Skip to main content

இருளை மூடிய இருள்

 My friend is a stranger, someone I do not know.

A stranger far far away.

For his sake my heart is full of disquiet

because he is not with me.

Because, perhaps, after all he does not exist.

Who are you who so fill my heart with your absence?

Who fill the entire world with your absence?

You who existed before the mountains and the clouds,

before the sea and the winds.

You whose beginning is before the beginning of all things,

and whose joy and sorrow are older than the stars.

You who from eternity have wandered among the stars of the Milky Way

and through the great darknesses between them.

You who were alone before loneliness,

and whose heart was full of disquiet before any human heartdo not forget me.

But how could you possibly remember me?

How could the sea possibly remember the sea-shell

that once it surged through.


PAR LAGERKVIST

Translated by W. H. Auden with Leif Sjberg


பெர் லாகர்க்விஸ்ட் எழுதிய பாரபாஸ் என்ற நாவலைப் பற்றி முன்னம் ஒரு பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அவருடைய மற்றும் ஒரு நாவல் The Dwarf என்பது. இந்த நாவலை தி.ஜானகிராமன் தமிழில் மொழி பெயர்த்ததாக சமீபத்தில் அறிந்தேன்


மேலே காண்பது பெர் லாகர்க்விஸ்டின் கவிதை அதை ஆர்வ மிகுதியால் தமிழில் செய்தேன்.


எனது நண்பன் ஒரு அந்நியன்

நான் அறியாத ஒருவன்

தொலைவாக தொலைவாக இருக்கும் ஒரு அந்நியன்

அவன் பொருட்டு என் இதயம் முழுதும் அமைதி இழந்து இருக்கிறது

ஏனென்றால் அவன் என்னோடு இல்லை

ஏனென்றால் ஒருவேளை அவன் இல்லவே இல்லையோ?

நீ யார் என் மனதை இன்மையால் நிரப்பும் நீ

புவி முழுதும் இன்மையால் நிரப்பும் நீ

மலைகளுக்கும் மேகங்களுக்கும் முன்னமே இருந்த நீ

கடலுக்கும் காற்றுக்கும் முன்னமே இருந்த நீ

ஆரம்பங்களுக்கு  எல்லாம் முன்னமே இருந்த ஆரம்பமாகிய நீ

யாருடைய துயரமும் ஆனந்தமும் நட்சத்திரங்களை விடப் பழமையானதோ அந்த நீ

நிரந்தரத்திலிருந்து பால் வீதியின் நட்சத்திரங்களின் ஊடாக அலைந்திருக்கும் நீ

அவைகளின் நடுவே பாய் இருளில் அலைப்புற்ற நீ

தனிமைக்கெல்லாம் முந்தைய தன்னந் தனிமையாகிய நீ

எந்த மனித இதயமும் என்னை மறப்பதற்கு முந்தைய அமைதி இழந்த உள்ளமாகிய நீ

நீ எவ்வாறு என்னை நினைவு கூருவாய்?

கடல் எங்ஙனம் நினைவு கூரும்

ஒரு சமயம் அலை எழ மோதிய  கடல் சிப்பியை


இந்தக் கவிதையை மொழி பெயர்த்து ஒரு முறை படித்துப் பார்த்தேன்.  ஏனோ நம்மாழ்வாரின் திருவாய்மொழி நினைவில் வந்தது. 

குறிப்பாக இந்தப் பாசுரம்


நாளும் எழ நிலம் நீரும் எழ விண்ணும்

கோளும் எழ எரி காலும் எழ மலை

தாளும் எழச் சுடர் தானும் எழ அப்பன்

ஊளி எழ உலகம் உண்ட ஊணே


வாயால் இதைச் சொல்ல மெய் விதிர்த்துப் போனது.


பல ஆண்டுகளுக்கு முன்னால் பாரத் ஏக் கோஜ் என்று ஒரு தொடர் ஞாயிற்றுக் கிழமைகளில் ஒளிபரப்பாகும். ஷ்யாம் பெனகல் இயக்கியது. அதில் ரிக் வேதத்தில் நாசடீய சூக்தத்திலிருந்து  ஒரு பகுதி வரும்.  


அப்போது எதுவும் இல்லை

நிலையான ஒன்று இல்லை

நிலையற்றதும் இல்லை

ஆகாயம் என்பது இல்லை

அந்தரம் என்பது இல்லை

மறைத்தது யார்? எங்கே?

அந்த சக்தி எது?

அப்போது இரவு பகலுக்கான

அறிகுறியே இல்லை

மரணம் இல்லை

அமரத் தன்மை இல்லை

சுவாசமின்மை தன் செயலில் சுவாசித்தது

எங்கும் இருள்

இருளை மூடிய இருள்

வெறுமை……

………………….


இப்படி எல்லாம் கவி மனத்தின் ஆழமான தேடல்  அழகான காட்சியாகவும் கவிதையாகவும் சின்ன தொலைக்காட்சித் திரையில் தோன்றும்.


அதைப் பார்க்கலாம்




ஆரம்பத்தில் நான் மொழிபெயர்த்த கவிதை, நம்மாழ்வாரின் திருவாய்மொழிப் பாசுரம், நாசடீய சூக்தம் இவை மூன்றையும் ஏதோ ஒரு நுட்பமான சரடு இணைப்பதாகத் தோன்றுகிறது.


தி சந்தானம் 


Comments

  1. அருமையான பதிவு. ஒன்றுக்கு ஒன்று தொடர்பு படுத்தப்படும் பாணி அழகு.வீடியோ ரசித்தேன்.
    நன்றி

    ReplyDelete
    Replies
    1. இன்று வரை இந்த கேள்விகளக்கு பதில் இல்லை.சிந்தனையை ஆழமாக தூண்டும் பதிவு

      Delete
    2. நன்றி பாஸ்கர்

      Delete
  2. அபாரம்....அபாரம்.
    என்ன வளமான மொழி பெயர்ப்பு!!

    எஸ் வி வேணுகோபாலன்

    ReplyDelete
  3. In this chain, I am also thinking of Bharathi

    A wonderful article by you. Comes to you naturally..

    ReplyDelete
    Replies
    1. ஆதித் தனிப்பொரு ளாகுமோர் -- கடல்
      ஆருங் குமிழி உயிர்களாம்; -- அந்தச்
      சோதி யறிவென்னும் ஞாயிறு -- தன்னைச்
      சூழ்ந்த கதிர்கள் உயிர்களாம்; -- இங்கு
      மீதிப் பொருள்கள் எவையுமே -- அதன்
      மேனியில் தோன்றிடும் வண்ணங்கள்

      பாரதி

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...