Skip to main content

இறங்கிய விடம்

 அப்பன் நீ, அம்மை நீ, ஐயனும் நீ, அன்பு உடைய மாமனும்  மாமியும் நீ,

ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ, ஒரு குலமும சுற்றமும் ஓர் ஊரும் நீ,

துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ, துணை ஆய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ,

இப் பொன் நீ, இம் மணி நீ, இம் முத்து(ந்)நீ, இறைவன் நீ-ஏறு ஊர்ந்த செல்வன் நீயே


மேலே காண்பது திருநாவுக்கரசர் பதிகம்.


திருநாவுக்கரசர் திங்களூருக்கு வருகிறார்.

தோளில் உழவாரப் படை.  ஆலயத் திருப்பணியே கொண்ட லட்சியம். வயதில் தளர்ந்த உடல். ஆனால் தளராத மன உறுதி. இந்த ஊரில் ஒரு அதிசயம். எங்கு சென்றாலும் நாவுக்கரசர் பெயரில் நற்பணி நடக்கிறது. தண்ணீர்ப் பந்தல் நாவுக்கரசர் பெயரில். வாசகசாலை. நாவுக்கரசர் பெயரில்.  இப்படி எல்லாம். திருநாவுக்கரசருக்கு வியப்பு அடங்கவில்லை. எதிரில் தென்படும் ஒருவரிடம் விசாரிக்கிறார். இந்த தர்ம காரியங்களைப் புரிவது யார் என்று. அவர் அப்பூதி அடிகள் என்ற ஒருவர் திருநாவுக்கரசர் மேல் கொண்ட மாறாத அன்பினால் அவர் பெயரில் இந்த நற்பணிகளை செய்வதாகக் கூறுகிறார்.  இத்தனைக்கும் அப்பூதி அடிகள் திருநாவுக்கரசரை நேரில் கண்டதில்லை.

திருநாவுக்கரசர் அப்பூதி அடிகளின் இல்லத்தைத் தேடிச் செல்கிறார். அவரிடம் நீங்கள் புரியும் நற்பணிகளை உங்கள் பெயரில் செய்யாமல் நாவுக்கரசர் பெயரில் செய்வது ஏன் என்று கேட்கிறார். அதற்கு அப்பூதி அடிகள் நாவுக்கரசரை தாம் வணங்கும் தெய்வத்துக்குச் சமமாகக் கருதுவதால் அவர் பெயரிலேயே நற்காரியங்கள் செய்வதாகக் கூறுகிறார்.  நீங்கள் இவ்வாறு செய்வதற்கு அத்தனை தகுதியானவனா நாவுக்கரசன் என்று இவர் கேட்க அப்பூதி அடிகளுக்கு சினம் மேலிடுகிறது. அதை அடக்கிக் கொண்டு பணிவுடன் அவரை எழுந்து போகச் சொல்கிறார். அப்போது தானே அவர்கள் பெரிதும் மதிக்கும் நாவுக்கரசர் என்று சொல்ல அவரைப் பணிந்து நிற்கிறார்கள். உணவு அருந்திச் செல்ல வேண்டுகிறார்கள்.

அவர் ஆலயத்துக்குள் சென்று வழிபடச் செல்கிறார். அப்பூதி அடிகளின் மனைவி அருண்மொழி உணவு தயாரிக்க முனைகிறார். தனது மகனை தோட்டத்திற்குச் சென்று வாழை இலை பறித்து வருமாறு கூறுகிறாள். சிறுவன் இலை பறிக்கும் போது நாகம் தீண்டி விடுகிறது. உடலில் விஷம் விரைவில் ஏற மடிந்து விடுகிறான். வெளியில் இருந்து வந்த அப்பூதி அடிகள் அதிர்ச்சியும் துயரமும் அடைகிறார்.. அருண்மொழி கடும துயரத்தில் கலங்கி நிற்கிறாள். வாசலில் திருநாவுக்கரசர் குரல் கேட்கிறது.. கணவன் மனைவி இருவரும் தங்கள் துயரத்தை மறைத்துக் கொண்டு நாவுக்கரசருக்கு இலை பரிமாறி உணவிடத் தயாராகிறார்கள். திருநாவுக்கரசர் சிறுவனைக் கேட்கிறார். தன்னோடு சேர்ந்து உணவருந்த.  அப்பூதி அடிகள் அவன் அதற்கு உதவ மாட்டான் என்று சொல்கிறார். முகக் குறிப்பிலிருந்து ஏதோ விபரீதம் நேர்ந்தது என அறிகிறார். மீண்டும் அவர்களை வினவ அருமை மகன் மாண்டு போன செய்தியைச் சொல்கிறார்கள். துடித்துப் போகிறார் திருநாவுக்கரசர். 

