அப்பன் நீ, அம்மை நீ, ஐயனும் நீ, அன்பு உடைய மாமனும் மாமியும் நீ,
ஒப்பு உடைய மாதரும் ஒண் பொருளும் நீ, ஒரு குலமும சுற்றமும் ஓர் ஊரும் நீ,
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ, துணை ஆய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ,
இப் பொன் நீ, இம் மணி நீ, இம் முத்து(ந்)நீ, இறைவன் நீ-ஏறு ஊர்ந்த செல்வன் நீயே
மேலே காண்பது திருநாவுக்கரசர் பதிகம்.
திருநாவுக்கரசர் திங்களூருக்கு வருகிறார்.
தோளில் உழவாரப் படை. ஆலயத் திருப்பணியே கொண்ட லட்சியம். வயதில் தளர்ந்த உடல். ஆனால் தளராத மன உறுதி. இந்த ஊரில் ஒரு அதிசயம். எங்கு சென்றாலும் நாவுக்கரசர் பெயரில் நற்பணி நடக்கிறது. தண்ணீர்ப் பந்தல் நாவுக்கரசர் பெயரில். வாசகசாலை. நாவுக்கரசர் பெயரில். இப்படி எல்லாம். திருநாவுக்கரசருக்கு வியப்பு அடங்கவில்லை. எதிரில் தென்படும் ஒருவரிடம் விசாரிக்கிறார். இந்த தர்ம காரியங்களைப் புரிவது யார் என்று. அவர் அப்பூதி அடிகள் என்ற ஒருவர் திருநாவுக்கரசர் மேல் கொண்ட மாறாத அன்பினால் அவர் பெயரில் இந்த நற்பணிகளை செய்வதாகக் கூறுகிறார். இத்தனைக்கும் அப்பூதி அடிகள் திருநாவுக்கரசரை நேரில் கண்டதில்லை.
திருநாவுக்கரசர் அப்பூதி அடிகளின் இல்லத்தைத் தேடிச் செல்கிறார். அவரிடம் நீங்கள் புரியும் நற்பணிகளை உங்கள் பெயரில் செய்யாமல் நாவுக்கரசர் பெயரில் செய்வது ஏன் என்று கேட்கிறார். அதற்கு அப்பூதி அடிகள் நாவுக்கரசரை தாம் வணங்கும் தெய்வத்துக்குச் சமமாகக் கருதுவதால் அவர் பெயரிலேயே நற்காரியங்கள் செய்வதாகக் கூறுகிறார். நீங்கள் இவ்வாறு செய்வதற்கு அத்தனை தகுதியானவனா நாவுக்கரசன் என்று இவர் கேட்க அப்பூதி அடிகளுக்கு சினம் மேலிடுகிறது. அதை அடக்கிக் கொண்டு பணிவுடன் அவரை எழுந்து போகச் சொல்கிறார். அப்போது தானே அவர்கள் பெரிதும் மதிக்கும் நாவுக்கரசர் என்று சொல்ல அவரைப் பணிந்து நிற்கிறார்கள். உணவு அருந்திச் செல்ல வேண்டுகிறார்கள்.
அவர் ஆலயத்துக்குள் சென்று வழிபடச் செல்கிறார். அப்பூதி அடிகளின் மனைவி அருண்மொழி உணவு தயாரிக்க முனைகிறார். தனது மகனை தோட்டத்திற்குச் சென்று வாழை இலை பறித்து வருமாறு கூறுகிறாள். சிறுவன் இலை பறிக்கும் போது நாகம் தீண்டி விடுகிறது. உடலில் விஷம் விரைவில் ஏற மடிந்து விடுகிறான். வெளியில் இருந்து வந்த அப்பூதி அடிகள் அதிர்ச்சியும் துயரமும் அடைகிறார்.. அருண்மொழி கடும துயரத்தில் கலங்கி நிற்கிறாள். வாசலில் திருநாவுக்கரசர் குரல் கேட்கிறது.. கணவன் மனைவி இருவரும் தங்கள் துயரத்தை மறைத்துக் கொண்டு நாவுக்கரசருக்கு இலை பரிமாறி உணவிடத் தயாராகிறார்கள். திருநாவுக்கரசர் சிறுவனைக் கேட்கிறார். தன்னோடு சேர்ந்து உணவருந்த. அப்பூதி அடிகள் அவன் அதற்கு உதவ மாட்டான் என்று சொல்கிறார். முகக் குறிப்பிலிருந்து ஏதோ விபரீதம் நேர்ந்தது என அறிகிறார். மீண்டும் அவர்களை வினவ அருமை மகன் மாண்டு போன செய்தியைச் சொல்கிறார்கள். துடித்துப் போகிறார் திருநாவுக்கரசர்.
