சமீபத்தில் ஒரு பாடலைக் கேட்டேன். அது பெரியசாமி தூரன் எழுதியது. இந்தப் பெயரை நம்மில் அநேகர் கேட்டிருப்போம். இவர் எழுதிய எளிமையான பாடல்கள் ஆரம்பப் பள்ளிக் கால தமிழ் பாட நூல்களில் படித்த ஞாபகம் இருக்கிறது. குறிப்பாக நத்தையாரே நத்தையாரே அத்தை வீடு பயணமா என்ற பாட்டு. ஞாபகம் வருகிறதா? அத்தை வீடு போக முதுகில் தண்ணீர்க் குடம் வேணுமோ என்று அடுத்த வரி மனதில் தோன்றுகிறதா?
சரி. நான் கேட்ட பாடலுக்கு வருகிறேன். அது கரையேற வேண்டாமா என்ற பாடல். டி.எம். தியாகராஜன் என்ற கர்நாடக இசைப் பாடகர் பாடியிருந்தார். இந்தப் பாடல் அமைந்த ராகம் ரசிக ரஞ்சனி என்று கண்டிருந்தது. நான் கர்நாடக இசையைப் பயின்றவன் அல்ல. நிறையக் கேட்டிருக்கிறேன். கற்றலிற் கேட்டலே நன்று என்பது வேதம் அல்லவா? எனது சிறு வயதில் சங்கீதம் வானொலிப் பெட்டியிலிருந்து பெருகி வரும். அப்பா அதைக் கேட்டுக் கொண்டிருப்பார். சில சமயம் கண்ணாடி அணிந்த அவர் கண்களில் நீர் நிறைந்து இருக்கும். ஆஹா என்று ஒரு அனுபூதியில் திளைத்து இருப்பார். அந்தக் காட்சியைப் பார்க்கவே பரவசமாக இருக்கும்.
கேட்டுக் கேட்டுப் பழகிய மனம் இது இன்ன ராகம் என்று அறிந்து கொண்டு விடுகிறது. டி.எம்.தியாகராஜன் பாட நான் கேட்ட ரசிக ரஞ்சனி ராகத்தில் மனம் நிறைந்து நெகிழ்ந்து ஓடியது.
கேட்டு முடித்தவுடன் வழக்கம் போல இதே ராகத்தில் திரை இசைப் பாடல் ஏதேனும் இருக்கிறதா என்று மனம் தேட ஆரம்பித்தது. அந்தத் தேடலில் நான் கண்டடைந்த பாடல் மகுடி என்ற திரைப்படத்தில் இளையராஜா இசையமைத்த இந்தப் பாடல். நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன் என்ற பாடல். பின்னணி இசைக் கோர்வையில் ஒரு ஒற்றை வயலின் ஒலிக்கும் போது கண்களில் கண்ணீர் கட்டியது. கேளுங்கள்
அருமையான ராகம். கேட்க மிகவும் சுகம். அமுதே தமிழே வரும் இந்த ராகம் தானே.
ReplyDeleteஅப்படித்தான் தோன்றுகிறது
ReplyDelete👌👍🙏
ReplyDeleteஅருமையான ராகம். மீண்டும் கேட்கத் தோன்றுகிறது. பெரியசாமி தூரன் மற்றும் டி எம் தியாகராஜன் மிகவும் பரிச்சயம். வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ராம் படித்ததற்கும் கேட்டதற்கும்.
Deletemrudha pankajalochani paattu santhanam paadi ketta gnapakam
ReplyDeleteAdhu Ranjani
ReplyDeleteGreat ficus on Rasika Ranjani..This Raaga would resemble Mohanam, bcoz except Rishabham being Ri1 in both Aarohanam & Avarohanam in the former, other swarms are the same, ie, ga3 pa da2 s. It is Ri2 in Mohanam Similarly, it would also resembles Purvikalyani (karanam kettu vaadi) when Ma2 in Aarohanam and M2 and Ni3 is avarohanam are touched. Each Raga is unique whether janyam or melakartha. But as children resembles a bit with parents and siblings and cousins, identifying the families of these Raagas belonging to, is a full of surprises and excitement for music lover beyond being a Rasika of kritis and songs.
ReplyDeleteThanks RVS for your indepth analysis. I look forward to derive better insight on ragas from you in the days ahead
ReplyDelete