துக்காராம் மராத்தியில் பாடல்கள் எழுதினார். கனிந்த பக்தியில் பிறந்த பாடல்கள் அவை. அபங்கு (Abhang) என்ற வகையைச் சேர்ந்த பாடல்கள். இவ்வகைப் பாடல்களை கர்நாடக இசைப் பாடகி அருணா சாய்ராம் பாடக் கேட்டிருக்கிறேன்.
வாழ்க்கைத் துயரங்கள் துக்காராமை விரட்டியது. விட்டலனின் நினைவில் அவர் கணத்துக்குக் கணம் மீண்டு எழுபவராக இருந்தார். தன்னை மறந்த லயிப்பில் பாடல்கள் பிறந்த வண்ணம் இருந்தன. ஊரும் உறவும் அவரைப் புரிந்தால் தான் என்ன? புரியாமல் போனால் தான் என்ன? எளிய வரிகள் சிறிய அலைகள் போல எழுகின்றன. பெரிய பாறை போன்ற த்வைத அத்வைத சிந்தனைகளின் மேல் மெல்ல மோதுகின்றன. தனது தன்மையில் நிற்கின்றன. இந்தப் பாடலைப் பாருங்கள்.
தண்ணீர் தன்னையே பருக முடியுமா?
மரம் தனது கனிபைத் தானே ருசிக்குமா?
கடவுளை வணங்குபவர் அவரிடமிருந்து
வேறுபட்டே இருக்க முடியும்
அப்படி இருந்தால் தான்
அவரது ஆனந்தமான அன்பைத்
தெரிந்து கொள்ள முடியும்
கடவுளும் அவனும் ஒன்று
என்று சொல்வானே யானால்
அந்த ஆனந்தமும் அன்பும்
மறைந்து விடும்
உடனடியாக
கவிதையைப் பற்றி மிகவும் அழகாக இப்படிச் சொல்கிறார்.
To arrange words in some order
Is not the same thing
The inner poise that is poetry
The truth of poetry
Is the truth of being
It is an experience of truth
No ornament survives
A crucible
Fire reveals only
The molten gold
Tuka says
We are here to reveal
We do not waste words
தமிழில்
வார்த்தைகளை ஒரு ஒழுங்கில்
அமைத்து விடுவது என்பது
உள்ளே இருக்கும் சமநிலை
என்பதான கவிதை ஆகாது
கவிதையின் உண்மை என்பது
இருத்தலின் உண்மை
எந்த ஆபரணமும்
கலத்திலிருந்து
தப்பிப் பிழைக்க முடியாது
நெருப்புதான் உருக்கிய தங்கத்தை
வெளிப்படுத்துகிறது.
துக்கா சொல்கிறான்
நாம் இங்கே வெளிப்படுத்துவதற்கே
இருக்கிறோம்
நாம் வார்த்தைகளை வீணடிப்பது இல்லை
மெய் தானே?
தி சந்தானம்
.jpeg)
"Education is the manifestation of the perfection already existing in mind"Swami Vivekananda -Read from the book in your shelf in P 13 Meenakshi Road.
ReplyDeleteManifestation of the perfection already in man. You remember that. Great Great
ReplyDeleteIgnorance is bliss - Referred to unpleasantness around us - through which one gta escalated., Thanks to Thukkaram 🙏🏻
ReplyDeleteThanks Suresh for reading and recording your comments
ReplyDelete