மெயயன்பருக்கும் இப்படி ஒரு சோதனையா என்று திங்களூர் இறைவனின் ஆலயத்துக்குச் சென்று பத்து பாடல்கள் பாடுகிறார்.
பத்தாவது பாடல் இது தான்.
பத்து கொலாம் அவர் பாம்பின் கண் பாம்பின் பல்
பத்து கொலாம் எயிறும் நெரிந்து உக்கன
பத்து கொலாம் அவர் காயப் பட்டான் தலை
பத்து கொலாம் அடியார் செய்கை தானே
பத்தாவது பாடல் பாடி முடிந்ததும் சிறுவனின் உடலில் எறிய விஷம் இறங்கி விடுகிறது. உயிர் பெற்று வருகிறான்.
எனது பத்தாவது வயதில் ஒரு திரைப்படம் பார்த்தேன். திருவருட்செல்வர். நான் மேலே கூறிய கதை காட்சிப் படுத்திய விதம் மனதில் பதிந்தது. திங்களூர் வரும் திருநாவுக்கரசர் தண்ணீர் பந்தல் தன் பெயரில் அமைந்திருப்பதைப் பார்க்கிறார். பின்பு வாசகசாலை. அந்தக் கணத்தில் பின்னணியில் சிறார்கள் பாடல் ஒலிக்கிறது. அது செஞ்சுருட்டி ராகம்.அப்பன் நீ அம்மை நீ என்ற பதிகம் அதைத் .தான் இந்தப் பதிவின் துவக்கத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
திருநாவுக்கரசராக சிவாஜி நடித்திருந்தார்.
வயோதிகரின் தளர்ந்த நடை. தன் பெயரில் எல்லாம் இருக்கும் விசித்திரத்தைக் காணும் சுருங்கிய கண்களில் ஒரு சொல்ல முடியாத வியப்பு. உடலைக் குறுக்கிக் கொண்ட பணிவு. திருச்சிற்றம்பலம் என்று சொல்லும் போது எழும் உணர்ச்சி. கால்கள் மடங்கி இருக்க கை விரல்களை நெற்றியருகில் வளைத்த வாக்கில் ஒரு தோற்றம். காஞ்சிப் பெரியவரை மனதில் வாங்கிக் கொண்டு நடித்ததாகச் சொல்வார்கள். மெய் தான்.
பேசும் படம் என்று ஒரு பத்திரிக்கை அப்போது வருவது உண்டு. சிவாஜி கணேசன் ஒப்பனை வழியாக திருநாவுக்கரசராக மாறும் விந்தையை சின்னச் சின்ன நிழற்படங்கள் வரிசையில் காட்சிப் படுத்தி இருப்பார்கள். அது அப்படியே நினைவில் நிற்கிறது.
இனி காணொளி.
Ahaa Arpudham.. Thanks so much form bringing such a topic..and envisioning Thirunavukarasar through a legend Actor
ReplyDeleteThank you Suresh
ReplyDeleteஅருமை. அருமையான பதிவு. என்ன நடிப்பு. எல்லவற்றையும் கண்முன் நிறுத்திய சந்தானத்திற்கு நன்றி
ReplyDeleteநன்றி ராம் படித்ததற்கும் பார்த்தற்கும்
DeleteA fittest remembrance during Sivarathri.🙏🙏🙏
ReplyDeleteYes Thank you
Deleteவழக்கம் போல் அருமையான பதிவு. காண்பதை அப்படியே அழகாக பதிவு செய்வது ஒரு கலை..
ReplyDeleteநன்றி ஜெயந்தி படித்ததற்கும் இங்கே பதிவிட்டதற்கும்
DeleteKannaal kaanbena... kadhaal ketpenaa..tiruchitrambalam then naadudaya sivane potri
ReplyDelete