My friend is a stranger, someone I do not know.
A stranger far far away.
For his sake my heart is full of disquiet
because he is not with me.
Because, perhaps, after all he does not exist.
Who are you who so fill my heart with your absence?
Who fill the entire world with your absence?
You who existed before the mountains and the clouds,
before the sea and the winds.
You whose beginning is before the beginning of all things,
and whose joy and sorrow are older than the stars.
You who from eternity have wandered among the stars of the Milky Way
and through the great darknesses between them.
You who were alone before loneliness,
and whose heart was full of disquiet before any human heartdo not forget me.
But how could you possibly remember me?
How could the sea possibly remember the sea-shell
that once it surged through.
PAR LAGERKVIST
Translated by W. H. Auden with Leif Sjberg
பெர் லாகர்க்விஸ்ட் எழுதிய பாரபாஸ் என்ற நாவலைப் பற்றி முன்னம் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அவருடைய மற்றும் ஒரு நாவல் The Dwarf என்பது. இந்த நாவலை தி.ஜானகிராமன் தமிழில் மொழி பெயர்த்ததாக சமீபத்தில் அறிந்தேன்
மேலே காண்பது பெர் லாகர்க்விஸ்டின் கவிதை அதை ஆர்வ மிகுதியால் தமிழில் செய்தேன்.
எனது நண்பன் ஒரு அந்நியன்
நான் அறியாத ஒருவன்
தொலைவாக தொலைவாக இருக்கும் ஒரு அந்நியன்
அவன் பொருட்டு என் இதயம் முழுதும் அமைதி இழந்து இருக்கிறது
ஏனென்றால் அவன் என்னோடு இல்லை
ஏனென்றால் ஒருவேளை அவன் இல்லவே இல்லையோ?
நீ யார் என் மனதை இன்மையால் நிரப்பும் நீ
புவி முழுதும் இன்மையால் நிரப்பும் நீ
மலைகளுக்கும் மேகங்களுக்கும் முன்னமே இருந்த நீ
கடலுக்கும் காற்றுக்கும் முன்னமே இருந்த நீ
ஆரம்பங்களுக்கு எல்லாம் முன்னமே இருந்த ஆரம்பமாகிய நீ
யாருடைய துயரமும் ஆனந்தமும் நட்சத்திரங்களை விடப் பழமையானதோ அந்த நீ
நிரந்தரத்திலிருந்து பால் வீதியின் நட்சத்திரங்களின் ஊடாக அலைந்திருக்கும் நீ
அவைகளின் நடுவே பாய் இருளில் அலைப்புற்ற நீ
தனிமைக்கெல்லாம் முந்தைய தன்னந் தனிமையாகிய நீ
எந்த மனித இதயமும் என்னை மறப்பதற்கு முந்தைய அமைதி இழந்த உள்ளமாகிய நீ
நீ எவ்வாறு என்னை நினைவு கூருவாய்?
கடல் எங்ஙனம் நினைவு கூரும்
ஒரு சமயம் அலை எழ மோதிய கடல் சிப்பியை
இந்தக் கவிதையை மொழி பெயர்த்து ஒரு முறை படித்துப் பார்த்தேன். ஏனோ நம்மாழ்வாரின் திருவாய்மொழி நினைவில் வந்தது.
குறிப்பாக இந்தப் பாசுரம்
நாளும் எழ நிலம் நீரும் எழ விண்ணும்
கோளும் எழ எரி காலும் எழ மலை
தாளும் எழச் சுடர் தானும் எழ அப்பன்
ஊளி எழ உலகம் உண்ட ஊணே
வாயால் இதைச் சொல்ல மெய் விதிர்த்துப் போனது.
பல ஆண்டுகளுக்கு முன்னால் பாரத் ஏக் கோஜ் என்று ஒரு தொடர் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பாகும். ஷ்யாம் பெனகல் இயக்கியது. அதில் ரிக் வேதத்தில் நாசடீய சூக்தத்திலிருந்து ஒரு பகுதி வரும்.
அப்போது எதுவும் இல்லை
நிலையான ஒன்று இல்லை
நிலையற்றதும் இல்லை
ஆகாயம் என்பது இல்லை
அந்தரம் என்பது இல்லை
மறைத்தது யார்? எங்கே?
அந்த சக்தி எது?
அப்போது இரவு பகலுக்கான
அறிகுறியே இல்லை
மரணம் இல்லை
அமரத் தன்மை இல்லை
சுவாசமின்மை தன் செயலில் சுவாசித்தது
எங்கும் இருள்
இருளை மூடிய இருள்
வெறுமை……
………………….
இப்படி எல்லாம் கவி மனத்தின் ஆழமான தேடல் அழகான காட்சியாகவும் கவிதையாகவும் சின்ன தொலைக்காட்சித் திரையில் தோன்றும்.
அதைப் பார்க்கலாம்
ஆரம்பத்தில் நான் மொழிபெயர்த்த கவிதை, நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரம், நாசடீய சூக்தம் இவை மூன்றையும் ஏதோ ஒரு நுட்பமான சரடு இணைப்பதாகத் தோன்றுகிறது.
தி சந்தானம்
அருமையான பதிவு. ஒன்றுக்கு ஒன்று தொடர்பு படுத்தப்படும் பாணி அழகு.வீடியோ ரசித்தேன்.
ReplyDeleteநன்றி
நன்றி ராம்
Deleteஇன்று வரை இந்த கேள்விகளக்கு பதில் இல்லை.சிந்தனையை ஆழமாக தூண்டும் பதிவு
Deleteநன்றி பாஸ்கர்
Deleteஅபாரம்....அபாரம்.
ReplyDeleteஎன்ன வளமான மொழி பெயர்ப்பு!!
எஸ் வி வேணுகோபாலன்
நன்றி எஸ் வி வி
DeleteIn this chain, I am also thinking of Bharathi
ReplyDeleteA wonderful article by you. Comes to you naturally..
Thank you
Deleteஆதித் தனிப்பொரு ளாகுமோர் -- கடல்
Deleteஆருங் குமிழி உயிர்களாம்; -- அந்தச்
சோதி யறிவென்னும் ஞாயிறு -- தன்னைச்
சூழ்ந்த கதிர்கள் உயிர்களாம்; -- இங்கு
மீதிப் பொருள்கள் எவையுமே -- அதன்
மேனியில் தோன்றிடும் வண்ணங்கள்
பாரதி