அப்பா அடிக்கடி சொல்வது உண்டு. திரை இசைப் பாடல்கள் இன்ன ராகம் என்று எல்லாம் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது என்று. மெய் தான். இசையமைப்பாளரின் கற்பனையில் சில போது ஓரிரு ராகங்களின் சேர்க்கையாக முடிவது உண்டு. பழைய திரை இசைப் பாடல்களில் ஓரு ராகத்தின் அம்சம் முழுமை பெற்று ஒலிப்பதை அவர் குறிப்பிடுவார். அப்படி அவர் சொன்ன பாடல் சாருகேசி ராகத்தில் அமைந்த மன்மத லீலையை வென்றார் உண்டோ என்ற பாடல். இது போன்று பல மிகப் பழமையான பாடல்கள் பற்றி அவர் சொன்னது உண்டு.
பின்னிட்டு அப்பாவிற்கு சில திரை இசைப் பாடல்கள் பிடித்தமானதாக இருந்தது. எழுபது வயதை அவர் கடந்த பிறகு.
கலப்படம் இல்லாத சுத்தமான ராக லட்சணத்தோடு அது அமைந்திருக்க வேண்டும். அதனால் தான் அவருக்கு அவை பிடித்துப் போயிருக்கும் என்று நான் கருதிக் கொண்டேன். அவரிடம் எதுவும் இதைப் பற்றிக் கேட்டதில்லை.
தொலைக்காட்சி பெட்டியில் இந்தப் பாடல் ஒலிக்கும் போது ஆஹா என்று அவர் ரசிப்பதைப் பார்த்து இன்புற்று இருக்கிறேன். அந்தப் பாடல் கல்யாணத் தேன் நிலா என்பது. சில பாடல்கள் கேட்க மிகவும் நன்றாக இருக்கும். பார்க்க முடியாது. இந்தப் பாடல் அப்படி இல்லை. பார்க்கலாம்.. இந்தப் பாடல் தர்பாரி கானடா ராகத்தில் அமைந்திருப்பது என்று இசையைக் கற்று அறிந்தவர்கள் சொல்லி விட்டுப் போகட்டும். நமக்கென்ன. நாம் கேட்டு மகிழலாம்.
நேற்று முன் தினம் சஞ்சய் சுப்ரமணியத்தின் ஒரு காணொளிப் பாடலைக் கேட்டேன். அது மா மவ சதா ஜனனி என்ற பாடல். அற்புதமாக இருந்தது.
ஆலாபளை நிறைவுற்றதும் கண்களில் நீர் நிறைந்தது. காரணம் கேட்டா கண்களில் நீர் வரும்?
பாடலைக் கேட்போம். இது கானடா ராகம் தானே என்று நமக்குள்ளே பேசவும் செய்வோம்
👌
ReplyDeleteBeautiful Raga. It's one of my favourite songs too!! - Sona.
ReplyDeleteNice to know that
Deleteஇரண்டு பாடலையும் கேட்டேன். ரசித்தேன்.
ReplyDeleteஉங்கள் ரசனைக்கு நன்றி ராம்
Delete//நமக்கென்ன கேட்டு மகிழலாம்// லாமே.. ஒன் ஆஃப் மை ஃபேவரிட். சஞ்சய் பாடல் இன்றுதான் கேட்டேன். அருமை. பெரியப்பா மகா ரசிகர். திரைப் பாடல்களின் ராகம் கண்டுபிடிப்பது அம்மாவின் பொழுது போக்கு. எனக்கு சங்கீத ஞானம் கிடையாது. அம்மா சொன்னதில் நினைவில் இருப்பது, தலையைக் குனியும் தாமரையே, ரீதிகெளளை ராகம். ராகம், பாடலின் பொருள் எதுவும் தெரியாவிட்டாலும் இசையயை ரசிக்க முடியும் காது மட்டும் நல்ல ஸ்திதியில் இறுதி வரை வேணும்னு வேண்டிக்கறேன். அதே போல கண்களும்.🙂🙂
ReplyDeleteஆமாம்.. தலையைக் குனியும் பாடல் கலப்படம் இல்லாத ரீதிகெளளை. அரிதாக அப்படி அமைவது உண்டு
Delete