சார்லஸ் டிக்கன்ஸை படிக்க வாய்த்தது பதினொன்று அல்லது பனிரெண்டு வயதில். நாவல்களின் சுருக்கிய வடிவம் Oxford Picture Series ஆக பள்ளி நூலகத்தில் கிடைக்கும். முகமெங்கும் அம்மை வடுக்கள் இருக்கும் நூலகர் அதிகம் பேச மாட்டார். கண்ணாடி அலமாரியில் பூட்டி வைத்திருக்கும்
புத்தகங்களைப் போல மெளனமாக இருப்பார். Great Expectations என்று ஒரு கதை. My name is Philip Phirrip என்று அந்தக் கதை துவங்கும். Miss Havisham என்று ஒரு பெண்மணி அந்தக் கதையில் வருவார். தீமையின் வடிவம். புத்தகத்தில் பார்த்த அவருடைய சித்திரம் மனதில் பதிந்து இருக்கிறது.
பிலிப் பிர்ரிப் சுருக்கமாக பிப். ஒரு அனாதை.
இன்னொரு கதை. Oliver Twist. அதில் ஒரு அத்தியாயத்தின் தலைப்பு The Boy who asked for more. இவனும் அனாதை. கொடுத்த உணவு கால் வயிற்றுக்குக் கூட போதவில்லை. சிறுவன் தானே? இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று கேட்கிறான். அதற்குத் தண்டனையாக இருட்டு அறையில் அடைக்கப் படுகிறான். ஆலைகளில் புகைப் போக்கியைச் சுத்தம் செய்ய பத்து பனிரெண்டு வயதுச் சிறுவர்களைப் பணியில் அமர்த்துவார்களாம். இந்தக் கதையைப் படித்த போதுதான் தெரிந்தது. கைவிடப்பட்ட மனிதர்களைப் பற்றி டிக்கன்ஸ் அதிகம் எழுதினார்.
பள்ளி இறுதி வகுப்பில் ஒரு ஆங்கிலப் பாடம். அது Sydney Carton’s Sacrifice. ஸிட்னி கார்டன் குறிக்கோள் அற்ற மனிதன். குடிகாரன். தன்னலம் அறியாதவன். நம்பிக்கை என்னும் கை விளக்கு அவனிடம் இல்லை. எனவே வாழ்க்கையின் இருண்ட படிக்கட்டுகளில் இடறியபடி நடப்பவன். அவன் லூஸி மானெட்டை விரும்புகிறான். பரிசுத்தமான அழகு. கனிவான பெண்மை. எவ்விதத்திலும் அவளுக்குத் தகுதியானவன் இல்லை என்று அறிந்தே இருக்கிறான். உற்சாகத்திற்கும் சோர்வுக்கும் இடையே ஊசலாடுகிறான். ஒருதலைக் காதல். லூஸி மானெட் விரும்புவது சார்லஸ் டார்னே. உருவத்தில் அவன் ஸிட்னி கார்டனை ஒத்து இருக்கிறான். இவனுக்குப் பதிலாக ஸிட்னி கார்டன் கொலைக் களத்திற்குச் சென்று கிலட்டினில் தலை அறுபட உயிர் துறக்கிறான். காதல் என்னவெல்லாம் செய்கிறது. இப்படி டிக்கன்ஸை அறிந்தது எல்லாம் சுருங்கிய வடிவில் தான்.
கடைசியாகக் குறிப்பிட்டது A Tale of Two Cities என்ற கதையிலிருந்து. பிரஞ்சுப் புரட்சியின் பின்னணியில் சொல்லப்பட்ட கதை. இது எல்லாம் பிற்பாடு தான் தெரிந்தது. A tale of two Cities என்ற நாவலின் துவக்க வரிகள் அற்புதமானவை.
It was the best of times, it was the worst of times, it was the age of wisdom, it was the age of foolishness, it was the epoch of belief, it was the epoch of incredulity, it was the season of Light, it was the season of Darkness, it was the spring of hope, it was the winter of despair, we had everything before us, we had nothing before us, we were all going direct to Heaven, we were all going direct the other way—in short, the period was so far like the present period, that some of its noisiest authorities insisted on its being received, for good or for evil, in the superlative degree of comparison only.
