Skip to main content

நான்

 


நான் - மகாகவி பாரதியார்


வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்,

மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;

கானில் வளரும் மரமெலாம் நான்,

காற்றும் புனலும் கடலுமே நான்


விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,

வெட்ட வெளியின் விரிவெலாம் நான்;

மண்ணில்கிடக்கும் புழுவெலாம் நான்,

வாரியினுள் உயிரெலாம் நான்,


கம்பனிசைத்த கவியெலாம் நான்,

காருகர் தீட்டும் உரவெலாம் நான்;

இம்பர் வியக்கின்ற மாட கூடம்

எழில்நகர் கோபுரம் யாவுமே நான்,


இன்னிசை மாதரிசையுளேன் நான்,

இன்பத்திரள்கள் அனைத்துமே நான்;

புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான்,

பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்.


மந்திரங்கோடி இயக்குவோன் நான்,

இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்;

தந்திரங் கோடி சமைத்துளோன் நான்.

சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்.


அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்,

அவை பிழையாமே சுழற்றுவோன் நான்,

கண்டல் சக்திக் கணமெலாம் நான்

காரணமாகிக் கதித்துளோன் நான்.


நானெனும் பொய்யை நடத்துவோன் நான்,

ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்;

ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்

அறிவாய் விளங்குமுதற்சோதி நான்."







Comments

  1. பாரதியார் கவிதை நான் படித்தேன். ரசித்தேன்.

    ReplyDelete
  2. பாரதி கவிதை நாம் அறிந்ததே. இதனுள் நீ என்ன சொல்ல வந்தாய். அதை ஏன் எழுதவில்லை.

    ReplyDelete
    Replies
    1. பாரதியை அவர்.பிறந்த தினத்தில் இந்தப் பாடல் மூலம் நினைவு கூரந்தோம்

      Delete
    2. எல்லாமாகிக் கலந்து நிறைந்த பின் ஏழமை உண்டோடா? மனமே!
      பொல்லாப் புழுவினைக் கொல்ல நினைத்த பின் புத்தி மயக்கமுண்டோ?

      Delete
  3. வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்,
    பூமியில் முளைக்கும் புல்லெலாம் நான்

    மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
    விண்ணில் காணும் நட்சத்திரம் நான்

    கானில் வளரும் மரமெலாம் நான்,
    மரம் வளர உரமாய் நான்

    காற்றும் புனலும் கடலுமே நான்
    மலையும் மண்ணும் விண்ணும் நான்

    சும்மா கலாட்டா. வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிடாத.

    ReplyDelete
    Replies
    1. உள்ள தெலாமோர் உயிரென்று தேர்ந்தபின் உள்ளங் குலைவ துண்டோ?-மனமே! வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின் வேதனை யுண்டோடா?

      Delete
  4. கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்* கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்*
    கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்* கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்*
    கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்* இந்த நம்மாழ்வார் பாசுரமும் இங்கே நினைவு கூடத் தக்கது

    ReplyDelete
  5. இதற்கு முன்னர் குறித்தது எல்லாம் பாரதியின் வரிகள். மேன்மைப் படுவாய் மனமே என்று சொல்ல வந்தால் அதுவும் பாரதி வரிதான்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...