வீடென்று எதனைச் சொல்வீர்?
அது இல்லை என் வீடு
ஜன்னல் போல் வாசல் உண்டு
எட்டடிச் சதுரம் உள்ளே
பொங்கிட மூலை ஒன்று
புணர்வது மற்றொன்றில்
நண்பர்கள் வந்தால்
நடுவிலே குந்திக் கொள்வர்
தலை மேலே கொடிகள் ஆடும்
கால்புறம் பாண்டம் முட்டும்
கவி எழுதி விட்டு செல்ல
கால் சட்டை மடித்து வைக்க
வாய் பிளந்து வயிற்றை எக்கிச்
சுவரோரம் சாய்ந்த பீரோ
அது மாலன் எழுதிய கவிதை. எண்பதுகளில் வாசித்திருக்கிறேன். அது மாலன் சாவி பத்திரிக்கையில் எழுதிய சிறுகதையின் துவக்க வரி. சிறுகதையின் தலைப்பு " கல்லுக்குக் கீழும் பூக்கள்". எந்திரமாகிப் போன மனித வாழ்க்கை. அதில் கொஞ்சம் போல கவிதை. சுமைகள் வந்து அழுத்தும் நடுத்தர வர்க்க வாழ்க்கை. அதில் துளியூண்டு ரசனை. கதையைச் சொல்லும் "இவன்" காலைப் பனியில் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகிறான். தண்டவாள இரும்புக்கும் குவிந்திருக்கும் சரளைக் கற்களுக்கும் இடையே நீல மலர்கள் மலர்ந்து கிடப்பதைப் பார்க்கிறான். இது தான் கதை.
"மனே" என்று ஒரு கன்னடத் திரைப்படம். மனே என்றால் வீடு. கிரீஷ் காசரவல்லி இயக்கம். நசிருதீன் ஷா மற்றும் தீப்தி நாவல் நடித்திருந்தனர். தேசிய விருது பெற்ற படம். சிறந்த மாநிலத் திரைப்படம் என்ற பிரிவில். இந்தப் படத்தை தூர்தர்ஷனில் ஒரு ஞாயிறு மதியம் ஒளிபரப்பினார்கள். பார்த்து இருக்கிறேன். கிராமத்திலிருந்து நகரத்திற்கு இடம் பெயரும் புது மணத் தம்பதியர். அவனுக்கு புல்டோசர் தயாரிக்கும கம்பனியில் வேலை. மிகுந்த பிரயாசைக்கு பிறகு வீடு கிடைக்கிறது. வீட்டுக்கு எதிரே ஒரு தகர ஷெட். அங்கேயிருந்து எப்போதும் சத்தம். தட்டும் சத்தம். வெல்டிங் சத்தம். உருட்டும் சத்தம்.நிம்மதியாக இரவில் தூங்க முடிவதில்லை. பக்கத்தில் இருக்கும் மற்ற எவரும் இதைக் கண்டு கொள்வதே இல்லை. சத்தத்திற்கு பழகி விட்டார்கள் போல. நாட்பட நாட்பட எரிச்சலும் கசப்பும் அதிகமாகிறது. அவனுடைய உறவுக்காரப் பெண்மணிக்கு போலீஸ் அதிகாரி நல்ல பழக்கம். அவளிடம் சொல்கிறான். மறு தினமே போலீஸ் வந்து தகரஷெட் காரர்களை அடித்து விரட்டுகிறது. சிறிது காலம் சத்தம் இல்லை. ஆனால அந்த சத்தமின்மை உறுத்துகிறது. ஷெட்காரர்கள் விஷயத்தில் தவறு செய்து விட்டோமோ என்று மனச்சாட்சியும். சில நாட்கள் சென்ற பின்பு தகர ஷெட் இருந்த இடத்தில் ஒரு வீடியோ கேம் பார்லர் வருகிறது. அது போலீஸ் அதிகாரிக்கு வேண்டப்பட்டலருக்குச் சொந்தமானது. இப்போதெல்லாம் வேறு விதமான ஓசைகள். மீண்டும் நிம்மதியின்மை. வீடு என்பது உடலுக்கும் மனதுக்கும் அமைதி தர வேண்டும். இதம் தரு மனை என்பார் பாரதி. அவனுக்கு அப்படி வாய்க்கவில்லை. ஒரு நாள் ஏதோ தூண்டப்பட்டவனாய் அண்டை வீட்டாரிடம் ஷெட்காரர்களின் தற்போதைய விலாசத்தைக் கேட்டுப் பெறுகிறான். அவர்களைத் தேடிப் போகிறான். இப்போது அவர்கள் இருப்பது குடிசைப் பகுதி. பழைய பிழைப்பு போயிற்று. அவன் கண்ட காட்சி பதைக்க வைக்கிறது. எல்லோரும் கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு ஓடுகிறார்கள். ஒரு புல்டோஸர் அந்தக் குடிசைகளை சரித்து தரைமட்டம் ஆக்கிக் கொண்டிருக்கிறது. அந்த புல்டோஸரில் அவனுடைய கம்பெனியின் பெயர் பொறிக்கப் பட்டிருக்கிறது. படம் முடிகிறது.
வீடு என்றால் விடுதலை. அது ஒரு பெரும் பேறு. அதனால் தான் அதை வீடுபேறு என்கிறார்கள். ஈறு இல்லாத இன்ப வெள்ளம் அது. அதை அடைவது எப்படி?
நம்மாழ்வார் இப்படிச் சொல்கிறார்.
நன்றாய் ஞானம் கடந்து போய்
நல்இந்திரியம் எல்லாம் ஈர்த்து
ஒன்றாய்க் கிடந்த வரும் பெரும் பாழ்
உலப்பில் அதனை யுணர்ந்து உணர்ந்து
சென்று ஆங்கு இன்ப துன்பங்கள்
செற்றுக் களைந்து பசை யற்றால்
அன்றே அப்போதே வீடு
அதுவே வீடு வீடாமே
இந்திரியங்களைக் கடக்க வேண்டும். விருப்பு வெறுப்பைக் கடக்க வேண்டும். இன்ப துன்பங்களைக் களைய வேண்டும். பற்று அறுக்க வேண்டும். இப்படிச் செய்தால் அப்போதே வீடு.
எத்தனை சுலபம் என்று தோன்றுகிறது. ஆனால் அத்தனை சுலபம் இல்லை.

Wonderful 💐 ..
ReplyDeleteWonderful
ReplyDeleteThank you Suresh
Deleteநூறாவது பதிவு அருமை
ReplyDeleteநன்றி
DeleteYet another wonderful post. I felt as if I have seen the film Mane.
ReplyDeleteYou have a distinct style . ...
Thank you Ram
Deleteஅருமையான கதை படித்தேன். வாழ்க்கை அவ்வளவு சுலபமில்லை. நுறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ராம் தொடர்ந்து படித்து ஊக்கப்படுத்துவதற்கு
ReplyDeleteparpaan ahathule paalpasu aindhundu
ReplyDeletemeyparumindri verithu thirivana
meyparum vandu veryium adanginsl
parpan pasuaindhum paalay soriyume
said by Thirumoolar
adhudhsn. mane
narasimhan
Arumai Narasimhan
Deleteபார்ப்பான் அகத்துள்ளே பால்பசு ஐந்துண்டு// மேய்ப்பாரின்றி வெறித்துத் திரிவன// மேய்ப்பாரும் வந்து வெறியும் அடங்கினால்// பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ச் சொரியுமே
ReplyDeleteதிருமூலர்