காலத்தைக் கடந்த வரிகள். இன்றைய நாட்களுக்கும் அழகாகப் பொருந்துகிறதே. இந்த வரிகளை அப்படியே அப்பா சொல்வார். அடிக்கடி சொல்வார். Antithesis என்பதற்கு இந்த வரிகள் தான் சரியான உதாரணம் என்பார். எத்தனை முறைதான் நாவலைப் படித்திருந்திருப்பாரோ? வியப்பாக இருக்கும்.
புதுமைப்பித்தனின் சிறுகதை ஓன்று. பொன்னகரம். அதில் சில வரிகள்
ரயில்வே தண்டவாளத்தின் பக்கத்தில் விளையாடுவதில் என்ன ஆனந்தமோ? வேலி இருக்கத்தான் செய்கிறது. போகக் கூடாது என்ற சட்டம் குழந்தைகளுக்குத் தெரியுமா? 'போனால்' பெற்றோருக்குத்தான் கொஞ்சம் பாரம் ஒழிந்ததே! குழந்தைகள்தான் என்ன, 'கிளாக்ஸோ', 'மெல்லின்ஸ் பூட்' குழந்தைகளா, கம்பி இடையில் போக முடியாமலிருக்க? புகைந்தோடும் அந்த இரும்பு நாகரிகத்திற்கு, வரிசையாக நின்று "குட்மார்னி சார்!" என்று கத்துவதில் ரொம்ப ஆனந்தம் அவர்களுக்கு. அதுதான் அவர்களுக்குக் கிடைக்கும் ஆரம்ப ஆங்கிலக் கல்வி.
வரிகளைப் படிக்கும் போது டிக்கன்ஸ் எழுதிய வரிகளுடன் ஒப்பிடத் தோன்றும். Oliver Twist என்ற கதையில் இப்படி எழுதியிருப்பார்.
Oliver Twist’s ninth birthday found him a pale thin child, somewhat diminutive in stature, and decidedly small in circumference. But nature or inheritance had implanted a good sturdy spirit in Oliver’s breast. It had had plenty of room to expand, thanks to the spare diet of the establishment; and perhaps to this circumstance may be attributed his having any ninth birthday at all.
ஒரு அனாதைச் சிறுவன் வேறு எப்படி வளர்வான்? வரிகளில் என்னவொரு வறட்சி, அங்கதம், அமைப்பின் மீது மறைந்து வெளிப்படும் கோபம். புதுமைப் பித்தனிடமும் அவை அப்படியே வெளிப்படுகின்றன.
டிக்கன்ஸ் அவருக்குப் பின்பு வந்த எழுத்தாளர்கள் மீது மிகுந்த செல்வாக்கு செலுத்தி இருக்கிறார். டால்ஸ்டாய், தஸ்தவாய்ஸ்கி இப்படி.
டிக்கன்ஸ் முதலாக எனக்கு அறிமுகமானதும் அப்பா சொன்ன வார்த்தைகளும் ஏனோ இன்று மனதில் அலையோடியபடி இருக்கிறது.
.jpeg)
Amazing parallels presented in a coherent narrative. Love the reference to Thatha and his effortless command over literature. A good start for the day. Keep writing such takes on literature.
ReplyDeleteThank you Janu
Delete//கண்ணாடி அறையில் பூட்டி வைத்திருக்கும் புத்தகங்கள் போல்....// :)
ReplyDeleteடி வி எஸ் பள்ளியில் கேதரின் டீச்சர் என்று ஒரு ஆசிரியை. எங்களுக்கு வரலாறு புவியியல் எடுத்தார். நிறைய ஆங்கில கதைகள் கூறியிருக்கிறார். To be honest, I started reading English books only after the age of 20. Library லாம் முதல் முறையாக ஆல் இந்தியா ரேடியோ அலுவலகத்தில்தான். அனாதைச் சிறுவர்கள் என்றவுடன் சுஜாதாவின் அமரும் புள்ளியும் நினைவுக்கு வந்தார்கள். சிறுவர்கள் உளவியல் ஜெயகாந்தன் கதையில் அழகாக வெளிக்கொண்டுவரப் பட்டிருக்கும்.
ReplyDeleteமீண்டும் மீண்டும் உன் நினைவாற்றல் என்னை ப்ரமிக்க வைக்கிறது.
பகிர்தலுக்கு நன்றி. இந்த நாள் இனிய நாள்
ReplyDeleteநன்றி
DeleteBeautifully written. Thanks for sharing
ReplyDeleteThanks for reading and offering your comments Ram
DeleteEven today the above said authors hold good to the day., Have to pick up a Charles Dickens now.,
ReplyDeleteTrue.
Delete