மெயயன்பருக்கும் இப்படி ஒரு சோதனையா என்று திங்களூர் இறைவனின் ஆலயத்துக்குச் சென்று பத்து பாடல்கள் பாடுகிறார். 


பத்தாவது பாடல் இது தான்.


பத்து கொலாம் அவர் பாம்பின் கண் பாம்பின் பல்


பத்து கொலாம் எயிறும் நெரிந்து உக்கன


பத்து கொலாம் அவர் காயப் பட்டான் தலை


பத்து கொலாம் அடியார் செய்கை தானே


பத்தாவது பாடல் பாடி முடிந்ததும்  சிறுவனின் உடலில் எறிய விஷம் இறங்கி விடுகிறது. உயிர் பெற்று வருகிறான். 


எனது பத்தாவது வயதில் ஒரு திரைப்படம் பார்த்தேன். திருவருட்செல்வர். நான் மேலே கூறிய கதை காட்சிப் படுத்திய விதம் மனதில் பதிந்தது. திங்களூர் வரும் திருநாவுக்கரசர் தண்ணீர் பந்தல் தன் பெயரில் அமைந்திருப்பதைப் பார்க்கிறார். பின்பு வாசகசாலை. அந்தக் கணத்தில் பின்னணியில் சிறார்கள் பாடல் ஒலிக்கிறது. அது செஞ்சுருட்டி ராகம்.அப்பன் நீ அம்மை நீ என்ற பதிகம் அதைத் .தான் இந்தப் பதிவின் துவக்கத்தில் குறிப்பிட்டிருந்தேன்.


திருநாவுக்கரசராக சிவாஜி நடித்திருந்தார். 

வயோதிகரின் தளர்ந்த நடை. தன் பெயரில் எல்லாம் இருக்கும் விசித்திரத்தைக் காணும் சுருங்கிய கண்களில் ஒரு சொல்ல முடியாத வியப்பு. உடலைக் குறுக்கிக் கொண்ட பணிவு. திருச்சிற்றம்பலம் என்று சொல்லும் போது எழும் உணர்ச்சி.  கால்கள் மடங்கி இருக்க கை விரல்களை நெற்றியருகில் வளைத்த வாக்கில் ஒரு தோற்றம். காஞ்சிப் பெரியவரை மனதில் வாங்கிக் கொண்டு நடித்ததாகச் சொல்வார்கள். மெய் தான்.


பேசும் படம் என்று ஒரு பத்திரிக்கை அப்போது வருவது உண்டு. சிவாஜி கணேசன் ஒப்பனை வழியாக திருநாவுக்கரசராக மாறும் விந்தையை சின்னச் சின்ன நிழற்படங்கள் வரிசையில் காட்சிப் படுத்தி இருப்பார்கள். அது அப்படியே நினைவில் நிற்கிறது.


இனி காணொளி.




Comments

  1. Ahaa Arpudham.. Thanks so much form bringing such a topic..and envisioning Thirunavukarasar through a legend Actor

    ReplyDelete
  2. அருமை. அருமையான பதிவு. என்ன நடிப்பு. எல்லவற்றையும் கண்முன் நிறுத்திய சந்தானத்திற்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராம் படித்ததற்கும் பார்த்தற்கும்

      Delete
  3. A fittest remembrance during Sivarathri.🙏🙏🙏

    ReplyDelete
  4. வழக்கம் போல் அருமையான பதிவு. காண்பதை அப்படியே அழகாக பதிவு செய்வது ஒரு கலை..

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஜெயந்தி படித்ததற்கும் இங்கே பதிவிட்டதற்கும்

      Delete
  5. Kannaal kaanbena... kadhaal ketpenaa..tiruchitrambalam then naadudaya sivane potri

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...