாகி விடுகிறது. சுரேஷ் சின்ஹா ரஷ் பார்க்கும் போது அந்த முகத்தில் தெரியும் கள்ளமின்மையால் கவரப்படுகிறார்.  உடனே இவளை அழைத்து வாருங்கள். எனது அடுத்த படத்தின் நாயகி இவள் தான் என்று உரக்கக் கூவுகிறார். அனைவரும் வியந்து போகின்றனர். இயக்குநர் அப்படி எல்லாம் எளிதில் உணர்ச்சியைக் காட்டுபவரும் அல்ல. உரக்கக் கூவுபவரும் அல்ல. சாந்தி வருகிறாள். சினிமா உலகம் மிரள வைப்பதாக இருக்கிறது. நடிக்கத் தயங்குகிறாள். சுரேஷ் சின்ஹா நம்பிக்கை தருகிறார். தன்னை நம்புவதைக் காட்டிலும் தான் பெரிதும் நம்பும் ஒருவராக சின்ஹா இருப்பதை உணருகிறாள். ஒரு அழகான உறவு அவர்களிடையே மலர்கிறது.  படம் வளர்கிறது. இருவரையும் இணைத்து வதந்திகளும் பரவுகிறது. வெளிப்புறப் படப்பிடிப்பிற்காக சுரேஷும் சாந்தியும் ஒரே காரில் செல்கிறார்கள். கார் விபத்துக்குள்ளாகிறது. சுரேஷுக்கு காயம் ஏற்படுகிறது. சாந்தி காயமின்றித் தப்பி விடுகிறாள். 

சுரேஷ் சின்ஹா குணமடைந்து ஸ்டூடியோவிற்கு வருகிறார். சீக்கிரமே வருவது அவர் பழக்கம். அவருக்கு முன்னமே சாந்தி வந்திருக்கிறாள். யாரும் இல்லாத படப்பிடிப்புத் தளத்தில் ஸ்வெட்டர் பின்னிக் கொண்டிருக்கிறாள். இது யாருக்காக என்று கேட்கிறார். என்னைப் போலவே தனிமை கொண்ட ஒருவருக்காக என்கிறாள். சின்ஹாவுக்கு முகம் மாறுகிறது. நான் மணமானவன் தெரியுமா என்கிறார். தெரியும் என்று பதில் வருகிறது. நான் குறிப்பிடப் போகும் பாடல் காட்சி துவங்குகிறது. பாடியவர் கீதா தத். இசை எஸ்.டி

பர்மன். பாடல் வரிகள் கைஃபி ஆஸ்மியுடையது. பாடல் வரிகளைத் தமிழில் மொழி பெயர்த்து கீழே தந்திருக்கிறேன்.





காலம் செய்து விட்டது

ஒரு இனிமையான கொடுமையை

நீ நீயாக இல்லை

நான் நானாக இல்லை


நமது இதயம் அமைதி இழந்தது

ஒருவரை ஒருவர் காணத் துடித்தது

ஏதோ நாம் பிரியாமலே இருந்ததைப் போல

நீ உன் வழியை இழந்தாய் 

நானும் என் வழியை இழந்தேன்

சிறிது காலம் நாம் சேர்ந்து

நடந்து இருந்தாலும்


நான் எங்கே செல்வேன்

யோசிக்கக் கூட வில்லை

செல்லத துவங்கினேன் ஆனால்

பாதை தெரியவில்லை


நான் என்ன தேடுகிறேன்

ஓன்றும் புரியவில்லை

எனது இதயத்தைத் தடுக்க முடியவில்லை 

கனவுகளின் இழையை  நெய்வதிலிருந்து


மென்மையான இசையும் குரலும் பாடல் வரிகளும் மனதைத் தொடும் விதமாக அமைந்திருக்கிறது.


மேலே திரைப்படத்தின் கதையைத் தொடரலாம். சாந்தியின் முதல் படமே பெரும் வெற்றியைப் பெறுகிறது. சின்ஹாவின் மகள் சாந்தியைச் சந்தித்துக் கடிந்து பேசுகிறாள்.  விளைவாக சாந்தி ஒரே படத்தோடு திரை உலகை விட்டு விலக முடிவு செப்கிறாள். காரணமான தன் மகளை சின்ஹா கடிந்து கொள்கிறார். சாந்தியைச் சந்திக்கிறார்.. அப்போது இப்படி ஒரு உரையாடல் அவர்களுக்கு இடையே நடக்கிறது.


சுரேஷ்:  நீ போகிறாயா?

சாந்தி:   ஆமாம். உங்களிடம் சொல்லிக் 

கொண்டுதான் போக இருந்தேன்

சுரேஷ்: நீ ஏன் போகிறாய் என்று எனக்குத் தெரியும்

சாந்தி: உங்களுக்குப் புரியும் என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும்

சுரேஷ்: நாம் எப்போதும் ஒருவரை ஓருவர் புரிந்து கொண்டவர்கள் தானே?

சாந்தி: ஆமாம்  எப்பொழுதும்

சுரேஷ்: ஏன் மனிதர்கள் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்கிறார்கள்? ஏன்?....

இது இப்படி நடந்து இருக்க வேண்டாம். இப்படி நடக்காமல் இருந்தால், எல்லாவற்றையும் விட்டு விட்டு நீ போக நேர்ந்திருக்காது

சாந்தி: நீங்கள் யாவற்றிலிருந்தும் தப்பி விட முடியும். எனக்கு அத்தனை அதிர்ஷ்டம் வாய்க்குமா என்ன?

பொறுங்கள்..


சாந்தி  தான் பின்னிய ஸ்வெட்டரை அவரிடம் தருகிறாள். அவரை விட்டு விலகிச் சென்று விடுகிறாள் தொலைவாக. சின்ஹா தனது மகளைத் தன்னோடு வைத்துக் கொள்ள நினைக்கிறார். வழக்கில் தீர்ப்பு அலருக்குச் சாதகமாக இல்லை. தனிமை அவரை வந்து சூழ்கிறது. தீராத குடி நோயாளி ஆகிவிடுகிறார். அவருடைய படங்கள் தொடர்ந்து தோல்வியைச் சந்திக்கின்றன புகழின் உச்சத்திலிருந்து சரிகிறார். வீடு செல்வம் யாவற்றையும் இழக்கிறார்.


திரைப் படத்தின் இறுதியில் ஒரு பாடல் பின்னணிக் குரலாக வரும். அந்த வரிகளைச் சொல்லி நிறைவு செய்கிறேன்.


வண்டே! நீ பறந்து சென்று விடு விரைவாக

நீ உண்பதற்கு தேன் ஒன்றும் இங்கு இல்லை

இங்கே இந்தத் தோட்டத்தில் காகிதப் பூக்கள் தான் மலர்கிறது 




தி சந்தானம் 






Comments

  1. We don't have someone like guru Datt.,but kanavu tholirchalai could be a good film about cinema and the people there ...

    ReplyDelete
  2. Guru Dutt had a keen sense and greater grasp of cinema. He had a very good cinematographer in :V K Murthy

    ReplyDelete
  3. More than Kanavu thozhirchalai, Karaondha nizhalgal would have made a much more serious film

    ReplyDelete
    Replies
    1. Yes you are right.
      Since I have read kt recently, it came to my mind.

      Delete
    2. Yes you are right, since I have read kt recently it came to my mind

      Delete
  4. குருதத்தின் பங்கு ஹிந்தி சினிமா வில் முக்கியமானது.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் மதி. அவருடைய மறைவு அகாலமானது

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...