அப்போது எல்லாம் சென்னையில் மியூஸியானோ என்று ஒரு இசைக்குழு இருந்தது. அதை வெற்றிகரமாக நடத்தி வந்தவர் பெயர் ரமணன். எழுபது கால கட்டங்களில் ஹிந்தித் திரை இசைப் பாடல்கள் தான் கோலோச்சியது. அந்த இசைக் குழுவில் ஓரு பெண் பாடுவார். புடவையைக் கால் நகம் வரை போர்த்தியபடி தான் பாடுவார். மிகவும் அழுத்தமான அவரது குரல் பலரையும் கவர்ந்தது. பாடும் போது எந்த அசைவும் இருக்காது. குரல் மட்டும் எழும்பி வந்து அரங்கை நிறைக்கும். அந்தக் குரலுக்கு உரியவர் பெயர் உமா வெங்கட்ராமன். எம்.ஏ. படித்த பெண். அமர்க்களமாகப் பாடுகிறாள் என்றெல்லாம் சொல்வார்கள். ஒரு கண்ணியமான தோற்றத்தில் என் வயது ஒத்தோருக்கு எல்லாம் அப்போது ஒரு தமக்கையைப் போல காணுவார். பாடலில் நெருடலான வரிகள் வந்தால் அதைப் பாடுவதைத் தவிர்த்து விடுவார். பின்னாளில் ரமணனை மணந்து கொண்டு உமா ரமணன் ஆனார். இவரைப் பின்னணிப் பாடகியாகத் தமிழ் திரை உலகம் வரித்துக் கொண்டது. இவருடைய குரலுக்கும் திறமைக்கும் ஏற்றாற் போலவே பாடல்களும் இவருக்கு அமைந்தன.
ஆனந்த ராகம், பூங்கதவே தாள் திறவாய், தாகம் எடுக்கிற நேரம், ஆகாய வெண்ணிலாவே, நீ பாதி நான் பாதி என்று எத்தனையோ அற்புதமான பாடல்களைப் பாடி இருந்தார்.
உமா ரமணனின் நினைவாக ஒரு பாடல்
சட்டென்று நினைவுக்கு வருபது, படம் நிழல்கள், பாடியவர்கள் தீபன் சக்கரவர்த்தி, உமா ரமணன். அருமையான பாடகி..💗🌷🙏
ReplyDeleteவருவது
Delete🙂
ஆமாம். தீபன் சக்ரவர்த்தி உமா ரமணன் combination நல்ல பாட்டுக்கள்
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThank you. Few can tread the world with such simplicity and grace
DeleteSuch a rare and peculiar voice.
ReplyDeleteTrue
Deleteஅருமையான பாட்டு. ஈர்க்கத் தக்க குரல்.
ReplyDeleteஆமாம் ராம் ஒரு வித்தியாசமான குரல்
Delete