போழ்து மெலிந்த புன் செக்கரில் வான்திசை
சூழும் எழுந்து உதிரப் புனல் மலை
கீழ்து பிளந்த சிங்கம் ஒத்ததால் அப்பன்
ஆழ்துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே
7.4.6
நம்மாழ்வார் திருவாய்மொழி
பொழுது சாயும் போது வானம் சிகப்பு நிறம் கொள்கிறது. இல்லை வானம் எங்கும் திசைகள் தோறும் குருதிப் புனல் தெறித்ததா? ஒரு மலையை சிங்கம் பிளப்பது போல இரணியன் என்ற அசுரன் துயர் அடையுமாறு சிங்க உருவெடுத்த பெருமான் கொல்கிறானே!
Day thins out
Red gathers in the sky
Stream of blood splashes across the sky
and in all directions
Like a lion that splits the mountain under its feet
He killed the demon, a long torment that was
In English
T Santhanam
This pasuram explains the killing of Hiranyakasipu by Lord as he takes the guise of a lion to tear him as the day thins out and the sky gathers red
Lovely interpretation.
ReplyDeleteThank you
Deleteஅருமையான விளக்கம். வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ராம்
DeleteNice ! Incidentally witnessed an evening sky with different shades of red splattered across, right after some rains and full rainbow last week while driving - amazing experience. Lightning and now sky - elements of nature in Pasurams. Perhaps Bharathi got inspired similarly later for 'காக்கை சிறகினிலே'.
ReplyDelete-Cheenu
பார்;சுடர்ப்பிரிதியைச் சூழவே படர்முகில்
ReplyDeleteஎத்தனை தீப்பட் டெரிவன?ஓகோ!
என்னடி!இந்த வன்னத் தியல்புகள்!
எத்தனை வடிவம்!எத்தனை கலவை!
தீயின் குழம்புகள்!-செழும்பொன் காய்ச்சி
விட்ட ஓடைகள்!-வெம்மை தோன்றாமே
எரிந்திடுந் தங்கத் தீவுகள்!-பாரடி!
நீலப் பொய்கைகள்!-அடடா,நீல
வன்ன மொன்றில் எத்தனை வகையடி!
எத்தனை செம்மை!பசுமையுங் கருமையும்,
எத்தனை!-கரிய பெரும்பெரும் பூதம்!
நீலப் பொய்கையின் மிதந்திடுந் தங்கத்
தோணிகள் சுடரொளிப் பொற்கரை யிட்ட
கருஞ்சிக ரங்கள்!-காணடி,ஆங்கு
தங்கத் திமிங்கிலம் தாம்பல மிதக்கும்
இருட்கடல்!-ஆஹா!எங்கு நோக்கிடினும்
ஒளித்திரள்!ஒளித்திரள்!வன்னக் களஞ்சியம்
அது பாஞ்சாலி சபதத்தில் பாரதி மாலை வானத்ததை வர்ணனை செய்வதைப் பார்
வானத்தை
Delete👍
ReplyDelete