வாஸ்கோ போபா செர்பியக் கவிஞர். இவருடைய கவிதை மொழி இயல்பான பேச்சுத் தன்மை கொண்டிருக்கிறது. நாட்டார் கதைப் பாணியையும் தரித்திருக்கிறது. இவரது இரண்டு கவிதைகளைத் தேர்வு செய்து மொழி பெயர்க்க வாய்த்தது.
A Conceited Mistake
Once upon a time there was a mistake
So silly so small
That no one would even have noticed it
It couldn't bear
To see itself to hear of itself
It invented all manner of things
Just to prove
that it didn't really exist
It invented space
To put its proofs in
And time to keep its proofs
And the world to see its proofs
All it invented
Was not so silly
Nor so small
But was of course mistaken
Could it have been otherwise
Vasko Popa
முன்பொரு காலத்தில் ஒரு தவறு இருந்தது
மிகவும் அற்பமான தவறு
மிகவும் சிறிய தவறு
யாரும் கவனிக்கக் கூட மாட்டாத தவறு
அதற்குப் பொறுக்க வில்லை
தன்னைத் தானே காணவும்
தன்னைத் தானே கேட்கவும்
அது பலவற்றையும் கண்டறிந்தது
தான் இல்லவே இல்லை என்பதை நிரூபிக்க
அது வெளியைக் கண்டறிந்தது
தன் சான்றுகளை அங்கே இட்டு நிரப்ப
காலத்தை ..தன் சான்றுகளைப் பாதுகாக்க
உலகத்தை.. அந்த சான்றுகளைப் பார்க்க
அது கண்டறிந்தவை அனைத்தும் மிகவும் அற்பமானவை அல்ல
மிகவும் சிறியவை அல்ல
தவறாகப் புரிந்து கொள்ளப் பட்டவை
அது வேறு எவ்வாறு இருந்திருக்க முடியும்?
தமிழில் தி சந்தானம்
In The Village Of My Ancestors
Someone embraces me
Someone looks at me with the eyes of a wolf
Someone takes off his hat
So I can see him better
Everyone asks me
Do you know how I'm related to you
Unknown old men and women
Appropriate the names
Of young men and women from my memory
I ask one of them
Tell me for God's sake
Is George the Wolf still living
That's me he answers
With a voice from the next world
I touch his cheek with my hand
And beg him with my eyes
To tell me if I'm living too
Vasko Popa
எனது மூதாதையரின் கிராமத்தில்
சிலர் என்னைத் தழுவுகிறார்கள்
சிலர் என்னை ஓநாய்ப் பார்வை பார்க்கிறார்கள்
சிலர் முண்டாசை அவிழ்க்கிறார்கள்
நான் சரியாக அவர்களைப் பார்க்குமாறு
எல்லோரும் என்னைக் கேட்கிறார்கள், நான் உனக்கு என்ன சொந்தம் சொல்லு?
தெரியாத முதிய ஆண் பெண்கள், என் நினைவில் இருக்கும் இளைய ஆண் பெண் பெயர்களை எடுத்துக் கொள்கிறார்கள்
நான் அவர்களில் ஒருவரிடம் கேட்டேன் தயவு செய்து சொல்லுங்கள் ..பரமன் உயிரோடு இருக்கிறானா?
நான் தான்.. இதோ.. பதில் ஏதோ அடுத்த உலகத்திலிருந்து ஒலித்தது
நான் அவன் கன்னத்தைத் தொட்டேன் கண்களால் இறைஞ்சினேன் நானும் உயிரோடு இருக்கிறேனா சொல் என்று
தமிழில் தி சந்தானம்
குறிப்பு: ஆங்கில மூலத்தில் இருந்த ஜார்ஜ் என்ற பெயர் பரமன் என்று மாற்றம் கண்டிருக்கிறது
Very lovely thought aptly translated.
ReplyDeleteThank you
Deleteஅருமையான கவிதைகளும், மொழிபெயர்ப்பும். பரமன் விளக்கம்லாம் எதுக்கு? புரியறதே..
ReplyDeleteஹேட் கூடத்தான் முண்டாசா மாறி இருக்கு.
மண்ணின் மணம் வேணும்ல.. 🙂🙂தொடர்ந்து எழுது.
எல்லாம் ஒரு பயம் தான்.
DeleteAndam Brahmandam..unarndhal, adangum ullankaiyin ullum...
ReplyDelete