Skip to main content

கல்யாணத் தேன் நிலா

 அப்பா அடிக்கடி சொல்வது உண்டு. திரை இசைப் பாடல்கள் இன்ன ராகம் என்று எல்லாம் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது என்று. மெய் தான். இசையமைப்பாளரின் கற்பனையில் சில போது ஓரிரு ராகங்களின் சேர்க்கையாக முடிவது உண்டு. பழைய திரை இசைப் பாடல்களில் ஓரு  ராகத்தின் அம்சம் முழுமை பெற்று ஒலிப்பதை அவர் குறிப்பிடுவார். அப்படி அவர் சொன்ன பாடல் சாருகேசி ராகத்தில் அமைந்த மன்மத லீலையை வென்றார் உண்டோ என்ற பாடல். இது போன்று பல மிகப் பழமையான பாடல்கள் பற்றி அவர் சொன்னது உண்டு.


பின்னிட்டு அப்பாவிற்கு சில திரை இசைப் பாடல்கள் பிடித்தமானதாக இருந்தது. எழுபது வயதை அவர் கடந்த பிறகு.

கலப்படம் இல்லாத சுத்தமான ராக லட்சணத்தோடு அது அமைந்திருக்க வேண்டும். அதனால் தான் அவருக்கு அவை பிடித்துப் போயிருக்கும் என்று நான் கருதிக் கொண்டேன். அவரிடம் எதுவும் இதைப் பற்றிக் கேட்டதில்லை. 


தொலைக்காட்சி பெட்டியில் இந்தப் பாடல் ஒலிக்கும் போது ஆஹா என்று அவர் ரசிப்பதைப் பார்த்து இன்புற்று இருக்கிறேன். அந்தப் பாடல் கல்யாணத் தேன் நிலா என்பது. சில பாடல்கள் கேட்க மிகவும் நன்றாக இருக்கும். பார்க்க முடியாது. இந்தப் பாடல் அப்படி இல்லை. பார்க்கலாம்.. இந்தப் பாடல் தர்பாரி கானடா ராகத்தில் அமைந்திருப்பது என்று இசையைக் கற்று அறிந்தவர்கள் சொல்லி விட்டுப் போகட்டும். நமக்கென்ன. நாம் கேட்டு மகிழலாம்.




நேற்று முன் தினம் சஞ்சய் சுப்ரமணியத்தின் ஒரு காணொளிப் பாடலைக் கேட்டேன். அது மா மவ சதா ஜனனி என்ற பாடல். அற்புதமாக இருந்தது.

ஆலாபளை நிறைவுற்றதும் கண்களில் நீர் நிறைந்தது. காரணம் கேட்டா கண்களில் நீர் வரும்?


பாடலைக் கேட்போம். இது கானடா ராகம் தானே என்று நமக்குள்ளே பேசவும் செய்வோம் 




Comments

  1. P. Mathivanan InbarajMay 1, 2024 at 7:02 PM

    👌

    ReplyDelete
  2. Beautiful Raga. It's one of my favourite songs too!! - Sona.

    ReplyDelete
  3. இரண்டு பாடலையும் கேட்டேன். ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. உங்கள் ரசனைக்கு நன்றி ராம்

      Delete
  4. //நமக்கென்ன கேட்டு மகிழலாம்// லாமே.. ஒன் ஆஃப் மை ஃபேவரிட். சஞ்சய் பாடல் இன்றுதான் கேட்டேன். அருமை. பெரியப்பா மகா ரசிகர். திரைப் பாடல்களின் ராகம் கண்டுபிடிப்பது அம்மாவின் பொழுது போக்கு. எனக்கு சங்கீத ஞானம் கிடையாது. அம்மா சொன்னதில் நினைவில் இருப்பது, தலையைக் குனியும் தாமரையே, ரீதிகெளளை ராகம். ராகம், பாடலின் பொருள் எதுவும் தெரியாவிட்டாலும் இசையயை ரசிக்க முடியும் காது மட்டும் நல்ல ஸ்திதியில் இறுதி வரை வேணும்னு வேண்டிக்கறேன். அதே போல கண்களும்.🙂🙂

    ReplyDelete
    Replies
    1. ஆமாம்.. தலையைக் குனியும் பாடல் கலப்படம் இல்லாத ரீதிகெளளை. அரிதாக அப்படி அமைவது உண்டு

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...