அது 1993 ம் வருடம். மதுரையில் நாடக விழா நடந்தது. கோமல் சுவாமிநாதன் பொறுப்பேற்று நடத்தினார். பல நவீன நாடகக் குழுக்கள் பங்கேற்றன. ஞாநியின் பரீஷா குழுவும் அதில் அடக்கம்.அன்று துவக்க விழா. நான் அரங்கிற்கு வெளியே இருந்தேன். விழாவைத் துவக்க இருந்தவர் எழுத்தாளர் சுஜாதா. ஒரு கார் அவரை இறக்கி விட்டுச் சென்றது. இறங்கிய அவர் என் மீது ஏறக்குறைய மோதுவது போல ஆயிற்று. சென்ற வாரக் குமுதத்தில் 21ம் விளிம்பு என்று அவர் எழுதிய கட்டுரைத் தொடரில் என்னுடைய கவிதைத் தொகுப்பிலிருந்து ஒரு கவிதையை சிலாகித்து எழுதியிருந்தார். எனது நண்பன் ஆர்க்கே நான் கையெழுத்து இட்டுத் தந்திருந்த கவிதைத் தொகுப்பின் ஒரு பிரதியை அவரிடம் தந்திருக்கிறான்.
நான் என்னை அறிமுகப் படுத்திக் கொண்டு பேச ஆரம்பித்த போது இதை சுஜாதா குறிப்பிட்டார். "In future everybody will be famous for at least a few minutes" என்று அவர் எப்போதோ எழுதியிருந்ததைக் குறிப்பிட்டேன். சுஜாதா கண்களை அகல விரித்துப் பார்த்தார். ஓரு கல்லூரி மாணவனுக்கு உரிய பரபரப்பும் வேகமும் அவரது பேச்சில் இருந்தது. "கலாப்ரியா வந்திருக்கிறாரா" என்று ஆசையுடன் கேட்டார். கூட்டம் சேர்ந்திருந்து எங்களை விலகி நின்று வேடிக்கை பார்த்தபடி இருந்தது. கையில் ஒரு தோல் பையுடன் வந்த கோமல் சுவாமிநாதன் கவர்ந்து செல்லும் வரை என்னுடன் தான் பேசிக் கொண்டிருந்தார். அப்போது தான் சொன்னார். எமிலி டிக்கின்ஸன் தன் வாழ்நாளில் கவிதைகளைத் தொகுத்து பதிப்பித்ததே இல்லை என்று.
ஆமாம். எமிலி டிக்கின்ஸன் மறைந்த பிறகுதான் அவருடைய கவிதைத் தொகுப்புகள் வெளி வந்தன. கத்தோலிக்க மரபின் படி வளர்க்கப்பட்டார் அவர். வாழ்க்கை முழுதும் தனிமை அவரைச் சூழ்ந்திருந்தது. திருமணம் என்ற ஏற்பாட்டை அவர் ஏற்கவில்லை.
எமிலி டிக்கின்ஸனின் சில கவிதைகளை.. சில கவிதைப் பகுதிகளை சமீபத்தில் தமிழில் செய்தேன்.
If I can stop one heart from breaking,
I shall not live in vain;
If I can ease one life the aching,
Or cool one pain,
Or help one fainting robin
Unto his nest again,
I shall not live in vain.
Emily Dickinson
ஒரு இதயத்தை நொறுங்கி விடாமல்
நான் காத்தால்
நான் வாழ்வது வீண் அல்ல
நான் ஒரு வாழ்க்கையை நோவிலிருந்து
தணிக்க முடிந்தால்
ஒரு வலியை ஆற்ற முடிந்தால்
ஒரு மயங்கும் குருவியை
அதனுடைய கூடு சேர்த்தால்
நான் வாழ்வது வீண் அல்ல
Hope” is the thing with feathers -
That perches in the soul -
And sings the tune without the words -
And never stops - at all -
And sweetest - in the Gale - is heard -
And sore must be the storm -
That could abash the little Bird
That kept so many warm -
I’ve heard it in the chillest land -
And on the strangest Sea -
Yet - never - in Extremity,
It asked a crumb - of me
நம்பிக்கை
நம்பிக்கை என்பது இறகுகள் இல்லாத ஒன்று
அது உயிராகிய கிளையில் தொற்றிக் கொண்டு இருக்கிறது
அது ஒரு மெட்டைப் பாடுகிறது
வார்த்தைகள் இல்லாமல்
அதை ஒருபொழுதும் நிறுத்துவதில்லை
மிகவும் இனிமையான ஒன்று
புயல் காற்றில் கேட்கிறது
அது பலரைக் கதகதப்பாக வைத்திருந்த
சின்னஞ் சிறிய பறவையை
சங்கடப்படுத்தக் கூடும்
நான் சில்லிட்ட நிலங்களில்
அதைக் கேட்டிருக்கிறேன்
விசித்திரமான கடலில்..
ஆனால் எந்த மோசமான நிலையிலும்
அது எனது ஒரு சிறு
ரொட்டித் துண்டைக் கூட கேட்டதில்லை
When I died
I heard a Fly buzz – when I died –
The Stillness in the Room
Was like the Stillness in the Air –
Between the Heaves of Storm –
நான் இறந்த போது
நான் இறந்தபோது ஒரு ஈ
பறந்து செல்லும் மெல்லிய ஒலி கேட்டது
அறையில் இருந்த அசைவின்மை
காற்றில் இருந்த அசைவின்மை போல இருந்தது
அமிழ்ந்து எழும் புயலுக்கு நடுவில் உள்ள அசைவின்மை போல
‘I’m Nobody! Who are you?’.
I’m Nobody! Who are you?
Are you – Nobody – too?
Then there’s a pair of us!
Don’t tell! they’d advertise – you know
நான் யாரும் இல்லை, நீ யார்?
நீயும் கூட யாரும் இல்லை தானா?
அப்படி என்றால் நாம் ஒரு ஜோடி தான்
சொல்லி விடாதே எவரிடமும்
விளம்பரப் படுத்தி விடுவார்கள்
தெரியும் தானே?
ஆங்கிலத்திலிருந்து தமிழில்
தி சந்தானம்
சுஜாதா கற்றதும் பெற்றதும்ல குறிப்பிட்ட அந்த கவிதை "நாற்காலி" யோ
ReplyDeleteஇது தொட்டில் ராட்டினம் பற்றிய கவிதை
DeletePrecious memories presented in an enjoyable narrative. You have to publish your translations sometime soon. Have you ever tried translating Gulzar?
ReplyDeleteगुलजार..Not yet Janani I shall do it
Deleteசந்தானம் சுஜாதாவுடன் அளவளாவியது குறித்து என்னிடம் ஏற்கனவேயே தெரிவித்தது என் நினைவிற்கு வருகிறது. கவிதை அருமையான மொழி பெயர்ப்பு. ரசிக்க முடிந்தது
ReplyDeleteநன்றி ராம் நினைவு கூர்ந்ததற்கும் மொழிபெயர்ப்பை பாராட்டியதற்கும்
Deleteவருடங்கள் எவ்வளவு வேகமாக ஓடிவிட்டன. நினைத்து பழைய இனிமையான நினைவுகளை அசை போடுகிறேன்.
Deleteஓடுகின்றனன் கதிரவன் அவன் பின்னே ஓடுகின்றன நாட்கள்
Deleteமொழிபெயர்ப்பு அருமை.
ReplyDeleteநன்றி மதி
Deleteyou are our sujatha. nice kavithai
ReplyDeleteThank you
Delete