நான் - மகாகவி பாரதியார்
வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்,
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
கானில் வளரும் மரமெலாம் நான்,
காற்றும் புனலும் கடலுமே நான்
விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,
வெட்ட வெளியின் விரிவெலாம் நான்;
மண்ணில்கிடக்கும் புழுவெலாம் நான்,
வாரியினுள் உயிரெலாம் நான்,
கம்பனிசைத்த கவியெலாம் நான்,
காருகர் தீட்டும் உரவெலாம் நான்;
இம்பர் வியக்கின்ற மாட கூடம்
எழில்நகர் கோபுரம் யாவுமே நான்,
இன்னிசை மாதரிசையுளேன் நான்,
இன்பத்திரள்கள் அனைத்துமே நான்;
புன்னிலை மாந்தர்தம் பொய்யெலாம் நான்,
பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான்.
மந்திரங்கோடி இயக்குவோன் நான்,
இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்;
தந்திரங் கோடி சமைத்துளோன் நான்.
சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான்.
அண்டங்கள் யாவையும் ஆக்கினோன் நான்,
அவை பிழையாமே சுழற்றுவோன் நான்,
கண்டல் சக்திக் கணமெலாம் நான்
காரணமாகிக் கதித்துளோன் நான்.
நானெனும் பொய்யை நடத்துவோன் நான்,
ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்;
ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
அறிவாய் விளங்குமுதற்சோதி நான்."

பாரதியார் கவிதை நான் படித்தேன். ரசித்தேன்.
ReplyDeleteநன்றி
Deleteபாரதி கவிதை நாம் அறிந்ததே. இதனுள் நீ என்ன சொல்ல வந்தாய். அதை ஏன் எழுதவில்லை.
ReplyDeleteபாரதியை அவர்.பிறந்த தினத்தில் இந்தப் பாடல் மூலம் நினைவு கூரந்தோம்
Deleteஎல்லாமாகிக் கலந்து நிறைந்த பின் ஏழமை உண்டோடா? மனமே!
Deleteபொல்லாப் புழுவினைக் கொல்ல நினைத்த பின் புத்தி மயக்கமுண்டோ?
வானில் பறக்கின்ற புள்ளெலாம் நான்,
ReplyDeleteபூமியில் முளைக்கும் புல்லெலாம் நான்
மண்ணில் திரியும் விலங்கெலாம் நான்;
விண்ணில் காணும் நட்சத்திரம் நான்
கானில் வளரும் மரமெலாம் நான்,
மரம் வளர உரமாய் நான்
காற்றும் புனலும் கடலுமே நான்
மலையும் மண்ணும் விண்ணும் நான்
சும்மா கலாட்டா. வீட்டுக்கு ஆட்டோ அனுப்பிடாத.
உள்ள தெலாமோர் உயிரென்று தேர்ந்தபின் உள்ளங் குலைவ துண்டோ?-மனமே! வெள்ள மெனப்பொழி தண்ணரு ளாழ்ந்தபின் வேதனை யுண்டோடா?
Deleteகடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும்* கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும்*
ReplyDeleteகடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்* கடல் ஞாலம் கீண்டேனும் யானே என்னும்*
கடல் ஞாலம் உண்டேனும் யானே என்னும்* இந்த நம்மாழ்வார் பாசுரமும் இங்கே நினைவு கூடத் தக்கது
இதற்கு முன்னர் குறித்தது எல்லாம் பாரதியின் வரிகள். மேன்மைப் படுவாய் மனமே என்று சொல்ல வந்தால் அதுவும் பாரதி வரிதான்
ReplyDelete