சரஸ்வதி சபதம் என்று ஒரு திரைப்படம். எனக்கு சுமார் ஒன்பது வயது இருக்கும் போது பார்த்தேன். பார்தததோடு முடிந்ததா? படத்தின் வசனம் பாடல்கள் எல்லாம் வீட்டின் பின்புறச் சந்தின் முனையிலிருந்து ஒலிக்கும். வசனம் பாடல் வரிகள் மெட்டு எல்லாம். ஓலிபெருக்கிக் குழாய் வழியாக. எல்லாமும் மனதில் ஏறிவிடும். பள்ளிப் பாடங்களை விட விரைவாக. வீதி விளையாட்டில் சற்றே ஈடுபட்டாலும் மனம் பாட்டிலேயே நிற்கும். கேட்டதை அப்படியே மெட்டு மாறாமல் பாடிப் பார்ப்பது ஒரு சுகம். அதில் ஓரு பாடல் தெய்வம் இருப்பது எங்கே என்று.
பின்னிட்டு நான் வேலைக்கு வந்த போது உத்தமபாளயத்தில் தங்க நேர்ந்தது. அழகான சிறிய ஊர். ஆறு ஓடும். பச்சை வயல்களைப் பார்க்கலாம். அங்கே நாங்கள் தங்கியிருந்த விடுதியில் அறைகள் என்ற பெயரில் புறாக் கூண்டுகள் உண்டு. இருவர் தங்கும் கூண்டுகள். வசதியிருந்தால் தனிப் புறாக்கூண்டு. எல்லோருக்கும் குளியலறை பொது. தனியறையில் தங்கியிருந்த ஓருவரோடு நட்பு கூடியது. அவர் நல்ல இசை ரசிகர். அவரிடம் ஒரு டேப்ரிகார்டர் உண்டு. அதில் இருந்து பாடல்கள் ஒலித்த வண்ணம் இருக்கும். இரவு உணவு சீக்கிரம் முடிந்து விடும். அவர் அறைக்குச் சென்று பாடல்களைக் கேட்பேன். M K தியாகராஜ பாகவதரின் பாடல்கள் எல்லாம் அறிமுகம் ஆனது அப்படித்தான். அதிலே குறிப்பாக இரண்டு பாடல்கள். ஒன்று சத்வகுண போதன். பிறிதொன்று ஞானக்கண் ஒன்று.
மீண்டும் மீண்டும் கேட்டபடியே இருப்பேன். மனதில் பாடல் பதிவதில் வியப்பு என்ன?
ராகங்களோடு பரிச்சயம் கூடி வந்த பின்பு இந்தப் பாடல்கள் எல்லாம் ஜோன்புரி என்ற ராகத்தில் அமைந்ததாகத் தோன்றியது
புன்னகை. ஒரு சின்ன அறிமுகம். சில வார்த்தைகள். மெல்லக் கூடி வருவது தானே நட்பு. ஏதோ ஒரு பிடித்தம். என்னவோ ஒரு ஈர்ப்பு. ஏதோ ஒத்துப் போவது. நட்பின் துவக்கக் கணங்கள் அற்புதமானவை. அது ஒரு ராகம் நம்மிடம் வந்து சேர்ந்து அதனுடைய இதம் மெல்லப் பரவுவதைப் போன்றது.
ஜோன்புரி என்ற ராகம் என்னிடம் வந்து சேர்ந்தது அப்படித்தான்.
மூன்று பாடல்களும் அருமை. எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது. மூன்று படங்களையும் பார்த்திருக்கிறேன். அருமையான சுகானுபவம். பாடல்களை நினைவூட்டியதற்கு நன்றி
ReplyDeleteநன்றி ராம். பாகவதரின் பாடல்களை நாம் வியந்து ரசித்த நாட்கள் எல்லாம் ரினைவுக்கு வருகிறது
Deleteமதுரை மணி எப்போ வருவாரோ பாட்டுக்கூட ஜோன்புரி ராகம் என நினைவு
ReplyDeleteஆமாம்.
Deleteபாகவதரின் பாடல்களில் எனக்குப் பிடித்தமானது, ஹுசேனி ராகத்தில் அமைந்த 'ராஜன் மகராஜன்'. 'எப்போ வருவாரோ' சமீபத்தில் வெளிவந்த 'ஒரு நாள் கூத்து' திரைப்படத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் ஹரிசரன் பாடியதும் நன்றாக இருக்கும்
ReplyDelete- சீனு
ராஜன் மகராஜன் அருமையாக இருக்கும். இறுதியில் வரும் ஸ்வரப் பிரயோகம் பிரமிக்க வைக்கும். ஹரிஹரன் பாடியது கேட்டது இல்லை. கேட்கிறேன்
ReplyDelete