Skip to main content

மஞ்சள் வெயில்

 



அப்போது எல்லாம் சென்னையில் மியூஸியானோ என்று ஒரு இசைக்குழு இருந்தது. அதை வெற்றிகரமாக நடத்தி வந்தவர் பெயர் ரமணன்.  எழுபது கால கட்டங்களில் ஹிந்தித் திரை இசைப் பாடல்கள் தான் கோலோச்சியது. அந்த இசைக் குழுவில் ஓரு பெண் பாடுவார். புடவையைக் கால் நகம் வரை போர்த்தியபடி தான் பாடுவார். மிகவும் அழுத்தமான அவரது குரல் பலரையும் கவர்ந்தது. பாடும் போது எந்த அசைவும் இருக்காது. குரல் மட்டும் எழும்பி வந்து அரங்கை நிறைக்கும். அந்தக் குரலுக்கு உரியவர் பெயர் உமா வெங்கட்ராமன். எம்.ஏ. படித்த பெண். அமர்க்களமாகப் பாடுகிறாள் என்றெல்லாம் சொல்வார்கள். ஒரு கண்ணியமான தோற்றத்தில் என் வயது ஒத்தோருக்கு எல்லாம் அப்போது ஒரு தமக்கையைப் போல காணுவார். பாடலில் நெருடலான வரிகள் வந்தால் அதைப் பாடுவதைத் தவிர்த்து விடுவார். பின்னாளில் ரமணனை மணந்து கொண்டு உமா ரமணன் ஆனார். இவரைப் பின்னணிப் பாடகியாகத் தமிழ் திரை உலகம் வரித்துக் கொண்டது.  இவருடைய குரலுக்கும் திறமைக்கும் ஏற்றாற் போலவே பாடல்களும்  இவருக்கு அமைந்தன.

ஆனந்த ராகம், பூங்கதவே தாள் திறவாய், தாகம் எடுக்கிற நேரம், ஆகாய வெண்ணிலாவே, நீ பாதி நான் பாதி என்று எத்தனையோ அற்புதமான பாடல்களைப் பாடி இருந்தார். 


உமா ரமணனின் நினைவாக ஒரு பாடல்




Comments

  1. சட்டென்று நினைவுக்கு வருபது, படம் நிழல்கள், பாடியவர்கள் தீபன் சக்கரவர்த்தி, உமா ரமணன். அருமையான பாடகி..💗🌷🙏

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். தீபன் சக்ரவர்த்தி உமா ரமணன் combination நல்ல பாட்டுக்கள்

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. Thank you. Few can tread the world with such simplicity and grace

      Delete
  3. Such a rare and peculiar voice.

    ReplyDelete
  4. அருமையான பாட்டு. ஈர்க்கத் தக்க குரல்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ராம் ஒரு வித்தியாசமான குரல்

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...