Skip to main content

என் உள்ளில் எங்கோ

 பிள்ளைப் பருவத்திலே என்னைப் பேண வந்த ஒரு குரல். இப்படித்தான் வாணியின் குரலைச் சொல்ல வேண்டும். குரல் இனிமையானது. அழுத்தம் கூடியது. தெளிவான உச்சரிப்பு. அது எந்த மொழியாக இருந்தாலும். நல்ல ஞானம்.பயிற்சி. ஹிந்துஸ்தானி இசையும் அதில் அடக்கம். எல்லா விதமான பாடல்களையும் சரளமாக மிகைத் தன்மை இன்றிப் பாடிச் சென்றிருக்கிறார்.  பாடல் வரிகளின் பொருள் உணர்ந்து பாடிச் சென்றிருக்கிறார். அது தனியாகப் பாடினாலும் இணைந்து பாடினாலும்.


வாணி தனியாகப் பாடிய பல பாடல்கள் எனக்குப் பிடிக்கும்.


ஆகாயம் மழை பொழிஞ்சா

மண்ணுலகில் இன்று தேவன்

நாதம் என்னும் கோவிலிலே

நீராட நேரம் நல்ல நேரம்

என் உள்ளில் எங்கோ

என் கல்யாண வைபோகம்


இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.


பெண்மை தன் நிலையைப் பெரிதும் பேசுவதில்லை. அது உள்ளத்தில் எங்கோ கிடக்கிறது. ஆற்றாமையாக,  தேடலாக,கொண்ட தனிமையாக தவிப்பாக,   இப்படி எல்லாமும் உள்ளே இறுகிக் கிடக்கிறது. தண்ணென்ற நீரில் கிடக்கும் கல்லைப் போல.  மற்றவர்கள் மீது காட்டும் பரிவும் சின்னச் சின்ன அக்கறைகளும் மெல்லச் சுரந்தபடியே இருக்கிறது.


வாணியின் குரல் பெண்மையின் உணர்வுகளை மெல்ல மெல்ல நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கிறது. காற்றில் அலைந்தபடியே இருக்கிறது அந்தக் குரல். 

சூல் கொண்ட பெண்மையின் குரல். தன்னை மறந்து தான் யாராகவோ மாறி விட்டதைப் சொல்லும் குரல். என் கல்யாணம் உன்னோடு என்று மகிழும் குரல்.  மல்லிகை மலர் சூடி  கணவன் மார்பில் சாய்ந்து மயங்கும் குரல்.  சம்சாரச் சுழலில் சிக்கி தனது தனிப்பட்ட திறமைகள் அலைப்புண்டு  மறைந்து இருக்க  திடுமென ஒரு நாள் அதைக் கண்டு கொண்டு நானா பாடுவது என்று வியப்பு எய்தும் குரல்.  அன்பு மேகத்தைத் தன் அருகில் அழைக்கும் குரல்.  

ஆசையில் விழுந்து தடுமாறி ஏன் இந்த ஏங்கும் கீதம் என்று தவிக்கும் குரல்.

சொல்லாமல் நெஞ்சள்ளிப் போகும் குரல். பேதலிக்கும் சுகம் தரும் குரல்.

எங்கிருந்தோ வந்த குரல். 


வாணியின் சில பாடல்கள்







Comments

  1. அருமையான பாடல்கள். காதுக்கு இனியாக அதே சமயத்தில் அர்த்தம் பொதிந்தவை. வாணி ஜெயராமின் எல்லாப் பாடல்களுமே அருமையானவை தான். நல்ல குரல் வளம். பதிவுக்கு நன்றி.

    ReplyDelete
  2. நேற்று y g மகேந்திரன் வாணி ஜெயராமைப் பற்றி பேட்டி பார்த்தேன். அவர்கள் 50 ஆண்டு கால family friend என்று சொல்லி பல செய்திகளை பகிர்ந்து கொண்டார். ரசிக்கத்தக்கதாக இருந்த து.

    ReplyDelete
    Replies
    1. நான் அந்தப் பேட்டியை இப்போது தான் பாரத்தேன்

      Delete
    2. சிவாஜி மறைந்த போது ஒய் ஜி எம் தம்பதி கொடுத்த பேட்டிய பாத்துடாதீங்க அண்ணாஸ்..

      Delete
  3. ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்... அருமையான அஞ்சலி பதிவு.

    ReplyDelete
  4. What a tribute 👏

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...