சில வருடங்களுக்கு முன்பு அலுவலக நண்பரின் வீட்டுத் திருமணத்திற்குப் சென்றிருந்தேன். சந்தடிகளுக்கு நடுவே நாதஸ்வரத்திலிருந்து ராகங்கள் பெருகி வழிந்து கொண்டிருந்தன. ஆனால் கேட்பார் யாரும் இல்லை. தாலி கட்டிய சில நேரத்தில் நாதசுரத்திலிருந்து பழைய சினிமாப் பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்தன.
எல்லாமே பொருள் பொதிந்த பாடல்கள். பூஜைக்கு வந்த மலரே வா.. என்ற பாடலை நாதசுரக்காரர் உற்சாகமாக வாசித்தார். வாசிக்க வாசிக்க வாசிக்க பாடல் வரிகள் மனதில் ஓடத் துவங்கியது. நானும் இன்னொரு நண்பரும் அருகில் சென்று அமர்ந்து கேட்டோம். வாசிப்பவர் பெரிதும் உற்சாகம் அடைந்தார்.
திருமணங்களில் நாதஸ்வரம் பெரிதாக முக்கியத்துவம் பெறுவதில்லை. எங்கள் பகுதியில் இப்போது எல்லாம் கேரளத்திலிருந்து வந்து செண்டை மேளம் வாசிக்கிறார்கள். அது ஒரு தாள லயம். அது ஒரு ஓசை.
எஸ்.ராமகிருஷ்ணன் "சஞ்சாரம்" என்று ஒரு நாவல் எழுதினார். அதற்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. அது நாதஸ்வரக் கலைஞர்களின் வாழ்க்கை பற்றியது. விருது கிடைத்த சமயம் எஸ்.ராமகிருஷ்ணன் இவ்வாறு சொன்னார்.
"நேற்று எல்லோரையும் சந்தித்த பின் அவர்களிடமிருந்து என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு சில மணி நேரம் நாதஸ்வரம் கேட்டுக் கொண்டிருந்தேன். அந்த நாதஸ்வரம் வெறும் இசைக்கருவி இல்லை. இசைக் கலைஞர்களின் மனதில் ஆழமாகப் பதிவாகியுள்ள துக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு கருவி என்ற எண்ணம் உண்டானது. அந்த வாத்தியத்தை எடுத்து வாசித்த எத்தனை மேதைகள் அசுர சாதனைகள் செய்து விட்டு அடையாளம் தெரியாமல் போய்விட்டார்கள் என்ற ஓர் ஆற்றாமையும் தொற்றிக் கொண்டது. ஆனால் அந்தக் கலை இப்போதும் கேட்கும் அளவுக்கு உயிர்ப்போடு இருக்கிறதே. அதுவரையில் மகிழ்ச்சி என்ற எண்ணம் உடனே என்னைத் தேற்றியது. கலைஞர்கள் காற்றில் இசையைக் கலந்துவிட்டுச் சென்றுள்ளனர்."
நான் வேலைக்குச் சேர்ந்த புதிதில் பார்த்த திரைப்படம் புதிய வார்ப்புகள். அதில் நாயகியின் தந்தை கோவிலில், திருவிழாக்களில் நாதஸ்வரம் வாசிப்பவர். அந்தக் கதாபாத்திரத்திற்குப் பெயரே நாயனம். அப்படித்தான் எல்லோரும் அழைப்பார்கள். அந்த எளிய மனிதன் தனது வாழ்வின் சந்தோஷமான மற்றும் துயரமான தருணங்களில் தனது துணையான நாதஸ்வரத்தை உறையிலிருந்து எடுத்து வாசிப்பான். திரைப்படத்தில் ஒரு முக்கியமான காட்சி. நாயனம் என்று அழைக்கப்படும் நடிகர் கே.கே. செளந்தர் அந்த வாத்தியத்தை வாசித்தபடியே உயிர் துறக்கும் காட்சி. உருக்கமாக இருக்கும்.
சமீபத்தில் இந்த நாதஸ்வர இசையைக் காணொளியில் கேட்டேன். நீங்களும் கேளுங்களேன். ஒரு சிறிய ஆலாபனை.
அது உங்களுக்கு என்ன சொல்கிறது?
அருமை மிக அருமை
ReplyDeleteநன்றி
Deleteஇந்தப்படம் பார்த்திருக்கிறேன். மனதை உருக்கும் காட்சி. நாதஸ்வர இசையே தனி அழகுதான். அவ்வப்போது you tube ல் கேட்பதுண்டு. நல்ல பதிவு
ReplyDeleteநன்றி ராம்
Deleteசந்தானத்தின் பதிவு சதம் அடித்ததாக நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.
ReplyDeleteபதிவு தொடரட்டும்
ReplyDeleteதொடர்ந்து ஊக்கப்படுத்துவதற்கு நன்றி
Deleteஇந்த நாதஸ் லூப்ல கேட்டுண்டே இருந்தேன். Towards the end, எதோ நெகிழ்ச்சியா, திருப்பி திருப்பி கேக்க வைக்கறது. பொதுவா நாதஸ்வரம் கேக்க ஒரு உற்சாகத்த கொடுக்கும், நம்ம சிக்கலார் English note, மாரி, கல்யாணத்ல வாசிக்கறதெல்லாம் ஜாலியா இருக்கும். இது வித்தியாசமா எனக்கு மட்டும்தான் தோண்றதா, தெரில.. அருமையான பகிர்தல்.
ReplyDeleteநீ சொல்வது சரி
ReplyDeleteஅருமை 👌🏻
ReplyDeleteநன்றி மதி
Delete