Skip to main content

குருதிப் புனல்





போழ்து மெலிந்த புன் செக்கரில்  வான்திசை

 சூழும் எழுந்து உதிரப் புனல் மலை

கீழ்து பிளந்த சிங்கம் ஒத்ததால் அப்பன்


ஆழ்துயர் செய்து அசுரரைக் கொல்லுமாறே


                                                                7.4.6


நம்மாழ்வார் திருவாய்மொழி


பொழுது சாயும் போது வானம் சிகப்பு நிறம் கொள்கிறது. இல்லை வானம் எங்கும் திசைகள் தோறும் குருதிப் புனல் தெறித்ததா?  ஒரு மலையை சிங்கம் பிளப்பது போல  இரணியன் என்ற அசுரன் துயர் அடையுமாறு சிங்க உருவெடுத்த பெருமான் கொல்கிறானே!




Day thins out 

Red gathers in the sky

Stream of blood splashes across the sky

and in all directions

Like a lion that splits the mountain under its feet

He killed the demon, a long torment that was


In English

T Santhanam


This pasuram explains the killing of Hiranyakasipu by Lord as he takes the guise of a lion to tear him as the day thins out and the sky gathers red

Comments

  1. அருமையான விளக்கம். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. Nice ! Incidentally witnessed an evening sky with different shades of red splattered across, right after some rains and full rainbow last week while driving - amazing experience. Lightning and now sky - elements of nature in Pasurams. Perhaps Bharathi got inspired similarly later for 'காக்கை சிறகினிலே'.
    -Cheenu

    ReplyDelete
  3. பார்;சுடர்ப்பிரிதியைச் சூழவே படர்முகில்
    எத்தனை தீப்பட் டெரிவன?ஓகோ!
    என்னடி!இந்த வன்னத் தியல்புகள்!
    எத்தனை வடிவம்!எத்தனை கலவை!
    தீயின் குழம்புகள்!-செழும்பொன் காய்ச்சி
    விட்ட ஓடைகள்!-வெம்மை தோன்றாமே
    எரிந்திடுந் தங்கத் தீவுகள்!-பாரடி!
    நீலப் பொய்கைகள்!-அடடா,நீல
    வன்ன மொன்றில் எத்தனை வகையடி!
    எத்தனை செம்மை!பசுமையுங் கருமையும்,
    எத்தனை!-கரிய பெரும்பெரும் பூதம்!
    நீலப் பொய்கையின் மிதந்திடுந் தங்கத்
    தோணிகள் சுடரொளிப் பொற்கரை யிட்ட
    கருஞ்சிக ரங்கள்!-காணடி,ஆங்கு
    தங்கத் திமிங்கிலம் தாம்பல மிதக்கும்
    இருட்கடல்!-ஆஹா!எங்கு நோக்கிடினும்
    ஒளித்திரள்!ஒளித்திரள்!வன்னக் களஞ்சியம்

    அது பாஞ்சாலி சபதத்தில் பாரதி மாலை வானத்ததை வர்ணனை செய்வதைப் பார்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...