பிள்ளைப் பருவத்திலே என்னைப் பேண வந்த ஒரு குரல். இப்படித்தான் வாணியின் குரலைச் சொல்ல வேண்டும். குரல் இனிமையானது. அழுத்தம் கூடியது. தெளிவான உச்சரிப்பு. அது எந்த மொழியாக இருந்தாலும். நல்ல ஞானம்.பயிற்சி. ஹிந்துஸ்தானி இசையும் அதில் அடக்கம். எல்லா விதமான பாடல்களையும் சரளமாக மிகைத் தன்மை இன்றிப் பாடிச் சென்றிருக்கிறார். பாடல் வரிகளின் பொருள் உணர்ந்து பாடிச் சென்றிருக்கிறார். அது தனியாகப் பாடினாலும் இணைந்து பாடினாலும்.
வாணி தனியாகப் பாடிய பல பாடல்கள் எனக்குப் பிடிக்கும்.
ஆகாயம் மழை பொழிஞ்சா
மண்ணுலகில் இன்று தேவன்
நாதம் என்னும் கோவிலிலே
நீராட நேரம் நல்ல நேரம்
என் உள்ளில் எங்கோ
என் கல்யாண வைபோகம்
இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
பெண்மை தன் நிலையைப் பெரிதும் பேசுவதில்லை. அது உள்ளத்தில் எங்கோ கிடக்கிறது. ஆற்றாமையாக, தேடலாக,கொண்ட தனிமையாக தவிப்பாக, இப்படி எல்லாமும் உள்ளே இறுகிக் கிடக்கிறது. தண்ணென்ற நீரில் கிடக்கும் கல்லைப் போல. மற்றவர்கள் மீது காட்டும் பரிவும் சின்னச் சின்ன அக்கறைகளும் மெல்லச் சுரந்தபடியே இருக்கிறது.
வாணியின் குரல் பெண்மையின் உணர்வுகளை மெல்ல மெல்ல நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கிறது. காற்றில் அலைந்தபடியே இருக்கிறது அந்தக் குரல்.
சூல் கொண்ட பெண்மையின் குரல். தன்னை மறந்து தான் யாராகவோ மாறி விட்டதைப் சொல்லும் குரல். என் கல்யாணம் உன்னோடு என்று மகிழும் குரல். மல்லிகை மலர் சூடி கணவன் மார்பில் சாய்ந்து மயங்கும் குரல். சம்சாரச் சுழலில் சிக்கி தனது தனிப்பட்ட திறமைகள் அலைப்புண்டு மறைந்து இருக்க திடுமென ஒரு நாள் அதைக் கண்டு கொண்டு நானா பாடுவது என்று வியப்பு எய்தும் குரல். அன்பு மேகத்தைத் தன் அருகில் அழைக்கும் குரல்.
ஆசையில் விழுந்து தடுமாறி ஏன் இந்த ஏங்கும் கீதம் என்று தவிக்கும் குரல்.
சொல்லாமல் நெஞ்சள்ளிப் போகும் குரல். பேதலிக்கும் சுகம் தரும் குரல்.
எங்கிருந்தோ வந்த குரல்.
வாணியின் சில பாடல்கள்
அருமையான பாடல்கள். காதுக்கு இனியாக அதே சமயத்தில் அர்த்தம் பொதிந்தவை. வாணி ஜெயராமின் எல்லாப் பாடல்களுமே அருமையானவை தான். நல்ல குரல் வளம். பதிவுக்கு நன்றி.
ReplyDeleteநேற்று y g மகேந்திரன் வாணி ஜெயராமைப் பற்றி பேட்டி பார்த்தேன். அவர்கள் 50 ஆண்டு கால family friend என்று சொல்லி பல செய்திகளை பகிர்ந்து கொண்டார். ரசிக்கத்தக்கதாக இருந்த து.
ReplyDeleteநான் அந்தப் பேட்டியை இப்போது தான் பாரத்தேன்
Deleteசிவாஜி மறைந்த போது ஒய் ஜி எம் தம்பதி கொடுத்த பேட்டிய பாத்துடாதீங்க அண்ணாஸ்..
Deleteஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்... அருமையான அஞ்சலி பதிவு.
ReplyDeleteநன்றி ஜெயந்தி
DeleteWhat a tribute 👏
ReplyDeleteThank you
Delete