Skip to main content

என் நண்பர்களின் பட்டியல்

 

ஹெபா அபு நாடா என்ற பெண்மணி கவிஞர். இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டவர். கடந்த 20.10.2023 வெள்ளிக்கிழமை அன்று காஸாவில் நடந்த குண்டு வீச்சில் கொல்லப் பட்டார். அவருக்கு வயது 32.

அவர் எழுதிய கடைசிக் கவிதை

என் நண்பர்களின் பட்டியல்
சுருங்கி வருகிறது
நண்பர்கள்
சின்னச் சின்ன
சவப்பெட்டிகளாகிக் கொண்டிருக்கிறார்கள்
ஏவுகணைகளைவிட
வேகமாகப் பறந்திறக்கிற அவர்களை
என்னால்
மீட்க முடியவில்லை
காக்க முடியவில்லை
எனக்கு அழ முடியவில்லை
எனக்கு
என்ன செய்வதென்றும் தெரியவில்லை

ஒவ்வொரு நாளும்
என் நண்பர்களின் பட்டியல்
சுருங்கி வருகிறது
இது வெறும் பெயர்கள் அல்ல
வேறு பெயர்களிலும் முகங்களிலும் இருந்த
அவர்களும் நானே
நானும் அவர்களே

அல்லாவே
மாபெரும் இச் “சா” விருந்தில்
நான் என்ன செய்யமுடியும்

எந்தக் கொம்பனாலும்
கனவிலுங் கூட
என் நண்பர்களை மீட்டுத் தரமுடியாது.

– ஹெபா அபு நாடா

வினவு இணைய இதழில் இருந்து

Gaza’s night is dark apart from the glow of rockets, quiet apart from the sound of the bombs, terrifying apart from the comfort of prayer, black apart from the light of the martyrs. Good night, Gaza

From Literary Hub

கடைசி ட்வீட்

காசாவின் இரவில் ராக்கெட்டுகள் விண்ணில் ஏகுகின்றன. மற்றபடி இருட்டு தான். எங்கும் குண்டு வீச்சின் இரைச்சல். மற்றபடி அமைதி தான். எங்கும் அச்சம். ஆனாலும் தொழுகையின் ஆசுவாசம்.  எங்கும் கருமை. என்றாலும் மரித்தவர்களின் ஆன்மாவின் ஒளி.

குட் நைட், காஸா

We find ourselves in an indescribable state of bliss amidst the chaos. Amidst the ruins, a new city emerges—a testament to our resilience. Cries of pain echo through the air, mingling with the blood-stained garments of doctors. Teachers, despite their grievances, embrace their little pupils, while families display unwavering strength in the face 

From Literary Hub 

கடைசி எழுத்து

இந்தப் பெரும் குழப்பத்திலும் நாங்கள் விவரிக்க இயலாத பேரின்பத்தைக் காண்கிறோம். இந்த அழிவில் இருந்து ஒரு புதிய நகரம் எழுகிறது. எங்கள் உறுதிப்பாட்டின் சாசனம்.  வலியின் அழுகுரல்கள் காற்றில் எதிரொலி செய்கின்றன. மருத்துவர்களின் உடைகள் ரத்தக் கறை படிந்து இருக்கின்றன.  ஆசிரியர்களுக்கு முறைப்பாடுகள் இருக்கின்றன. ஆனாலும் தங்கள் மாணாக்கர்களை அவர்கள் தழுவிக் கொள்ளவே செய்கிறார்கள்.  குடும்பங்களின் அசையாத மன உறுதி முகத்தில் தெரிகின்றது.

தமிழில் தி சந்தானம்

பக்கம் பக்கமாக எழுதி உணர்த்த  முடியாததை ஒரு கவிதை சொல்லி விடும். ஒரு சில வார்த்தைகள்.  அவை வலி மிகுந்தவை.






Comments

  1. படித்தவுடன் மனம் சற்று கணக்கிறது. விழியோரம் நீர் கோர்க்கிறது. சமீபத்தில் கொல்லப்பட்டார் என்ற தகவல் வாழ்க்கையின் அர்த்தமே புரியாமல் போகிறது. இந்த விஷயத்தை வெளிக் கொணர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராம் படித்ததற்கும் உணர்வுகளை வெளிப்படுத்தியமைக்கும்

      Delete
  2. வலி மிகுந்த உணர்வை ஆழமாக கடத்துகிறது கவிதை

    ReplyDelete
    Replies
    1. நன்றி படித்ததற்கும் இங்கே பதிவிட்டதற்கும்

      Delete
  3. I am trying to say something for the past one day and words failed me.I let my silence speak instead.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...