Skip to main content

மிலன் நகரில் ஒரு அற்புதம்

 



ஒரு சின்னப் பொந்து போதும்

தங்கிட  அங்கேயே உறங்கி விழ


ஒரு சின்னத் துண்டு நிலம் போதும்

வாழ்ந்திட அங்கேயே மடிந்து விட


ஓரு ஜதை காலணி காலுறைகள் 

மென்றிட  ஓர் துண்டு ரொட்டி 


இதுவே நாங்கள் வேண்டுவது

நாளைய தினத்தை நம்புதற்கு 


மிலன் நகரில் ஓர் அற்புதம்  (Miracle in Milan) என்று ஓரு இத்தாலியத் திரைப்படம். இதில் மேலே சொன்ன பாடல் வரும்.  Bicycle Thieves என்ற படத்தை இயக்கிய விட்டோரியா டி சிகா தான் இந்தப் படத்தின் இயக்கம். ரியலிஸம் தான் விட்டோரியா வின் முத்திரை என்றாலும் இந்தப் படத்தில் கொஞ்சம் ஃபான்டஸியும் கலந்திருப்பது ஒரு மாறுபட்ட திரை அனுபவத்தைத் தருகிறது.  லோலட்டா முதிய பெண்மணி. தனியே வசித்து வருகிறாள். ஒரு நாள் தான் பயிரிட்டிருந்த முட்டைக்கோஸ் செடிகளுக்கு நடுவே ஒரு குழந்தையைப் பார்க்கிறாள். எடுத்து வளர்க்கிறாள். அவன் வளர்ந்து பையன் ஆகிறான். அவனுக்கு வாய்ப்பாடு சொல்லித் தருகிறாள். ஒருநாள் இறந்து போகிறாள். பையன் அனாதை இல்லத்தில் வளர்கிறான். வாலிபனாக வெளியே வருகிறான். அவன் பெயர் டோடோ. சிரித்த முகமும் உதவி செய்யும் குணம் உடையவனாகவும் இருக்கிறான். எனவே அவனை அசடன் என்று சொல்லலாம். புனிதன் என்றும் சொல்லலாம். எவ்வாறோ ஊருக்கு வெளியே வந்து சேருகிறான். வறுமையே பரிசாகப் பெற்றவர்களோடு கலந்து விடுகிறான். உடைந்து போன தகரங்கள் மற்றும் மரச் சாமான்களைக் கொண்டு வாழ்விடம் என்ற வடிவம் கொண்ட பொந்துகள். அவை பெரும் பனிப் பொழிவைத் தாங்கி விடுமா என்ன?  பனிப் புயல் வரும் போது கூரையாக இருக்கும் தகரங்கள் எல்லாம் பறந்து போய் விடும். மீண்டும் உடமைகளையும்  சிதறிய வாழ்க்கையையும் சேகரித்துக் கொள்ள வேண்டும். அவர்கள் மகிழ்ச்சியாகவே இருந்தார்கள். அந்த மகிழ்ச்சிக்கு எப்போதும் சிரிப்பவனும் எப்போதும் உதவி செய்பவனும் ஆன டோடோ துணை நிற்கிறான்.. தொடர்ந்து பனி பெய்யும். சில பொழுது சிறு கீற்றாய் சூரிய ஒளி தோன்றும். அந்த வெம்மையைத் தேடி ஓடி இடம் பிடிக்க எல்லோரும் போட்டி போடுவார்கள்.


அவர்கள் வாழ்கின்ற இடத்துக்கு மிக அருகே ரயில் பாதை இருக்கிறது

ஒரு முறை அங்கு வாழும் ஒருவன் ரயிலின் குறுக்கே பாய்ந்து தனது உயிரை மாய்த்துக் கொள்ள நினைக்கிறான். டோடோ விரைந்து சென்று அவனைக் காப்பாற்றுகிறான்.  அவனுடைய தற்கொலை முடிவுக்குக் காரணம் கேட்கிறான். வாழ்க்கை சலித்துப் போனதாகச் சொல்கிறான். டோடோ அதை மறுக்கிறான். வாழ்க்கை அற்புதமானது என்று சொல்கிறான். லா..லா..லா. என்று சொல்லிக் பார். சலிப்பு போய்விடும் என்கிறான். 


