Skip to main content

குரல்கள் தொடரும்

 நான் வேலைக்குப் சேர்ந்த புதிது. ஒரு புதிய திரைப்படம் பார்க்க வேண்டும் என்றால் இரண்டு பஸ் மாறி கம்பம் செல்ல வேண்டி இருந்தது. கூட வேலை பார்க்கும் நண்பர்களுக்கும் சினிமா பார்ப்பதில் ஆர்வம் மிகுந்து இருந்தது. இளமை நுரைத்து வரும் பானமாக இருந்தது. எனவே எதிலும் பெரிய சிரமம் இல்லை.


கம்பத்தில் கிரஸென்ட் என்று ஓரு தியேட்டர் இருந்தது. அங்கே "பகலில் ஒரு இரவு"என்ற படம் ரிலீஸ் ஆகியிருந்தது. ஸ்ரீதேவி நடித்த படம். எனவே எல்லோரும் போவது என்று முடிவாயிற்று. எந்தத் திரைப்படம் ஆனாலும் அதில் ஆழ்ந்து விடுவது எனது பழக்கம். இந்தப் படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே அது ஏற்கனவே பார்த்த படம் போலிருந்தது. ஆலிங்கனம் என்ற மலையாளப் படத்தின் மறு ஆக்கம் என்று புரிந்தது. என்றாலும் இந்தப் படத்தின் பாடல்கள் கேட்கும் போதே ஒரு மாறுபட்ட உணர்வைத் தந்தது. "இளமை என்னும் பூங்காற்று" என்ற பாடல் மிகவும் பிரபலம் அடைந்தது.


பின்னும் ஒரு பாடல். அதைக் கேட்டு அசந்து போனேன். ஒரு பாடலின் பல்லவிக்கும்  சரணத்திற்கும் ஊடே வரும் இசை வெறும் குரல்களாக மட்டுமே இருக்க முடியுமா? முடியும் என்று காட்டியிருந்தார் இளையராஜா. இசையமைக்க வந்த மூன்று ஆண்டுகளுக்குள் இது போன்ற எத்தனையோ சோதனை முயற்சிகளை அவர் செய்து பார்த்து இருந்தார்.  சத்தமில்லாமல் வெற்றியும் கண்டிருந்தார்.


நான் மேலே குறிப்பிட்ட பாடலின் துவக்கத்தில்  ஒன்றாய் பலவாய் பெண் குரல்கள். ஒன்றன் மேல் ஒன்றாய் அடுக்கு அடுக்காக.  கேட்டவுடன் நான் பரவசம் அடைந்தேன். அந்தக் குரல்கள் எல்லாம் என்னைத் தொடருவது போல இருந்தது. விவரிக்க முடியாத உவகையை மனம் உணர்ந்தது. பிறகு வெல்லப் பாகை தாம்பாளத்தில் ஊற்றியவுடன் திசையறியாது ஒடிச் செல்லுமே அது போல ஜானகியின் குரல். ஊடு இசையில் ஜதிகள். பின்னும் குரல்கள். தொடர்ந்து வரும் தாளக்கட்டுகள் பேஸ் கிடார் மற்றும் தபலா வடிவில். 


மோகன ராகத்தை ஆதாரமாகக் கொண்டு இந்தப் பாடல் அமைந்திருந்தது. எந்தப் பின்னணிப் பாடகிக்கும் இது ஒரு சவாலான பாடல். பாடும் போது மூச்சை நிறுத்திக் கொள்வதற்கு எங்குமே அவகாசம் இருக்காது "சிங்கார வேலனே தேவா" :பாடிய ஜானகி. அனுபவம மிக்க பின்னணிப் பாடகி ஜானகி.  . திறமையாகப் பாடி முடித்திருப்பார். பாடல் வரிகள் கண்ணதாசன்.


பாடலைக் கேட்கலாம்





Comments

  1. இளமை எனும் பூங்காற்று மற்றும் எல்லாப் பாடல்களும் அருமை. நானும் நண்பர் உமாகாந்தனுடன் படம் பார்த்ததாக நினைவு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராம். ஆமாம் நாம் இணைந்து பார்க்கவில்லை.

      Delete
  2. உங்களுடைய டிரான்ஸிஸ்டர் லெதர் உறை போடப்பட்டு இருக்கும். அதில் இருந்து இசை பெருகி வரும். சன்னலுக்கு வெளியே பசும் கதிர்கள் தலை அசைத்து ரசிக்கும். நினைவிருக்கிறது.

    ReplyDelete
  3. அது மர்பி டிரான்சிஸ்டர். என்னோடு பல காலம் பயணப்படிருக்கிறது. அக்பர் லாடஜில் ரூமில் கட்டிலில் சாய்ந்தவாறு பாடல் கேட்கும் சுகமே தனி.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...