Skip to main content

கரையேற வேண்டாமா

 சமீபத்தில் ஒரு பாடலைக் கேட்டேன். அது பெரியசாமி தூரன் எழுதியது. இந்தப் பெயரை நம்மில் அநேகர் கேட்டிருப்போம். இவர் எழுதிய எளிமையான பாடல்கள் ஆரம்பப் பள்ளிக் கால தமிழ் பாட நூல்களில் படித்த ஞாபகம் இருக்கிறது. குறிப்பாக நத்தையாரே நத்தையாரே அத்தை வீடு பயணமா என்ற பாட்டு. ஞாபகம் வருகிறதா? அத்தை வீடு போக முதுகில் தண்ணீர்க் குடம் வேணுமோ என்று அடுத்த வரி மனதில் தோன்றுகிறதா?


சரி. நான் கேட்ட பாடலுக்கு வருகிறேன். அது கரையேற வேண்டாமா என்ற பாடல். டி.எம். தியாகராஜன் என்ற கர்நாடக இசைப் பாடகர் பாடியிருந்தார். இந்தப் பாடல் அமைந்த ராகம் ரசிக ரஞ்சனி என்று கண்டிருந்தது. நான் கர்நாடக இசையைப் பயின்றவன் அல்ல. நிறையக் கேட்டிருக்கிறேன். கற்றலிற் கேட்டலே நன்று என்பது வேதம் அல்லவா?   எனது சிறு வயதில் சங்கீதம் வானொலிப் பெட்டியிலிருந்து பெருகி வரும். அப்பா அதைக் கேட்டுக் கொண்டிருப்பார். சில சமயம் கண்ணாடி அணிந்த  அவர் கண்களில் நீர் நிறைந்து இருக்கும். ஆஹா என்று ஒரு அனுபூதியில் திளைத்து இருப்பார். அந்தக் காட்சியைப் பார்க்கவே பரவசமாக இருக்கும்.  


கேட்டுக் கேட்டுப் பழகிய மனம் இது இன்ன ராகம் என்று அறிந்து கொண்டு விடுகிறது. டி.எம்.தியாகராஜன் பாட நான் கேட்ட ரசிக ரஞ்சனி ராகத்தில் மனம் நிறைந்து நெகிழ்ந்து ஓடியது. 





கேட்டு முடித்தவுடன் வழக்கம் போல இதே ராகத்தில் திரை இசைப் பாடல் ஏதேனும் இருக்கிறதா என்று மனம் தேட ஆரம்பித்தது. அந்தத் தேடலில் நான் கண்டடைந்த பாடல் மகுடி என்ற திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்த இந்தப் பாடல். நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன் என்ற பாடல். பின்னணி இசைக் கோர்வையில் ஒரு ஒற்றை வயலின் ஒலிக்கும் போது கண்களில் கண்ணீர் கட்டியது. கேளுங்கள்




Comments

  1. அருமையான ராகம். கேட்க மிகவும் சுகம். அமுதே தமிழே வரும் இந்த ராகம் தானே.

    ReplyDelete
  2. அப்படித்தான் தோன்றுகிறது

    ReplyDelete
  3. அருமையான ராகம். மீண்டும் கேட்கத் தோன்றுகிறது. பெரியசாமி தூரன் மற்றும் டி எம் தியாகராஜன் மிகவும் பரிச்சயம். வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராம் படித்ததற்கும் கேட்டதற்கும்.

      Delete
  4. mrudha pankajalochani paattu santhanam paadi ketta gnapakam

    ReplyDelete
  5. Great ficus on Rasika Ranjani..This Raaga would resemble Mohanam, bcoz except Rishabham being Ri1 in both Aarohanam & Avarohanam in the former, other swarms are the same, ie, ga3 pa da2 s. It is Ri2 in Mohanam Similarly, it would also resembles Purvikalyani (karanam kettu vaadi) when Ma2 in Aarohanam and M2 and Ni3 is avarohanam are touched. Each Raga is unique whether janyam or melakartha. But as children resembles a bit with parents and siblings and cousins, identifying the families of these Raagas belonging to, is a full of surprises and excitement for music lover beyond being a Rasika of kritis and songs.

    ReplyDelete
  6. Thanks RVS for your indepth analysis. I look forward to derive better insight on ragas from you in the days ahead

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...