Skip to main content

நான் யாரும் இல்லை

 அது 1993 ம் வருடம். மதுரையில் நாடக விழா நடந்தது. கோமல் சுவாமிநாதன் பொறுப்பேற்று நடத்தினார். பல நவீன நாடகக் குழுக்கள் பங்கேற்றன.  ஞாநியின் பரீஷா குழுவும் அதில் அடக்கம்.அன்று துவக்க விழா. நான் அரங்கிற்கு வெளியே இருந்தேன். விழாவைத் துவக்க இருந்தவர் எழுத்தாளர் சுஜாதா. ஒரு கார் அவரை இறக்கி விட்டுச் சென்றது. இறங்கிய அவர் என் மீது ஏறக்குறைய மோதுவது போல ஆயிற்று. சென்ற வாரக் குமுதத்தில் 21ம் விளிம்பு என்று அவர் எழுதிய கட்டுரைத் தொடரில் என்னுடைய கவிதைத் தொகுப்பிலிருந்து ஒரு கவிதையை சிலாகித்து எழுதியிருந்தார். எனது நண்பன் ஆர்க்கே நான் கையெழுத்து இட்டுத் தந்திருந்த கவிதைத் தொகுப்பின் ஒரு பிரதியை அவரிடம் தந்திருக்கிறான்.

நான் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்த போது இதை சுஜாதா குறிப்பிட்டார். "In future everybody will be famous for at least a few minutes" என்று அவர் எப்போதோ எழுதியிருந்ததைக் குறிப்பிட்டேன். சுஜாதா கண்களை அகல விரித்துப் பார்த்தார்.  ஓரு கல்லூரி மாணவனுக்கு உரிய பரபரப்பும் வேகமும் அவரது பேச்சில் இருந்தது.  "கலாப்ரியா வந்திருக்கிறாரா" என்று ஆசையுடன் கேட்டார். கூட்டம் சேர்ந்திருந்து எங்களை விலகி நின்று வேடிக்கை பார்த்தபடி இருந்தது. கையில் ஒரு தோல் பையுடன் வந்த கோமல் சுவாமிநாதன் கவர்ந்து செல்லும் வரை என்னுடன் தான் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தான் சொன்னார். எமிலி டிக்கின்ஸன் தன் வாழ்நாளில் கவிதைகளைத் தொகுத்து பதிப்பித்ததே இல்லை என்று.





ஆமாம். எமிலி டிக்கின்ஸன் மறைந்த பிறகுதான் அவருடைய கவிதைத் தொகுப்புகள் வெளி வந்தன. கத்தோலிக்க மரபின் படி வளர்க்கப்பட்டார் அவர். வாழ்க்கை முழுதும் தனிமை அவரைச் சூழ்ந்திருந்தது. திருமணம் என்ற ஏற்பாட்டை அவர் ஏற்கவில்லை.


எமிலி டிக்கின்ஸனின் சில கவிதைகளை.. சில கவிதைப் பகுதிகளை சமீபத்தில் தமிழில் செய்தேன்.


If I can stop one heart from breaking,

I shall not live in vain;

If I can ease one life the aching,

Or cool one pain,

Or help one fainting robin

Unto his nest again,

I shall not live in vain.


Emily Dickinson


ஒரு இதயத்தை நொறுங்கி விடாமல்

நான் காத்தால்

நான் வாழ்வது வீண் அல்ல


நான் ஒரு வாழ்க்கையை நோவிலிருந்து

தணிக்க முடிந்தால்

ஒரு வலியை ஆற்ற முடிந்தால்

ஒரு மயங்கும் குருவியை

அதனுடைய கூடு சேர்த்தால்


நான் வாழ்வது வீண் அல்ல




Hope” is the thing with feathers -

That perches in the soul -

And sings the tune without the words -

And never stops - at all -


And sweetest - in the Gale - is heard -

And sore must be the storm -

That could abash the little Bird

That kept so many warm -


I’ve heard it in the chillest land -

And on the strangest Sea -

Yet - never - in Extremity,

It asked a crumb - of me


நம்பிக்கை


நம்பிக்கை என்பது இறகுகள் இல்லாத ஒன்று

அது உயிராகிய கிளையில் தொற்றிக் கொண்டு இருக்கிறது

அது ஒரு மெட்டைப் பாடுகிறது

வார்த்தைகள் இல்லாமல்

அதை ஒருபொழுதும் நிறுத்துவதில்லை


மிகவும் இனிமையான ஒன்று

புயல் காற்றில் கேட்கிறது

அது பலரைக் கதகதப்பாக வைத்திருந்த

சின்னஞ் சிறிய பறவையை

சங்கடப்படுத்தக் கூடும்


நான் சில்லிட்ட நிலங்களில் 

அதைக் கேட்டிருக்கிறேன்

விசித்திரமான கடலில்..

ஆனால் எந்த மோசமான நிலையிலும்

அது எனது  ஒரு சிறு

ரொட்டித் துண்டைக் கூட கேட்டதில்லை


When I died


I heard a Fly buzz – when I died –

The Stillness in the Room

Was like the Stillness in the Air –

Between the Heaves of Storm –



நான் இறந்த போது


நான் இறந்தபோது ஒரு ஈ

பறந்து செல்லும் மெல்லிய ஒலி கேட்டது

அறையில் இருந்த அசைவின்மை

காற்றில் இருந்த அசைவின்மை போல இருந்தது

அமிழ்ந்து எழும் புயலுக்கு நடுவில் உள்ள அசைவின்மை போல


‘I’m Nobody! Who are you?’.


I’m Nobody! Who are you?

Are you – Nobody – too?

Then there’s a pair of us!

Don’t tell! they’d advertise – you know




நான் யாரும் இல்லை, நீ யார்?

நீயும் கூட யாரும் இல்லை தானா?

அப்படி என்றால் நாம் ஒரு ஜோடி தான்

சொல்லி விடாதே எவரிடமும்

விளம்பரப் படுத்தி விடுவார்கள்

தெரியும் தானே?



ஆங்கிலத்திலிருந்து தமிழில் 


தி சந்தானம் 

Comments

  1. சுஜாதா கற்றதும் பெற்றதும்ல குறிப்பிட்ட அந்த கவிதை "நாற்காலி" யோ

    ReplyDelete
    Replies
    1. இது தொட்டில் ராட்டினம் பற்றிய கவிதை

      Delete
  2. Precious memories presented in an enjoyable narrative. You have to publish your translations sometime soon. Have you ever tried translating Gulzar?

    ReplyDelete
  3. சந்தானம் சுஜாதாவுடன் அளவளாவியது குறித்து என்னிடம் ஏற்கனவேயே தெரிவித்தது என் நினைவிற்கு வருகிறது. கவிதை அருமையான மொழி பெயர்ப்பு. ரசிக்க முடிந்தது

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராம் நினைவு கூர்ந்ததற்கும் மொழிபெயர்ப்பை பாராட்டியதற்கும்

      Delete
    2. வருடங்கள் எவ்வளவு வேகமாக ஓடிவிட்டன. நினைத்து பழைய இனிமையான நினைவுகளை அசை போடுகிறேன்.

      Delete
    3. ஓடுகின்றனன் கதிரவன் அவன் பின்னே ஓடுகின்றன நாட்கள்

      Delete
  4. மொழிபெயர்ப்பு அருமை.

    ReplyDelete
  5. you are our sujatha. nice kavithai

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...