Skip to main content

அப்பா

  அந்தக் குழந்தை கூடையில் படுத்திருந்தது. வெள்ளை நிறக் குல்லாய் அணிந்திருந்தது. கூடை புதிதாக வண்ணம் தீட்டப்பட்டு பனி நீல ரிப்பன்களும் நீல மெத்தையும் கொண்டு விளங்கியது. மூன்று குட்டிச் சகோதரிகள் மற்றும் அப்போதுதான் படுக்கையில் எழுந்து அமர்ந்திருந்த அம்மா, பாட்டி எல்லோரும் குழந்தையைச் சுற்றி நின்று கொண்டிருந்தார்கள் அது விழிப்பதையும் மூடிய பிஞ்சுக் கைகளை உயர்த்தி வாயில் வைத்துக் கொள்வதையும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். குழந்தை புன்னகைக்க வில்லை; சிரிக்க வில்லை. அவ்வப்போது கண்களைச் சிமிட்டியது. சிறுமிகளில் ஒருத்தி மோவாயை நிமிண்டும் போது உதடுகள் வழியாக நாக்கை முன்னும் பின்னும் அசைத்துக் கொண்டிருந்தது.


அப்பா சமையலறையில் இருந்தார். சிறுமிகள் குழந்தையுடன் விளையாடுவது அவருக்குக் கேட்டது.

"பாப்பாவுக்கு யாரைப் பிடிக்கும்?"

பிலிஸ் குழந்தையின் மோவாயை நிமிண்டியபடி கேட்டாள். பிலிஸ் தொடர்ந்தாள். "அவனுக்கு எல்லோரையும் பிடிக்கும். ஆனால் நிஜத்தில் அப்பாவைத் தான் பிடிக்கும். அப்பாவும் ஒரு பையன் இல்லையா?"


பாட்டி படுக்கையின் விளிம்பில் இருந்தபடி சொன்னாள்"அவனுடைய சின்னக் கைகளையும் சதையையும் பாருங்கள். எத்தனை குண்டாக இருக்கிறது! அந்தச் சின்ன விரல்கள் அம்மா மாதிரிதான்"


அழகு இல்ல? என் சின்னக் குட்டி" அம்மா குனிந்து குழந்தையின் முன் நெற்றியில் முத்தமிட்டாள்.


"ஆனால் அவன் யாரை மாதிரி இருக்கிறான்?" அலீஸ் கத்தினாள்.

எல்லோரும் நகரந்து கூடையை மிக நெருங்கிச் சுற்றி நின்றார்கள். யாரைப் போல் இருக்கிறான் என்று பார்க்க.

'அவன் கண் ரொம்ப அழகு" கரோல் சொன்னாள். "அவனுக்குத் தாத்தா போல உதடு" பாட்டி சொன்னாள்.

எனக்கு என்னவோ அப்படித் தோணல" அம்மா சொன்னாள்.


:மூக்கைப் பாருங்க.. மூக்கைப் பாருங்க" அலீஸ் கத்தினாள்.

"மூக்குக்கு என்ன?" அம்மா கேட்டாள்

மூக்கு யார் மாதிரியோ இருக்கு" சிறுமி சொன்னாள். "இல்ல.. எனக்குத் தெரியல. அப்படி ஒண்ணும் இல்ல" அம்மா சொன்னாள்.

"அந்த உதடுகள்.." பாட்டி முணுமுணுத்தாள். "அந்தச் சிறிய விரல்கள்.." பாட்டி மூடிய கைகளைப் பிரித்து குழந்தையின் விரல்களை விரித்தாள்.

"குழந்தை யாரை மாதிரி இருக்கான்?"

"யார் மாதிரியும் இல்ல" பிலிஸ் சொன்னாள். எல்லோரும் குழந்தையை இன்னும் நெருங்கினார்கள்.  கரோல் சொன்னாள். "எனக்குத் தெரிஞ்சு போச்சு. தெரிஞ்சு போச்சு. அப்பா மாதிரி இருக்கான்." எல்லோரும் குழந்தையை நன்கு உற்றுப் பார்த்தார்கள்.

"ஆனா அப்பா யாரை மாதிரி இருக்கார்?" பிலிஸ் கேட்டாள்.

"அப்பா யாரை மாதிரி இருக்கார்" அலீஸ் அப்படியே திரும்பச் சொன்னாள்.


எல்லோரும் சமையலறைப் பக்கம் பார்த்தார்கள். அப்பா அவர்களுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தார்.


"யாரை மாதிரியும் இல்ல.." பிலிஸ் இப்படிச் சொல்லி விட்டு லேசாக அழ ஆரம்பித்தாள்.


"உஷ்" என்று பாட்டி சொல்லி விட்டு வெளியே பார்த்தாள். பின்பு குழந்தையைப் பார்த்தாள்.


"அப்பா யாரை மாதிரியும் இல்ல.." அலீஸ் சொன்னாள்.


"ஆனா அவர் யாரை மாதிரியாவது இருக்கணுமே"  பிலிஸ் கண்களை ரிப்பனால் துடைத்தபடி சொன்னாள்.


பாட்டியைத் தவிர அனைவரும் மேசையருகே அமர்ந்திருந்த அப்பாவைப் பார்த்தார்கள்.


அவர் நாற்காலியைத் திருப்பி அமர்ந்தார். முகம் வெளிறியிருந்தது. அதில் எந்த உணர்ச்சியும் இல்லை.




மூலக்கதை     ரேமண்ட் கார்வர் 

தமிழில்            தி சந்தானம் 















Comments

  1. கதை முடிவு சூப்பர். அப்பா யார் மாதிரியும் இல்லை. முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. ஏனென்றால் அவர் இது எல்லாவற்றையும் தாண்டி வேறு எதையோ ஒன்றை யோசித்துக் கொண்டிருப்பார்.

    ReplyDelete
  2. பல விதமாக யோசிக்கவும் விளங்கிக் கொள்ளவும் முடியும்

    ReplyDelete
  3. சிறுகதை இலக்கணத்துக்கு ஏற்ற சிறுகதை.மொழிபெயர்ப்பும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மதி சிறுகதை மொழிபெயர்ப்பு முதல் முயற்சி

      Delete
  4. Excellent 👏👏👍🏻

    ReplyDelete
  5. சிறப்பான மொழிபெயர்ப்பு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...