நம்மாழ்வார் திருவாய்மொழி ஆறாம் பத்து மூன்றாம் திருமொழியில் பாசுரங்கள் ஆச்சரியமாக இருக்கின்றன. பாசுரங்கள் நெடுகிலும்
ஒன்றுக்கு ஒன்று முரணான வார்த்தைகள் நயம்பட செறிவான பொருள் கொண்டு அமைந்திருக்கிறது.
படிக்கப் படிக்க எல்லையில்லாத பரவசம் பெருகுகிறது.
சில பாசுரங்களைப் பார்க்கலாம்.
புண்ணியம் பாவம் புணர்ச்சி பிரிவு என்று இவையாய்
எண்ணமாய் மறப்பாய் உண்மையாய் இன்மையாய் அல்லனாய்
திண்ண மாடங்கள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
கண்ணன் இன்னருளே கண்டுகொள்மின்கள் கைதவமே?
நாம் கண்ட பொருள்
எல்லாம் கண்ணனின் இன்னருள் என்று ஆகும் போது பொய்ம்மையும் துன்பமும் என்ன செய்து விடும்?
இதை அறிந்து கொள்க.
புண்ணியமும் பாவமும் அவனே.
இணைதலும் பிரிதலும் அவனே
நினைப்பும் மறப்பும் அவனே.
இருப்பதும் இல்லாததும் இவை அல்லாததுவும் அவனே.
வலிமையான மாடங்கள் சூழ்ந்த திருவிண்ணகர் நகரில் அவன் இருக்கின்றான்.
திருவிண்ணகர் கும்பகோணம் அருகில் உள்ள உப்பிலியப்பன்(ஒப்பிலியப்பன்) கோவில் என்று நீங்கள் அறிவீர்கள்.
Oh Deceit, Oh Sufferings,
Realise this
Everything is His sweet Grace
He is virtue, He is sin
He is Togetherness, He is Separation
He is Remembrance, He is Forgetfulness
He is Nothing He is Everything
He is not these Two
Kannan, the Lord who dwells in Thiruvinnagar,
The town with strong mansions
Here in this pasuram Nammalwar addresses the deceit and sufferings that abound all around.
He dwells at length to define Kannan, the Lord who dwells in Thiruvinnagar, His sweet Grace through an array of antitheses.
இன்னொரு பாசுரம்
கைதவம் செம்மை கருமை வெளுமையுமாய்
மெய் பொய் இளமை முதுமை புதுமை பழமையுமாய்
செய்த திண் மதிள் சூழ் திருவிண்ணகர் சேர்ந்த பிரான்
பெய்த காவு கண்டீர் பெரும் தேவு உடை மூவுலகே
நாம் கண்ட பொருள்
கண்டு கொள்ளுங்கள்
கபடமும் நேர்மையும் அவன்.
கருமையும் வெண்மையும் அவன்.
உண்மையும் பொய்யும் அவன்.
இளமையும் முதுமையும் அவன்.
புதுமையும் பழமையும் அவன்.
அவனே பெரிய தெய்வங்கள் உடைய இந்த மூன்று உலகங்களும் செய்தான்.
Know this
He is Deceit and righteousness
He is Black and white
He is Truth and falsehood
He is Old and young
He is New and ancient
He is there in Thiruvinnagar which is surrounded by strong walls
He made the three worlds where great Deities dwell
Here again in this Pasuram one can discern the beauty of antitheses and their profundity
பிறிதொன்று
நல்குரவும் செல்வும் நரகும் சுவர்க்கமுமாய்
வெல்பகையும் நட்பும் விடமும் அமுதமுமாய்
பல்வகையும் பரந்த பெருமான் என்னை ஆள்வானை
செல்வம் மல்கு குடித் திருவிண்ணகர்க் கண்டேனே
நாம் கண்ட பொருள்
செல்வம் நிரம்பிய குடும்பங்கள் திருவிண்ணகரில் இருக்கின்றன. எங்கும் பரந்திருக்கும் பெருமான் அங்கே இருக்கிறான்.
வறுமையும் செல்வமும் அவன்.
நரகமும் சொர்க்கமும் அவன்
பகையும் நட்பும் அவன்
விஷமும் அவன்.
அமுதும் அவன்.
அவனே என்னை ஆட்கொண்டவன்.
He is Penury and wealth
He is Hell and Heaven
He is Enmity and friendship
He is Poison and elixir
He is all pervading
He has cast his influence over me
I have seen him in Thiruvinnagar
Where families abound in wealth
Again the poetic beauty of the stream of antitheses leaves you enthralled and you are lost in contemplation.
The coexistence of contrasting concepts profoundly reflects the nature of universal duality. Thank you for this collection of related pasurams: He is everything. He is nothing. Indeed.
ReplyDeleteThank you. Much remains for contemplation and understanding
Deleteமூன்று பாசுரங்களும் பொருள் பொதிந்தது. அர்த்தங்களை புரிந்து கொண்டேன். மொழி பெயர்ப்பு நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ராம்
Delete