Skip to main content

கவிதைகள் மீது ஒரு காதல்

 




The fountains mingle with the river

   And the rivers with the ocean,

The winds of heaven mix for ever

   With a sweet emotion;

Nothing in the world is single;

   All things by a law divine

In one spirit meet and mingle.

   Why not I with thine?—


See the mountains kiss high heaven

   And the waves clasp one another;

No sister-flower would be forgiven

   If it disdained its brother;

And the sunlight clasps the earth

   And the moonbeams kiss the sea:

What is all this sweet work worth

   If thou kiss not me?


    அன்று ஒரு நாள் பாரதி திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு காட்சி. பாரதிக்கு எட்டயபுரம் அரண்மனையில் வேலை கிடைக்கிறது. என்ன வேலை? ஜமீன்தாருக்கு நண்பனாக அவர் கூடவே எப்போதும் இருக்கும் வேலை. பாரதி அன்று மாலை ஒரு குதிரை வண்டியில் வீட்டுக்கு வருகிறார். மூட்டை மூட்டையாக வந்து இறங்குகின்றன. பாரதியின் மனைவி பொன்னும் மணியும் பட்டும் மூட்டையில் இருக்கும் என்று எண்ணி மகிழ்ந்து போகிறார். பாரதி மூட்டைகளில் ஒன்றை அவிழ்க்கிறார். எல்லாம் புத்தகங்கள். அதிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வாய் விட்டுப் படிக்கிறார். அது ஷெல்லியின் கவிதை. அதுதான் மேலே காண்பது. செல்லம்மா மிகுந்த ஏமாற்றம் அடைந்து அழத் துவங்குகிறார்.  எனக்கு ஒரு புடவை வாங்கி வரக்கூட உங்களுக்குத் தோன்றவில்லையா என்று கேட்கிறார். பாரதி திகைத்துப் போய் செல்லம்மாவைப் பார்த்தபடியே நின்று விடுகிறார்.

    

    ஷெல்லியின் கவிதைத் தலைப்பு Love's Philosophy என்பது. ஷெல்லியின் கவிதைகள் மேல் பாரதி கொண்ட காதல் தான் நாம் அறிந்த ஒன்று ஆயிற்றே?




Comments

  1. Mathivanan InbarajJuly 15, 2024 at 7:10 PM

    கவிதைகள் மேல் காதல், அருமை. அதை விட பாராட்டுக்குரியது இப்போது நீ தொடர்ந்து எழுதுவது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி மதி ஊக்கப்படுத்துவதற்கு

      Delete
  2. கவிதை காதல்லாம் ஓக்கே. என் கவலை எல்லாம் செல்லம்மா பற்றிதான்..

    ReplyDelete
    Replies
    1. நீ இப்ப கவலைப்பட்டு என்ன ஆகப் போறது? ஒரு சுவாரஸ்யமான விஷயம். செல்லம்மா தன் கணவரைப் பற்றி வானொலியில் பேசியிருக்கிறார். இணையத்தில் கிடைக்கிறது. படித்துப் பார்.

      Delete
  3. 😂😂ஒண்ணும் ஆகப் போறதில்ல. ஆனாலும் கொஞ்சம் காண்டாகும்.

    பார்க்கறேன்

    ReplyDelete
  4. ஷெல்லி கவிதைகள் மேல் பாரதி கொண்ட காதல் அலாதி. செல்லம்மாவுக்குத் தான் ஏமாற்றம். நியாயமான எதிர்பார்ப்பு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராம். நெஞ்சில் கவலை நிதமும் பயிராக்கி அஞ்சி வாழாத ஒருவன் அவன். உயர்ந்த சிந்தனை உடையவன். எளிய எதிர்பார்ப்புகள் அவனுக்குப் புரிவதில்லை.. அவனளவு மனைவியை நேசித்தார் எவரும் இல்லை

      Delete
  5. It's the lens with which you see the world that makes this blog unique.

    Bharathi was a soul untethered by conventions and societal norms. His impractical obsession with books may not have ensured a comfortable living but this is what has allowed his legacy to endure beyond his lifetime.

    This post has sparked some insightful reading. Keep writing.

    ReplyDelete
    Replies
    1. Thanks Janani. Yes Bharati was a rebel in every sense of the word.

      Delete
  6. Mathivanan InbarajJuly 16, 2024 at 3:18 PM

    Blog பற்றி வரும் comments & replies சுவராசியமாயிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா மதி? நன்றி நன்றி

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...