ஓருநாள் யாரோ தற்செயலாக ஒரு இடத்தில் தோண்டும் போது தண்ணீருக்குப் பதிலாக பெட்ரோல் நீருற்றுப் போல வருகிறது. உடனே ஒரு பெரும் முதலாளி கையில் சில காகிதங்களோடு வருகிறான். இந்த இடம் எனக்குச் சொந்தம். நீங்கள் எல்லோரும் காலி செய்ய வேண்டும் என்று சொல்கிறான்.  அது அப்படித்தானே நடக்கும்?  சனங்கள் அனைவரும் ஒன்று கூடி எதிர்க்கிறார்கள். உடனே அந்தப் பெரும் பணக்காரன் உங்களுக்கும் கையில் ஐந்து விரல்கள். எனக்கும் அப்படியே என்று சமாதானமாகப் பேசி விட்டு அகன்று விடுகிறான்.


ஆனால் ஓரிரு நாள் கழித்து இரவு நேரத்தில் படையுடன் வருகிறான். சனங்கள் மீண்டும் எதிர்க்கிறார்கள். அவர்கள் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசச் செய்கிறான். அனைவரும் கலைந்து ஓடுகிறார்கள். டோடோவும் ஓடுகிறான். ஓடிச் சென்று ஒரு உயரமான கம்பத்தின் மீது ஏறிப் பார்க்கிறான். அப்போது நிழலைப் போல அவனைக் கண்டெடுத்து வளர்த்த அன்னை வானத்திலிருந்து இறங்குகிறாள்.  ஒரு வெண்புறாவை அவனிடம் தருகிறாள். புறாவை நீ கைகளில் ஏந்திக் கொண்டு எதைக் கேட்டாலும் கிடைக்கும் என்கிறாள். நிலவை வேண்டினாலும் கிடைக்கும் என்கிறாள். 


முதல் வேலையாகப் புறாவைக் கையில் ஏந்தியபடி கண்ணீர்ப் புகை குண்டு வீசுபவர்களை விரட்டி விடுகிறான். அவர்கள் கலைந்து சென்று பதுங்கி இருக்கிறார்கள். காலை புலர்ந்த உடன் மீண்டும் தாக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு.  குடியிருப்பு வாசிகள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விருப்பம்.

