Skip to main content

மலர்களின் நடனம்


நடனத்திற்குப் பிறகு (After the Dance) டால்ஸ்டாய் எழுதிய கதை. அதன் துவக்க வரியை மேலே பாருங்கள்.

இந்தக் கதையைச் சொல்பவர் இவான் வாஸிலிவிச். தனது இளமைப் பருவத்தில் நடந்த சம்பவத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். அவர் அப்போது பல்கலைக்கழக மாணவன். ,படிப்பு, பனிச்சறுக்கு விளையாட்டு, குதிரையேற்றம்,  நண்பர்கள், இளமை,கொண்டாட்டம் இவையே வாழ்க்கை. ஒரு சமயம் நடன விருந்துக்குச் செல்கிறார். பிரபுக்களும் படைத் தளபதிகளும் மாதர்களும் நிறைந்த அறை. காலரியில் இசைக்குழு. தின்பதற்கு ஏராளமாய் பண்டங்கள். நதி போல வழிந்து ஓடும் ஷாம்பெயின். ஆனால் இவான் வாஸிலிவிச்சுக்குக் காதலின் போதை மட்டுமே  ஏறியிருந்தது. காரணம் மெல்லிய தேகமும் உயரமும்,, இனிமையும் கனிவும் ததும்பும் கண்களும் உடைய வரின்கா. செலுத்தப் பட்டவர் போல் வலியச் சென்று அவள் கைகளைப் பற்றி நடனம் ஆட அழைக்கிறார். இணக்கத்தோடு அழைப்பை ஏற்ற வரின்கா அவரோடு இணைந்து ஆடுகிறாள். அறை முழுதும் பரவி சுழன்று சுழன்று ஆடுகிறார்கள். வெள்ளை உடை அணிந்த அவளது அண்மை வாஸிலிவிச்சை வேறு ஒர் உலகத்திற்கு இட்டுச் செல்கிறது. இடையினில் கைகளை வளைத்தும் தோள் மீது கை வைத்தும் சிறிதும் பெரிதுமாய் எட்டு வைத்து ஆடும் நடனம். வால்ட்ஸ் ((Waltz) என்று இவ்வகை நடனம் அழைக்கப்படுகிறது. இதற்கு உரிய இசை ஒன்று. இரண்டு..மூன்று…என்ற தாள கதியில் அமைகிறது.


அண்மைக் காலத்தில் சாய்க்கோவெஸ்கியின்  (Tchaikovsky) இசைக் கோவைகளைக் கேட்க வாய்த்தது. இவர் உலகமே கொண்டாடிய ரஷ்ய இசை மேதை.  இசை நாடகங்கள் (Opera) பாலே நடனம் மற்றும் தனிப்பட  இவர் அமைத்த இசைக் கோவைகள் ஏராளம். இவற்றில் ஒன்று மலர்களின் நடனம். (The Waltz of flowers) என்பது. மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுவது.  இதைக் கேட்டுக் கொண்டிருந்த போது தான் மனம் மேலே சொன்ன டால்ஸ்டாயின் கதைக்குத் தாவியது.



தமிழ் திரைப்படங்களில் இது போன்ற வால்ட்ஸ் வகைப் பாடல்கள் அமைக்க முயற்சி செய்திருக்கிறார்கள். பால் ரூம் நடனம் காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது.

குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் கண் போன போக்கிலே. என்ற பாடல் காட்சி. வண்ணக்கிளி சொன்ன மொழி, யாரது யாரது தங்கமா, என்ற பாடல்களையும் இந்த வகையைச் சேர்ந்தது என்று சொல்லலாம்.



துயிலாத பெண்ணொன்று கண்டேன் என்று ஒரு பாடல். இது நடனமாகக் காட்சிப் படுத்தப் படவில்லை. ஆனால் மேலே நாம் விவரித்த நடன வகைக்கு இசைந்தே இந்தப் பாடல் அமைந்திருப்பதாகத் தோன்றுகிறது. சற்றுக் கண்களை மூடி பாடலைக் கேட்டபடி இந்த வகை நடன அசைவைக் கற்பனை செய்து பாருங்கள். புரியும். 


இந்தப் பாடல்களின் பல்லவிகள் எல்லாமே பெரும்பாலும் மூன்று மூன்று சந்தத்தில் வருவது கவனிக்கத் தக்கது. ஒன்று.இரண்டு..மூன்று என்ற தாள கதிக்கு இணங்க.


முன்னும் பின்னுமாக எட்டு வைத்த நடன அசைவை மனதில் உணர முடிகிறதா?




Comments

  1. பார்த்த படித்த விஷயங்களை
    அழகாக விவரிக்கின்றாய். தான் ரசித்ததை அப்படியே மற்றவர்களுக்கு கடத்துவது சிறந்த கலை. அது வாய்க்கப் பெற்றது உனக்கான வரம்.

    ReplyDelete
  2. அருமையான நினைவூட்டல். வேற்று மொழி புதினங்களை தமிழில் படிப்பதில் ஒரு தனி சுகமுண்டு. இதை நான் மறைந்த க்ரியா பதிப்பகத்தின் ராமகிருஷ்ணனிடம் சில வருடங்கள் முன் சொன்னபோது ஆமோதித்து மகிழ்வுடன் அதைப் பற்றி பேசினார். மதுரையில் பூர்ணம் சோமசுந்தரம் மொழியாக்கத்சில் படித்த ருசிய புதினங்கள் நினைவுக்கு வருகிறது. வால்ட்ஸ் இசையில் ஜீ.ராமநாதனின் மற்றுமொரு அரிய பாடல் - அமரகவி திரைப்படத்தில் பாகவதர், லீலா குரலில் அமைந்த 'யானைத் தந்தம் போலே பிறை நிலா' - பாகவதரின் முந்தைய பாடல்கள் போலில்லாமல் நவீனமாக இருக்கும்.
    - சீனு

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். அது சுரதா எழுதிய பாடல் தானே?

      Delete
  3. நல்ல முயற்சி விரைவில் சுஜாதா வரிசையில் வருவாய் எங்களின் கோனார் கையேடே

    ReplyDelete
  4. ரஷ்ய மொழி பாடலும் அதன் இசையும் கேட்டேன். பின் கண் போன போக்கிலே மற்றும துயிலாத பெண் ஒன்று பாடல்களை கேட்டேன். இசை ஒற்றுமை புலப்படுகிறது. ரசித்தேன். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. போனஸ் பாட்டுக்களாக வண்ணக்கிளி சொன்ன மொழி மற்றும் யாரது யாரது தங்கமா கேட்டேன். என்ன அருமையான பாடல். எப்படிப் பாடகர்கள் மற்றும் இசை அமைப்பு. எங்கேயோ கொண்டு போய்விட்டது.

    ReplyDelete
  6. எப்படிப்பட்ட என்று இருக்க வேண்டும்

    ReplyDelete
  7. A timely post for me,as I am hearing old msv songs often now a days.

    A wonderful post.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...