The fountains mingle with the river
And the rivers with the ocean,
The winds of heaven mix for ever
With a sweet emotion;
Nothing in the world is single;
All things by a law divine
In one spirit meet and mingle.
Why not I with thine?—
See the mountains kiss high heaven
And the waves clasp one another;
No sister-flower would be forgiven
If it disdained its brother;
And the sunlight clasps the earth
And the moonbeams kiss the sea:
What is all this sweet work worth
If thou kiss not me?
அன்று ஒரு நாள் பாரதி திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஒரு காட்சி. பாரதிக்கு எட்டயபுரம் அரண்மனையில் வேலை கிடைக்கிறது. என்ன வேலை? ஜமீன்தாருக்கு நண்பனாக அவர் கூடவே எப்போதும் இருக்கும் வேலை. பாரதி அன்று மாலை ஒரு குதிரை வண்டியில் வீட்டுக்கு வருகிறார். மூட்டை மூட்டையாக வந்து இறங்குகின்றன. பாரதியின் மனைவி பொன்னும் மணியும் பட்டும் மூட்டையில் இருக்கும் என்று எண்ணி மகிழ்ந்து போகிறார். பாரதி மூட்டைகளில் ஒன்றை அவிழ்க்கிறார். எல்லாம் புத்தகங்கள். அதிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து வாய் விட்டுப் படிக்கிறார். அது ஷெல்லியின் கவிதை. அதுதான் மேலே காண்பது. செல்லம்மா மிகுந்த ஏமாற்றம் அடைந்து அழத் துவங்குகிறார். எனக்கு ஒரு புடவை வாங்கி வரக்கூட உங்களுக்குத் தோன்றவில்லையா என்று கேட்கிறார். பாரதி திகைத்துப் போய் செல்லம்மாவைப் பார்த்தபடியே நின்று விடுகிறார்.
ஷெல்லியின் கவிதைத் தலைப்பு Love's Philosophy என்பது. ஷெல்லியின் கவிதைகள் மேல் பாரதி கொண்ட காதல் தான் நாம் அறிந்த ஒன்று ஆயிற்றே?
கவிதைகள் மேல் காதல், அருமை. அதை விட பாராட்டுக்குரியது இப்போது நீ தொடர்ந்து எழுதுவது.
ReplyDeleteநன்றி மதி ஊக்கப்படுத்துவதற்கு
Deleteகவிதை காதல்லாம் ஓக்கே. என் கவலை எல்லாம் செல்லம்மா பற்றிதான்..
ReplyDeleteநீ இப்ப கவலைப்பட்டு என்ன ஆகப் போறது? ஒரு சுவாரஸ்யமான விஷயம். செல்லம்மா தன் கணவரைப் பற்றி வானொலியில் பேசியிருக்கிறார். இணையத்தில் கிடைக்கிறது. படித்துப் பார்.
Delete😂😂ஒண்ணும் ஆகப் போறதில்ல. ஆனாலும் கொஞ்சம் காண்டாகும்.
ReplyDeleteபார்க்கறேன்
ஷெல்லி கவிதைகள் மேல் பாரதி கொண்ட காதல் அலாதி. செல்லம்மாவுக்குத் தான் ஏமாற்றம். நியாயமான எதிர்பார்ப்பு. வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ராம். நெஞ்சில் கவலை நிதமும் பயிராக்கி அஞ்சி வாழாத ஒருவன் அவன். உயர்ந்த சிந்தனை உடையவன். எளிய எதிர்பார்ப்புகள் அவனுக்குப் புரிவதில்லை.. அவனளவு மனைவியை நேசித்தார் எவரும் இல்லை
DeleteIt's the lens with which you see the world that makes this blog unique.
ReplyDeleteBharathi was a soul untethered by conventions and societal norms. His impractical obsession with books may not have ensured a comfortable living but this is what has allowed his legacy to endure beyond his lifetime.
This post has sparked some insightful reading. Keep writing.
Thanks Janani. Yes Bharati was a rebel in every sense of the word.
DeleteBlog பற்றி வரும் comments & replies சுவராசியமாயிருக்கிறது.
ReplyDeleteஅப்படியா மதி? நன்றி நன்றி
Delete