Skip to main content

ஒரு ராகம் பழகியது

 

சரஸ்வதி சபதம் என்று ஒரு திரைப்படம். எனக்கு சுமார் ஒன்பது வயது இருக்கும் போது பார்த்தேன். பார்தததோடு முடிந்ததா? படத்தின் வசனம் பாடல்கள் எல்லாம் வீட்டின் பின்புறச் சந்தின் முனையிலிருந்து ஒலிக்கும். வசனம் பாடல் வரிகள் மெட்டு எல்லாம். ஓலிபெருக்கிக் குழாய் வழியாக. எல்லாமும் மனதில் ஏறிவிடும். பள்ளிப் பாடங்களை விட விரைவாக. வீதி விளையாட்டில் சற்றே ஈடுபட்டாலும் மனம் பாட்டிலேயே நிற்கும். கேட்டதை அப்படியே மெட்டு மாறாமல் பாடிப் பார்ப்பது ஒரு சுகம்.  அதில் ஓரு பாடல் தெய்வம் இருப்பது எங்கே என்று.


பின்னிட்டு நான் வேலைக்கு வந்த போது உத்தமபாளயத்தில் தங்க நேர்ந்தது.  அழகான சிறிய ஊர். ஆறு ஓடும். பச்சை வயல்களைப் பார்க்கலாம். அங்கே நாங்கள் தங்கியிருந்த விடுதியில் அறைகள் என்ற பெயரில் புறாக் கூண்டுகள் உண்டு.  இருவர் தங்கும் கூண்டுகள். வசதியிருந்தால் தனிப் புறாக்கூண்டு. எல்லோருக்கும் குளியலறை பொது. தனியறையில் தங்கியிருந்த ஓருவரோடு நட்பு கூடியது. அவர் நல்ல இசை ரசிகர். அவரிடம் ஒரு டேப்ரிகார்டர் உண்டு. அதில் இருந்து பாடல்கள் ஒலித்த வண்ணம் இருக்கும். இரவு உணவு சீக்கிரம் முடிந்து விடும். அவர்  அறைக்குச் சென்று பாடல்களைக் கேட்பேன். M K தியாகராஜ பாகவதரின் பாடல்கள் எல்லாம் அறிமுகம் ஆனது அப்படித்தான்.  அதிலே குறிப்பாக இரண்டு பாடல்கள்.  ஒன்று சத்வகுண போதன். பிறிதொன்று ஞானக்கண் ஒன்று.

மீண்டும் மீண்டும் கேட்டபடியே இருப்பேன். மனதில் பாடல் பதிவதில் வியப்பு என்ன?


ராகங்களோடு பரிச்சயம் கூடி வந்த பின்பு இந்தப் பாடல்கள் எல்லாம் ஜோன்புரி என்ற ராகத்தில் அமைந்ததாகத் தோன்றியது


புன்னகை. ஒரு சின்ன அறிமுகம். சில வார்த்தைகள். மெல்லக் கூடி வருவது தானே நட்பு. ஏதோ ஒரு பிடித்தம். என்னவோ ஒரு ஈர்ப்பு. ஏதோ ஒத்துப் போவது. நட்பின் துவக்கக் கணங்கள் அற்புதமானவை. அது ஒரு ராகம் நம்மிடம் வந்து சேர்ந்து அதனுடைய இதம் மெல்லப் பரவுவதைப் போன்றது.


ஜோன்புரி என்ற ராகம் என்னிடம் வந்து சேர்ந்தது அப்படித்தான்.







Comments

  1. மூன்று பாடல்களும் அருமை. எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காது. மூன்று படங்களையும் பார்த்திருக்கிறேன். அருமையான சுகானுபவம். பாடல்களை நினைவூட்டியதற்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராம். பாகவதரின் பாடல்களை நாம் வியந்து ரசித்த நாட்கள் எல்லாம் ரினைவுக்கு வருகிறது

      Delete
  2. மதுரை மணி எப்போ வருவாரோ பாட்டுக்கூட ஜோன்புரி ராகம் என நினைவு

    ReplyDelete
  3. பாகவதரின் பாடல்களில் எனக்குப் பிடித்தமானது, ஹுசேனி ராகத்தில் அமைந்த 'ராஜன் மகராஜன்'. 'எப்போ வருவாரோ' சமீபத்தில் வெளிவந்த 'ஒரு நாள் கூத்து' திரைப்படத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையில் ஹரிசரன் பாடியதும் நன்றாக இருக்கும்
    - சீனு

    ReplyDelete
  4. ராஜன் மகராஜன் அருமையாக இருக்கும். இறுதியில் வரும் ஸ்வரப் பிரயோகம் பிரமிக்க வைக்கும். ஹரிஹரன் பாடியது கேட்டது இல்லை. கேட்கிறேன்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...