வரிசை வரிசையாக அவனிடம் வருகிறார்கள்.  விரும்பிய எல்லாவற்றையும் டோடோ நிறைவேற்றுகிறான்.  அந்தக் கூட்டத்தில் அவன் விரும்புகின்ற பெண் ஒருத்தி இருந்தாள். இவனையே பார்த்துக் கொண்டிருந்த அவள் கூட்டத்தை விட்டு விலகி ஓடுகிறாள். எல்லோருடைய விருப்பத்தையும் நிறைவேற்றினோம். இவளுக்கு ஒன்றும் செய்யவில்லை என்பதை உணர்ந்த டோடோ அவள் பின்னால் ஓடுகிறான். உனக்கு என்ன வேண்டும் கேள் என்கிறான். அவள் மிகுந்த கூச்சத்துடன் ஒரு ஜதை செருப்பை வேண்டுகிறாள். கிடைக்கிறது. ஏதாவது பெரிதினும் பெரிதாக கேள் என்று டோடோ அவளைத் தூண்டுகிறான். அவள் அதிகாலை சூரியனைக் கேட்கிறாள். உடனே வெள்ளி முளைக்கிறது. இதற்கிடையில் வானத்திலிருந்து இறங்கும் கந்தர்வர்கள் புறாவைக் கவர்ந்து சென்று விடுகிறார்கள். இந்த சந்தர்ப்பத்துக்காகவே காத்திருந்தது போல் பதுங்கியிருந்தவர்கள் இவர்கள் மீது தங்கள் வலிமையை உபயோகித்து  குடும்பம் குடும்பமாக வண்டியில் ஏற்றி குடியிருப்பைக் காலி செய்ய வைக்கிறார்கள். வண்டிகள் ஒவ்வொன்றாக குதிரைகள் இழுக்கக் கிளம்புகின்றன. டோடோவின் காதலி ஏதோ ஒரு புறாவைக் கொண்டு வந்து நகரும் வண்டியில் இருக்கும் டோடோவிடம் தருகிறாள்.  அவளுடன் ஒரு நிழல் உருவமாக அவனது வளர்ப்பு அன்னையும் வருவது போலத் தோன்றுகிறது. தன்னுள்ளே பெருகும் நம்பிக்கையுடன் அவன் வேண்டுகிறான். நாற்புறமும் வண்டி பிளந்து விழ எல்லோரும் தப்பி ஓடுகிறார்கள். மிலன் நகரில் முக்கியமான பகுதியில் இருக்கும் நூற்றாண்டுப் பழமையான தேவாலயக் கட்டிடத்திற்கு அருகில் வருகிறார்கள். துப்புரவுத் தொழிலாளர்கள் கையில் இருக்கும் நீண்ட துடப்பத்தைக் கவர்ந்து கொள்ளுமாறு டோடோ கூறுகிறான். அதை ஒரு வாகனம் போலப் பாவித்து அனைவரும் விண்ணின் மீது பறக்கிறார்கள். நகரின் உயரமான கட்டடங்கள் மீது உயர்ந்து அவர்களது வாகனம் செல்கிறது. மேகங்களில் மறைகிறது. அப்போது நாம் கட்டுரையின் துவக்கத்தில் குறிப்பிட்ட பாடலை அனைவரும் பாடுகிறார்கள்.


ஒரு சின்னப் பொந்து போதும்

தங்கிட  அங்கேயே உறங்கி விழ


ஒரு சின்னத் துண்டு நிலம் போதும்

வாழ்ந்திட அங்கேயே மடிந்து விட


ஓரு ஜதை காலணி காலுறைகள் 

மென்றிட  ஓர் துண்டு ரொட்டி 


இதுவே நாங்கள் வேண்டுவது

நாளைய தினத்தை நம்புதற்கு 



எளிய மக்களின் தேவைகள் மிகவும் சிறியவை. ஆனால் அவைகள் இங்கு நிறைவேறுவது  சாத்தியம் அல்லவோ என்று தோன்றுகிறது. 

ஏதாவது அற்புதம் நிகழ வேண்டியிருக்கிறது.


இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய வாழ்க்கை ஐரோப்பியர்களுக்குப் பெரும் சவாலாகவே இருந்திருக்கிறது. இதைத்தான் விட்டோரியா  1951ம் வருடம் வெளிவந்த மிலன் நகரில் ஒரு அற்புதம் 

என்ற திரைப்படத்தில் சொல்கிறார். மெய் போலவும் மெய் போன்ற பொய்யாகவும்.




Comments

  1. தகவலுக்கு நன்றி. அருமையாக இருக்கிறது. யூ ட்யூப்ல பார்த்துண்டு இருக்கேன். ஒண்ணு யோசிச்சியா? வசதி சற்றுக் குறைவாக இருந்த 70 களும் 80களும் இப்பய விட மகிழ்வான நாட்கள். சில இல்லைகள் ஒரு பொருட்டாகவே தோன்றியதில்லை.

    ReplyDelete
  2. நன்றி ஜெயந்தி. பல இல்லைகள் பொருட்டாக இருந்ததில்லை

    ReplyDelete
  3. படம் முடிந்து மீண்டும் படித்தேன். அவ்வளவு அழகாக விவரித்திருக்கிறாய், திரையில் பார்த்ததை. க்ளைமாக்ஸ் ஹாரி பாட்டர் ஸ்டைல்ல போச்சே..🙂🙂

    ReplyDelete
  4. கதை மனதைத் தொடுவதாக இருந்தது. You tube லும் இந்தப்படம் இருந்தது. பார்க்கிறேன். பதிவுக்கு நன்றி

    ReplyDelete
  5. நன்றி ராம். பாருங்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...