Skip to main content

காலையும் நீயே

 அந்தப் பாடலை சிறு வயதிலேயே கேட்டிருக்கிறேன். வானொலிப் பெட்டியிலிருந்து மெல்லக் கசிந்து வரும் அந்தப் பாடல். ஒரு மென்மையான ஆலாபனை சந்தனத்தை இழைத்தது போல. அது என்ன குரல்! என்னமாய் மனதை வருடுகிறது! பின்பு ஜல். ஜல்..ஜல்..ஜல்..ஜல்ஜல்.. என்று சலங்கையின் ஓசை. காலையும் நீயே மாலையும் நீயே என்று ஒரு மென்குரல் மனதை மயக்கும். பின்பு ஒரு தேன் குரல் பதில் போல மிழற்றும்.

ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு பருவத்திலும் இந்தப் பாடலைக் காது கொடுத்து கேட்பது ஒரு புது அனுபவம் தான்.


மேலே சொன்ன பாடல் தேன் நிலவு என்ற திரைப்படத்தில் வரும். 1962 ம் வருடம் இந்தத் திரைப்படம் வெளிவந்திருக்கிறது. ஸ்ரீதர் இயக்கம். ஏ எம். ராஜா இசையமைத்து பாடியிருந்தார். உடன் பாடியவர் எஸ்.ஜானகி.  பல வருடங்கள் கழித்து மறு முறை வெளியான போது இந்தப் படத்தைப் பார்த்தேன்.  அப்போது தான் நான் கல்லூரிப் படிப்பை முடித்திருந்தேன். .பாடல் காட்சியில் வைஜயந்தி மாலா ஆடுவார். நாட்டியத்தில் நல்ல தேர்ச்சி பெற்றவர். பாலில் விழுந்த பழங்களைப் போலே என்று ஒரு வரி இந்தப் பாடலில் வரும். 

பாலைக் கறப்பது போல் அபிநயித்து ஒரு குவளையில் நிரப்புவதைப் போல் நிரப்புவார். கையில் இல்லாத ஒரு பழத்தை குவளையில் தொப்பென்று போடுவார்.  பின்பு அதை ஜெமினி கணேசனிடம் தருவார். நிஜமாகவே பழம் நழுவிப் பாலில் விழும். பாருங்கள்.





அப்போது நான் ஒன்பது அல்லது பத்தாவது வகுப்பில் படித்துக் கொண்டிருப்பேன். எங்கள் குடியிருப்புப் பகுதியில் ஒரு கோவில் இருந்தது. அந்தக் கோவிலுக்கு கர்நாடக இசைப் பாடகர் வந்திருந்தார்.அவர் டி.என். சேஷகோபாலன். இளைஞர்.அடர்த்தியான புருவங்கள். வில்லினை ஒத்த என்ற வார்த்தைக்குப் பொருள் புரிந்தது. தாமரைக் கண்கள். லயித்துப் பாடும் போது மூடுவதும் சில போது திறந்தும் இருந்தது.  மூடிய இமைகள் பெரிதாக இருந்தது. ஜிப்பா அணிந்திருந்தார். திண்மையான தோள்கள்.  பெண்கள் கூட்டம் சாடி முன்னேறி இருந்தது. பண்டுரீதி கோலோ என்ற பாடலைப் பாடியதாக ஞாபகம். ஸ்வரங்களை லாவகமாக கையாண்டார். நல்ல சாரீரம். அதற்குப் பிறகு அவரைக் கேட்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. வெகு நாட்களுக்குப் பின் அவரது ராக ஆலாபனையைக் கேட்க வாய்த்தது. அற்புதம். நீங்களும் கேளுங்களேன்.





எண்பதுகளில் அலுவலக நண்பர்கள் எல்லோரும் சேர்ந்து போய் ஒரு திரைப்படம் பார்த்தோம். அது தங்க மகன்.

எம்ஜியாரை நாயகனாக வைத்தே படம் தயாரிக்கும் சத்யா மூவீஸ் நிறுவனத்தார் ரஜினிகாந்தை நாயகனாகக் கொண்டு இந்தப் படத்தை எடுத்திருந்தார்கள். அதில் ஒரு பாடல். ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை என்று துவங்கும். ராத்திரியிலாவது தாமரையாவது பூப்பதாவது என்று சிலர் கொந்தளித்தார்கள். பாடலை எழுதியவர் தமிழாசிரியர். அவர் சொன்னார் அது இல்பொருள் உவமை அணி என்று. எல்லோரும் வாயடைத்துப் போனார்கள். நல்ல பாடல். சிறப்பான இசை. 


நான் இடையில் சொன்ன கர்நாடக இசைப் பாடகர் பாடிய ராகத்தில் தான் இரண்டு திரை இசைப் பாடல்களும் அமைந்திருக்கிறது. அந்த ராகத்தின் பெயர் ஹம்சாநந்தி.





Comments

  1. காலையும் நீயே, பண்டுரீதீ, ராத்திரியில் பூத்திருக்கும் மூன்று பாடல்களுமே மிக மிக அருமை. இதில் ஷேஷகோபாலன் நன்றாக பாடியிருக்கிறார். மேலும் இதே பாட்டை செம்பை வைத்யநாத பாகவதர் பாடியிருப்பார்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராம். ஆமாம் அந்தப் பாடலை செம்பையும் யேசுதாஸும் இணைந்து பாடியிருப்பார்கள்

      Delete
  2. அது வெங்கலக்கடையில் யானை புகுந்தது போன்ற குரல். அதையும் கேட்டு அநுபவிக்கலாம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...