The Path On Which You Are Walking Alone
by Pär Lagerkvist
The lonely man is the weakest one.
Not because he is alone but because
He is denying what he is carrying
within himself.
Our soul, getting deeper, is the broad
river of life.
The path on which you are walking alone,
is leading away from yourself.
பெர் லாகர்க்விஸ்ட் ஸ்வீடன் தேசத்தைச் சேர்ந்த எழுத்தாளர். கவிஞர். நோபல் பரிசு வென்றவர். பாரபாஸ் என்ற இவரது நாவலுக்காக
க.நா.சுப்ரமணியன் இந்தக் கதையை அன்பு வழி என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறார். அன்பு வழி போல ஒரு நாவல் எழுதி விட மாட்டோமா என்ற ஆசையில் தான் எழுதிப் போகிறேன் என்று வண்ணநிலவன் கடல்புரத்தில் என்ற நாவலுக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.
பாரபாஸ் என்ற நாவலின் ஆங்கில மொழிபெயர்ப்பை சமீபத்தில் படித்து முடித்தேன். பாரபாஸ் கொள்ளையன். சிலுவையில் ஏற்றப்பட வேண்டியவன். பஸ்கா விருந்து நாளில் குற்றவாளி ஒருவனை விடுதலை செய்ய முடியும். பிலாத்து மக்களிடம் கேட்கிறான்.
நசரேயன் என்ற ஏசு அல்லது கொள்ளையன் பாரபாஸ் இவர்களில் யாரை விடுதலை செய்ய வேண்டும் என்று.
ஓருமித்த குரல்கள் எழுகின்றன. ஏசுவைச் சிலுவையில் ஏற்றுங்கள். பாரபாஸை விடுதலை செய்யுங்கள். அது அவ்வாறே நடக்கிறது.
பாரபாஸ் என்ற நாவல் ஏசு சிலுவையில் அறையப்படுவதில் இருந்து துவங்குகிறது.
பாரபாஸின் பார்வையில் சொல்லப்படுகிறது.
பாரபாஸ் நாவலை எழுதிய லாகர்க்விஸ்ட்டின் கவிதைதான் பதிவின் ஆரம்பத்தில் காண்பது.
எனது தமிழாக்கம் இதோ…
நீ தனியே நடக்கும் பாதை
தனிமை கொண்ட மனிதன் பலவீனமானவன்
அவன் தனியன் என்பதினால் அல்ல
அவன் எதைச் சுமந்து கொண்டிருக்கிறானோ
அதை மறுப்பவனாக இருப்பதனால்
நமது ஆன்மா ஆழம் கொள்கிறது
அது அகலம் கொண்ட ஒரு நதியாகிறது
நீ தனியே நடக்கும் பாதை
உன்னிடமிருந்தே விலகிச் செல்கிறது
பாதைகள் புதிரானவை. தனியே நடக்கும் மனிதர்களும் புதிரானவர்கள் தான்.
நீ தனியே நடக்கும் பாதை
ReplyDeleteஉன்னிடமிருந்தே விலகிச் செல்கிறது...
Wonderful translation 👍
Thank you Ram
ReplyDelete👏🏻👏🏻👏🏻
ReplyDelete🥴
Delete