ஹெபா அபு நாடா என்ற பெண்மணி கவிஞர். இலக்கிய உலகில் நன்கு அறியப்பட்டவர். கடந்த 20.10.2023 வெள்ளிக்கிழமை அன்று காஸாவில் நடந்த குண்டு வீச்சில் கொல்லப் பட்டார். அவருக்கு வயது 32.
அவர் எழுதிய கடைசிக் கவிதை
என் நண்பர்களின் பட்டியல்
சுருங்கி வருகிறது
நண்பர்கள்
சின்னச் சின்ன
சவப்பெட்டிகளாகிக் கொண்டிருக்கிறார்கள்
ஏவுகணைகளைவிட
வேகமாகப் பறந்திறக்கிற அவர்களை
என்னால்
மீட்க முடியவில்லை
காக்க முடியவில்லை
எனக்கு அழ முடியவில்லை
எனக்கு
என்ன செய்வதென்றும் தெரியவில்லை
ஒவ்வொரு நாளும்
என் நண்பர்களின் பட்டியல்
சுருங்கி வருகிறது
இது வெறும் பெயர்கள் அல்ல
வேறு பெயர்களிலும் முகங்களிலும் இருந்த
அவர்களும் நானே
நானும் அவர்களே
அல்லாவே
மாபெரும் இச் “சா” விருந்தில்
நான் என்ன செய்யமுடியும்
எந்தக் கொம்பனாலும்
கனவிலுங் கூட
என் நண்பர்களை மீட்டுத் தரமுடியாது.
– ஹெபா அபு நாடா
வினவு இணைய இதழில் இருந்து
Gaza’s night is dark apart from the glow of rockets, quiet apart from the sound of the bombs, terrifying apart from the comfort of prayer, black apart from the light of the martyrs. Good night, Gaza
From Literary Hub
கடைசி ட்வீட்
காசாவின் இரவில் ராக்கெட்டுகள் விண்ணில் ஏகுகின்றன. மற்றபடி இருட்டு தான். எங்கும் குண்டு வீச்சின் இரைச்சல். மற்றபடி அமைதி தான். எங்கும் அச்சம். ஆனாலும் தொழுகையின் ஆசுவாசம். எங்கும் கருமை. என்றாலும் மரித்தவர்களின் ஆன்மாவின் ஒளி.
குட் நைட், காஸா
We find ourselves in an indescribable state of bliss amidst the chaos. Amidst the ruins, a new city emerges—a testament to our resilience. Cries of pain echo through the air, mingling with the blood-stained garments of doctors. Teachers, despite their grievances, embrace their little pupils, while families display unwavering strength in the face
From Literary Hub
கடைசி எழுத்து
இந்தப் பெரும் குழப்பத்திலும் நாங்கள் விவரிக்க இயலாத பேரின்பத்தைக் காண்கிறோம். இந்த அழிவில் இருந்து ஒரு புதிய நகரம் எழுகிறது. எங்கள் உறுதிப்பாட்டின் சாசனம். வலியின் அழுகுரல்கள் காற்றில் எதிரொலி செய்கின்றன. மருத்துவர்களின் உடைகள் ரத்தக் கறை படிந்து இருக்கின்றன. ஆசிரியர்களுக்கு முறைப்பாடுகள் இருக்கின்றன. ஆனாலும் தங்கள் மாணாக்கர்களை அவர்கள் தழுவிக் கொள்ளவே செய்கிறார்கள். குடும்பங்களின் அசையாத மன உறுதி முகத்தில் தெரிகின்றது.
தமிழில் தி சந்தானம்
பக்கம் பக்கமாக எழுதி உணர்த்த முடியாததை ஒரு கவிதை சொல்லி விடும். ஒரு சில வார்த்தைகள். அவை வலி மிகுந்தவை.
படித்தவுடன் மனம் சற்று கணக்கிறது. விழியோரம் நீர் கோர்க்கிறது. சமீபத்தில் கொல்லப்பட்டார் என்ற தகவல் வாழ்க்கையின் அர்த்தமே புரியாமல் போகிறது. இந்த விஷயத்தை வெளிக் கொணர்ந்தமைக்கு நன்றி
ReplyDeleteநன்றி ராம் படித்ததற்கும் உணர்வுகளை வெளிப்படுத்தியமைக்கும்
Delete🤲🙏🫂
ReplyDelete🙏
Deleteவலி மிகுந்த உணர்வை ஆழமாக கடத்துகிறது கவிதை
ReplyDeleteநன்றி படித்ததற்கும் இங்கே பதிவிட்டதற்கும்
DeleteI am trying to say something for the past one day and words failed me.I let my silence speak instead.
ReplyDeleteYour silence has already spoken to me. Thanks Ram
Delete