Skip to main content

நாதஸ்வர ஓசை

 சில வருடங்களுக்கு முன்பு அலுவலக நண்பரின் வீட்டுத் திருமணத்திற்குப் சென்றிருந்தேன். சந்தடிகளுக்கு நடுவே நாதஸ்வரத்திலிருந்து ராகங்கள் பெருகி வழிந்து கொண்டிருந்தன. ஆனால் கேட்பார் யாரும் இல்லை. தாலி கட்டிய சில நேரத்தில் நாதசுரத்திலிருந்து பழைய சினிமாப் பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்தன.

எல்லாமே பொருள் பொதிந்த பாடல்கள். பூஜைக்கு வந்த மலரே வா.. என்ற பாடலை நாதசுரக்காரர் உற்சாகமாக வாசித்தார். வாசிக்க வாசிக்க வாசிக்க பாடல் வரிகள் மனதில் ஓடத் துவங்கியது. நானும் இன்னொரு நண்பரும் அருகில் சென்று அமர்ந்து கேட்டோம். வாசிப்பவர் பெரிதும் உற்சாகம் அடைந்தார். 


திருமணங்களில் நாதஸ்வரம் பெரிதாக முக்கியத்துவம் பெறுவதில்லை.  எங்கள் பகுதியில் இப்போது எல்லாம் கேரளத்திலிருந்து வந்து செண்டை மேளம் வாசிக்கிறார்கள். அது ஒரு தாள லயம். அது ஒரு ஓசை.


எஸ்.ராமகிருஷ்ணன் "சஞ்சாரம்" என்று ஒரு நாவல் எழுதினார். அதற்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. அது நாதஸ்வரக் கலைஞர்களின் வாழ்க்கை பற்றியது. விருது கிடைத்த சமயம் எஸ்.ராமகிருஷ்ணன் இவ்வாறு சொன்னார்.


"நேற்று எல்லோரையும் சந்தித்த பின் அவர்களிடமிருந்து என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டு சில மணி நேரம் நாதஸ்வரம் கேட்டுக் கொண்டிருந்தேன். அந்த நாதஸ்வரம் வெறும் இசைக்கருவி இல்லை. இசைக் கலைஞர்களின் மனதில் ஆழமாகப் பதிவாகியுள்ள துக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு கருவி என்ற எண்ணம் உண்டானது. அந்த வாத்தியத்தை எடுத்து வாசித்த எத்தனை மேதைகள் அசுர சாதனைகள் செய்து விட்டு அடையாளம் தெரியாமல் போய்விட்டார்கள் என்ற ஓர் ஆற்றாமையும் தொற்றிக் கொண்டது. ஆனால் அந்தக் கலை இப்போதும் கேட்கும் அளவுக்கு உயிர்ப்போடு இருக்கிறதே. அதுவரையில் மகிழ்ச்சி என்ற எண்ணம் உடனே என்னைத் தேற்றியது. கலைஞர்கள் காற்றில் இசையைக் கலந்துவிட்டுச் சென்றுள்ளனர்."


நான் வேலைக்குச் சேர்ந்த புதிதில் பார்த்த திரைப்படம் புதிய வார்ப்புகள். அதில் நாயகியின் தந்தை  கோவிலில், திருவிழாக்களில் நாதஸ்வரம் வாசிப்பவர். அந்தக் கதாபாத்திரத்திற்குப் பெயரே நாயனம். அப்படித்தான் எல்லோரும் அழைப்பார்கள். அந்த எளிய மனிதன் தனது வாழ்வின் சந்தோஷமான மற்றும் துயரமான தருணங்களில் தனது துணையான நாதஸ்வரத்தை உறையிலிருந்து எடுத்து வாசிப்பான். திரைப்படத்தில் ஒரு முக்கியமான காட்சி. நாயனம் என்று அழைக்கப்படும் நடிகர் கே.கே. செளந்தர் அந்த வாத்தியத்தை வாசித்தபடியே உயிர் துறக்கும் காட்சி. உருக்கமாக இருக்கும். 





சமீபத்தில்  இந்த நாதஸ்வர இசையைக் காணொளியில் கேட்டேன். நீங்களும் கேளுங்களேன். ஒரு சிறிய ஆலாபனை.

அது உங்களுக்கு என்ன சொல்கிறது?









Comments

  1. அருமை மிக அருமை

    ReplyDelete
  2. இந்தப்படம் பார்த்திருக்கிறேன். மனதை உருக்கும் காட்சி. நாதஸ்வர இசையே தனி அழகுதான். அவ்வப்போது you tube ல் கேட்பதுண்டு. நல்ல பதிவு

    ReplyDelete
  3. சந்தானத்தின் பதிவு சதம் அடித்ததாக நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. பதிவு தொடரட்டும்

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து ஊக்கப்படுத்துவதற்கு நன்றி

      Delete
  5. இந்த நாதஸ் லூப்ல கேட்டுண்டே இருந்தேன். Towards the end, எதோ நெகிழ்ச்சியா, திருப்பி திருப்பி கேக்க வைக்கறது. பொதுவா நாதஸ்வரம் கேக்க ஒரு உற்சாகத்த கொடுக்கும், நம்ம சிக்கலார் English note, மாரி, கல்யாணத்ல வாசிக்கறதெல்லாம் ஜாலியா இருக்கும். இது வித்தியாசமா எனக்கு மட்டும்தான் தோண்றதா, தெரில.. அருமையான பகிர்தல்.

    ReplyDelete
  6. நீ சொல்வது சரி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...