நான் வேலைக்குப் சேர்ந்த புதிது. ஒரு புதிய திரைப்படம் பார்க்க வேண்டும் என்றால் இரண்டு பஸ் மாறி கம்பம் செல்ல வேண்டி இருந்தது. கூட வேலை பார்க்கும் நண்பர்களுக்கும் சினிமா பார்ப்பதில் ஆர்வம் மிகுந்து இருந்தது. இளமை நுரைத்து வரும் பானமாக இருந்தது. எனவே எதிலும் பெரிய சிரமம் இல்லை.
கம்பத்தில் கிரஸென்ட் என்று ஓரு தியேட்டர் இருந்தது. அங்கே "பகலில் ஒரு இரவு"என்ற படம் ரிலீஸ் ஆகியிருந்தது. ஸ்ரீதேவி நடித்த படம். எனவே எல்லோரும் போவது என்று முடிவாயிற்று. எந்தத் திரைப்படம் ஆனாலும் அதில் ஆழ்ந்து விடுவது எனது பழக்கம். இந்தப் படம் துவங்கிய சில நிமிடங்களிலேயே அது ஏற்கனவே பார்த்த படம் போலிருந்தது. ஆலிங்கனம் என்ற மலையாளப் படத்தின் மறு ஆக்கம் என்று புரிந்தது. என்றாலும் இந்தப் படத்தின் பாடல்கள் கேட்கும் போதே ஒரு மாறுபட்ட உணர்வைத் தந்தது. "இளமை என்னும் பூங்காற்று" என்ற பாடல் மிகவும் பிரபலம் அடைந்தது.
பின்னும் ஒரு பாடல். அதைக் கேட்டு அசந்து போனேன். ஒரு பாடலின் பல்லவிக்கும் சரணத்திற்கும் ஊடே வரும் இசை வெறும் குரல்களாக மட்டுமே இருக்க முடியுமா? முடியும் என்று காட்டியிருந்தார் இளையராஜா. இசையமைக்க வந்த மூன்று ஆண்டுகளுக்குள் இது போன்ற எத்தனையோ சோதனை முயற்சிகளை அவர் செய்து பார்த்து இருந்தார். சத்தமில்லாமல் வெற்றியும் கண்டிருந்தார்.
நான் மேலே குறிப்பிட்ட பாடலின் துவக்கத்தில் ஒன்றாய் பலவாய் பெண் குரல்கள். ஒன்றன் மேல் ஒன்றாய் அடுக்கு அடுக்காக. கேட்டவுடன் நான் பரவசம் அடைந்தேன். அந்தக் குரல்கள் எல்லாம் என்னைத் தொடருவது போல இருந்தது. விவரிக்க முடியாத உவகையை மனம் உணர்ந்தது. பிறகு வெல்லப் பாகை தாம்பாளத்தில் ஊற்றியவுடன் திசையறியாது ஒடிச் செல்லுமே அது போல ஜானகியின் குரல். ஊடு இசையில் ஜதிகள். பின்னும் குரல்கள். தொடர்ந்து வரும் தாளக்கட்டுகள் பேஸ் கிடார் மற்றும் தபலா வடிவில்.
மோகன ராகத்தை ஆதாரமாகக் கொண்டு இந்தப் பாடல் அமைந்திருந்தது. எந்தப் பின்னணிப் பாடகிக்கும் இது ஒரு சவாலான பாடல். பாடும் போது மூச்சை நிறுத்திக் கொள்வதற்கு எங்குமே அவகாசம் இருக்காது "சிங்கார வேலனே தேவா" :பாடிய ஜானகி. அனுபவம மிக்க பின்னணிப் பாடகி ஜானகி. . திறமையாகப் பாடி முடித்திருப்பார். பாடல் வரிகள் கண்ணதாசன்.
பாடலைக் கேட்கலாம்
இளமை எனும் பூங்காற்று மற்றும் எல்லாப் பாடல்களும் அருமை. நானும் நண்பர் உமாகாந்தனுடன் படம் பார்த்ததாக நினைவு. வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ராம். ஆமாம் நாம் இணைந்து பார்க்கவில்லை.
Deleteஉங்களுடைய டிரான்ஸிஸ்டர் லெதர் உறை போடப்பட்டு இருக்கும். அதில் இருந்து இசை பெருகி வரும். சன்னலுக்கு வெளியே பசும் கதிர்கள் தலை அசைத்து ரசிக்கும். நினைவிருக்கிறது.
ReplyDeleteஅது மர்பி டிரான்சிஸ்டர். என்னோடு பல காலம் பயணப்படிருக்கிறது. அக்பர் லாடஜில் ரூமில் கட்டிலில் சாய்ந்தவாறு பாடல் கேட்கும் சுகமே தனி.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete