Skip to main content

டிக்கன்ஸை அறிந்த போது




சார்லஸ் டிக்கன்ஸை படிக்க வாய்த்தது பதினொன்று அல்லது பனிரெண்டு வயதில். நாவல்களின் சுருக்கிய வடிவம் Oxford Picture Series ஆக பள்ளி நூலகத்தில் கிடைக்கும்.  முகமெங்கும் அம்மை வடுக்கள் இருக்கும் நூலகர் அதிகம் பேச மாட்டார். கண்ணாடி அலமாரியில் பூட்டி வைத்திருக்கும் 

புத்தகங்களைப் போல மெளனமாக இருப்பார். Great Expectations என்று ஒரு கதை. My name is Philip Phirrip என்று அந்தக் கதை துவங்கும். Miss Havisham என்று ஒரு பெண்மணி அந்தக் கதையில் வருவார். தீமையின் வடிவம். புத்தகத்தில் பார்த்த அவருடைய சித்திரம் மனதில் பதிந்து இருக்கிறது.

பிலிப் பிர்ரிப் சுருக்கமாக பிப். ஒரு அனாதை. 


இன்னொரு கதை. Oliver Twist.  அதில் ஒரு அத்தியாயத்தின் தலைப்பு  The Boy who asked for more. இவனும் அனாதை.  கொடுத்த உணவு கால் வயிற்றுக்குக் கூட போதவில்லை. சிறுவன் தானே? இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று கேட்கிறான். அதற்குத் தண்டனையாக இருட்டு அறையில் அடைக்கப் படுகிறான். ஆலைகளில் புகைப் போக்கியைச் சுத்தம் செய்ய பத்து பனிரெண்டு வயதுச் சிறுவர்களைப் பணியில் அமர்த்துவார்களாம். இந்தக் கதையைப் படித்த போதுதான் தெரிந்தது. கைவிடப்பட்ட மனிதர்களைப் பற்றி டிக்கன்ஸ்  அதிகம் எழுதினார்.


 பள்ளி இறுதி வகுப்பில் ஒரு ஆங்கிலப் பாடம். அது Sydney Carton’s Sacrifice.  ஸிட்னி கார்டன் குறிக்கோள் அற்ற மனிதன். குடிகாரன். தன்னலம் அறியாதவன். நம்பிக்கை என்னும் கை விளக்கு அவனிடம் இல்லை. எனவே வாழ்க்கையின் இருண்ட படிக்கட்டுகளில் இடறியபடி நடப்பவன். அவன் லூஸி மானெட்டை விரும்புகிறான். பரிசுத்தமான அழகு. கனிவான பெண்மை. எவ்விதத்திலும் அவளுக்குத் தகுதியானவன் இல்லை என்று அறிந்தே இருக்கிறான்.  உற்சாகத்திற்கும் சோர்வுக்கும் இடையே ஊசலாடுகிறான். ஒருதலைக் காதல். லூஸி மானெட் விரும்புவது  சார்லஸ் டார்னே. உருவத்தில் அவன் ஸிட்னி கார்டனை ஒத்து இருக்கிறான். இவனுக்குப் பதிலாக ஸிட்னி கார்டன் கொலைக் களத்திற்குச் சென்று கிலட்டினில் தலை அறுபட உயிர் துறக்கிறான். காதல் என்னவெல்லாம் செய்கிறது.  இப்படி டிக்கன்ஸை அறிந்தது  எல்லாம் சுருங்கிய வடிவில் தான்.


கடைசியாகக் குறிப்பிட்டது  A Tale of Two Cities என்ற கதையிலிருந்து. பிரஞ்சுப் புரட்சியின் பின்னணியில் சொல்லப்பட்ட கதை.  இது எல்லாம் பிற்பாடு தான் தெரிந்தது. A tale of two Cities என்ற நாவலின் துவக்க வரிகள் அற்புதமானவை.


It was the best of times, it was the worst of times, it was the age of wisdom, it was the age of foolishness, it was the epoch of belief, it was the epoch of incredulity, it was the season of Light, it was the season of Darkness, it was the spring of hope, it was the winter of despair, we had everything before us, we had nothing before us, we were all going direct to Heaven, we were all going direct the other way—in short, the period was so far like the present period, that some of its noisiest authorities insisted on its being received, for good or for evil, in the superlative degree of comparison only. 


காலத்தைக் கடந்த வரிகள். இன்றைய நாட்களுக்கும் அழகாகப் பொருந்துகிறதே. இந்த வரிகளை அப்படியே அப்பா சொல்வார். அடிக்கடி சொல்வார்.  Antithesis என்பதற்கு இந்த வரிகள் தான் சரியான உதாரணம் என்பார். எத்தனை முறைதான் நாவலைப் படித்திருந்திருப்பாரோ? வியப்பாக இருக்கும். 


புதுமைப்பித்தனின் சிறுகதை ஓன்று. பொன்னகரம். அதில் சில வரிகள்


ரயில்வே தண்டவாளத்தின் பக்கத்தில் விளையாடுவதில் என்ன ஆனந்தமோ? வேலி இருக்கத்தான் செய்கிறது. போகக் கூடாது என்ற சட்டம் குழந்தைகளுக்குத் தெரியுமா? 'போனால்' பெற்றோருக்குத்தான் கொஞ்சம் பாரம் ஒழிந்ததே! குழந்தைகள்தான் என்ன, 'கிளாக்ஸோ',  'மெல்லின்ஸ் பூட்' குழந்தைகளா, கம்பி இடையில் போக முடியாமலிருக்க? புகைந்தோடும் அந்த இரும்பு நாகரிகத்திற்கு, வரிசையாக நின்று "குட்மார்னி சார்!" என்று கத்துவதில் ரொம்ப ஆனந்தம் அவர்களுக்கு. அதுதான் அவர்களுக்குக் கிடைக்கும் ஆரம்ப ஆங்கிலக் கல்வி.


வரிகளைப் படிக்கும் போது டிக்கன்ஸ் எழுதிய வரிகளுடன் ஒப்பிடத் தோன்றும். Oliver Twist  என்ற கதையில் இப்படி எழுதியிருப்பார்.


Oliver Twist’s ninth birthday found him a pale thin child, somewhat diminutive in stature, and decidedly small in circumference. But nature or inheritance had implanted a good sturdy spirit in Oliver’s breast. It had had plenty of room to expand, thanks to the spare diet of the establishment; and perhaps to this circumstance may be attributed his having any ninth birthday at all.


ஒரு அனாதைச் சிறுவன் வேறு எப்படி வளர்வான்? வரிகளில் என்னவொரு வறட்சி, அங்கதம், அமைப்பின் மீது  மறைந்து வெளிப்படும் கோபம். புதுமைப் பித்தனிடமும் அவை அப்படியே வெளிப்படுகின்றன.


டிக்கன்ஸ் அவருக்குப் பின்பு வந்த எழுத்தாளர்கள் மீது மிகுந்த செல்வாக்கு செலுத்தி இருக்கிறார். டால்ஸ்டாய், தஸ்தவாய்ஸ்கி இப்படி.


டிக்கன்ஸ் முதலாக எனக்கு அறிமுகமானதும்  அப்பா சொன்ன வார்த்தைகளும் ஏனோ இன்று மனதில் அலையோடியபடி இருக்கிறது.




Comments

  1. Amazing parallels presented in a coherent narrative. Love the reference to Thatha and his effortless command over literature. A good start for the day. Keep writing such takes on literature.

    ReplyDelete
  2. //கண்ணாடி அறையில் பூட்டி வைத்திருக்கும் புத்தகங்கள் போல்....// :)

    ReplyDelete
  3. டி வி எஸ் பள்ளியில் கேதரின் டீச்சர் என்று ஒரு ஆசிரியை. எங்களுக்கு வரலாறு புவியியல் எடுத்தார். நிறைய ஆங்கில கதைகள் கூறியிருக்கிறார். To be honest, I started reading English books only after the age of 20. Library லாம் முதல் முறையாக ஆல் இந்தியா ரேடியோ அலுவலகத்தில்தான். அனாதைச் சிறுவர்கள் என்றவுடன் சுஜாதாவின் அமரும் புள்ளியும் நினைவுக்கு வந்தார்கள். சிறுவர்கள் உளவியல் ஜெயகாந்தன் கதையில் அழகாக வெளிக்கொண்டுவரப் பட்டிருக்கும்.

    மீண்டும் மீண்டும் உன் நினைவாற்றல் என்னை ப்ரமிக்க வைக்கிறது.

    ReplyDelete
  4. பகிர்தலுக்கு நன்றி. இந்த நாள் இனிய நாள்

    ReplyDelete
  5. Beautifully written. Thanks for sharing

    ReplyDelete
  6. Even today the above said authors hold good to the day., Have to pick up a Charles Dickens now.,

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...