Skip to main content

புடம் இட்ட தங்கம்

 துக்காராம் மராத்தியில் பாடல்கள் எழுதினார். கனிந்த பக்தியில் பிறந்த பாடல்கள் அவை. அபங்கு (Abhang) என்ற வகையைச் சேர்ந்த பாடல்கள். இவ்வகைப் பாடல்களை கர்நாடக இசைப் பாடகி அருணா சாய்ராம் பாடக் கேட்டிருக்கிறேன். 


வாழ்க்கைத் துயரங்கள் துக்காராமை விரட்டியது. விட்டலனின் நினைவில் அவர் கணத்துக்குக் கணம் மீண்டு எழுபவராக இருந்தார். தன்னை மறந்த லயிப்பில் பாடல்கள் பிறந்த வண்ணம் இருந்தன. ஊரும் உறவும் அவரைப் புரிந்தால் தான் என்ன? புரியாமல் போனால் தான் என்ன? எளிய வரிகள் சிறிய அலைகள் போல எழுகின்றன. பெரிய பாறை போன்ற த்வைத அத்வைத சிந்தனைகளின்  மேல் மெல்ல மோதுகின்றன. தனது தன்மையில் நிற்கின்றன. இந்தப் பாடலைப் பாருங்கள்.


தண்ணீர் தன்னையே பருக முடியுமா?

மரம் தனது கனிபைத் தானே ருசிக்குமா?

கடவுளை வணங்குபவர் அவரிடமிருந்து

வேறுபட்டே இருக்க முடியும்


அப்படி இருந்தால் தான்

அவரது ஆனந்தமான அன்பைத்

தெரிந்து கொள்ள முடியும்


கடவுளும் அவனும் ஒன்று

என்று சொல்வானே யானால்

அந்த ஆனந்தமும் அன்பும்

மறைந்து விடும்

உடனடியாக


கவிதையைப் பற்றி மிகவும் அழகாக இப்படிச் சொல்கிறார்.


To arrange words in some order

Is not the same thing

The inner poise that is poetry


The truth of poetry

Is the truth of being

It is an experience of truth


No ornament survives

A crucible

Fire reveals only

The molten gold


Tuka says

We are here to reveal

We do not waste words


தமிழில்


வார்த்தைகளை ஒரு ஒழுங்கில்

அமைத்து விடுவது என்பது

உள்ளே இருக்கும் சமநிலை

என்பதான கவிதை ஆகாது 


கவிதையின் உண்மை என்பது

இருத்தலின் உண்மை

எந்த ஆபரணமும்

கலத்திலிருந்து 

தப்பிப் பிழைக்க முடியாது 

நெருப்புதான் உருக்கிய தங்கத்தை

வெளிப்படுத்துகிறது.


துக்கா சொல்கிறான்

நாம் இங்கே வெளிப்படுத்துவதற்கே 

இருக்கிறோம்

நாம் வார்த்தைகளை வீணடிப்பது இல்லை



மெய் தானே?


தி சந்தானம் 



Comments

  1. "Education is the manifestation of the perfection already existing in mind"Swami Vivekananda -Read from the book in your shelf in P 13 Meenakshi Road.

    ReplyDelete
  2. Manifestation of the perfection already in man. You remember that. Great Great

    ReplyDelete
  3. Ignorance is bliss - Referred to unpleasantness around us - through which one gta escalated., Thanks to Thukkaram 🙏🏻

    ReplyDelete
  4. Thanks Suresh for reading and recording your comments

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...