The living is a passing traveller;
The dead, a person come home.
One short journey between heaven and earth,
Then, alas! we are the same old dust of ten thousand ages.
The rabbit in the moon pounds out the elixir in vain;
Fu-sang, the tree of immortality, has crumbled to kindling wood.
Man dies, his white bones are dumb without a word
While the green pines feel the coming of spring.
Looking back, I sigh; looking in front of me, I sigh again.
What is there to value in this life's vaporous glory?
Li Bai
உயிர்த்து இருப்பவன் அலையும் பயணி
மரித்து இருப்பவன் வீடு திரும்பியவன்
சொர்க்கத்திற்கும் பூமிக்கும் இடையே ஒரு சிறிய பயணம்
பின்பு, அந்தோ! நாம் பத்தாயிரம் ஆண்டு
பழமையான தூசி
முயல் ஒன்று நிலவிலிருந்து அமுதத்தை வடித்து எடுக்க முயன்று தோற்கிறது
ஃபூசாங் தரு முறிந்து தீ மூட்டும் விறகு ஆகிப் போனது
மனிதன் இறந்து போகிறான்
அவனது வெள்ளை எலும்புகள் ஒரு வார்த்தை கூட பேசாத ஊமை என ஆகின்றன
பசிய பைன் மரங்கள் வசந்தம் வருவதை உணர்கின்றன
கடந்ததை எண்ணி நான் பெருமூச்சு விடுகிறேன்
எதிர் வருவதை எண்ணி நான் பெருமூச்சு விடுகிறேன்
ஆவியாகிப் போனது இந்த வாழ்வின் பெருமை
இதில் மதிக்க என்று என்ன இருக்கிறது?
லீ பெய்
தமிழில் தி சந்தானம்
வாழ்வின் யதார்த்தம். அருமையான மொழி பெயர்ப்பு. வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ராம் உடனுக்குடன் படிப்பநற்கும் மறுமொழி இடுவதற்கும்
DeleteGood one santhanam👏
ReplyDeleteThank you
DeletesarvE asi brahmam...tat avyaya: avinAshaka: ..jAnanti chEt pUrNagnAnam...nAsti chEt puna:puna: iha lOkE AhamishyAma: vayam..
ReplyDeleteஇப்பாடல் காலத்தில் முந்தியிருந்தாலும், எனது படிப்பு அறிமுகத்தில் சித்தர் பாடல்களின் மென்வடிவத்தில் தெரிகிறது.
ReplyDeleteஇதை ஒரு ஹைக்கு வடிவத்தில் முயற்சி:
காலச்சகடின் சுருளில்
ஞாலத்தின் உருமாற்றம் -
அடிநாத அண்டத்துகள்கள் !
-சீனு
அப்படியா? ஹைக்கூவை பாரதி ஹொக்கு என்று குறிப்பிடுவார். ஒரு அற்புதமான கட்டுரை எழுதியிருக்கிறார்.
Deleteபுதிய தகவல் - இணையத்தில் தேடிப் பார்க்கிறேன். நன்றி !
Deleteபாரேன்
ReplyDelete