Skip to main content

மதிலுகள்

 வைக்கம் முகமது பஷீர். இந்தப் பெயரை நினைத்த மாத்திரம் எங்கள் தாத்தாவிற்கு ஒரு யானை இருந்தது என்ற புத்தகத் தலைப்பு ஞாபகம் வரும். பல வருடங்களுக்கு முன்னால் புத்தகக் கடையில் இந்தப் புத்தகத்தை புரட்டி இருக்கிறேன். ஆனால் வாங்கினேன் இல்லை. பஷீர் மலையாளத்தில் எழுதியது தமிழாக்கம் செய்யப்பட்டிருந்தது.


தொண்ணூறுகளில் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய மதிலுகள் என்ற திரைப்படத்தை தூர்தர்ஷனில் ஒளிபரப்பினார்கள். பார்த்தேன். அற்புதமான படம். ஆகஸ்ட் புரட்சியில் ஈடுபட்டதற்காக பிரிட்டிஷ் அரசு  கைது செய்து சிறை வைத்த ஒருவனின் கதைதான் மதிலுகள். அது வைக்கம் முகமது பஷீரின் கதை.  பஷீர் ஏனைய அரசியல் கைதிகளோடு சிறையில் இருக்கிறார். ஜெயிலர், ஜெயில் உயரதிகாரி அவரது மனைவி எல்லோரும் பஷீரின் தீவிர வாசகர்கள். அதனால் சிறை வாசத்தில் அவருக்கு சலுகைகள் பல உண்டு. மீன் துண்டு கூடுதலாக சோற்று உருண்டை, பீடி இதெல்லாம் எத்தனை பெரிய சலுகைகள். பஷீருக்கு மிகவும் கடினமான வேலைகள் சிறையில் இல்லை. அவருக்குப் பிடித்த மாதிரி பல வகை ரோஜாப் பதியன்களை நட்டு நீரூற்றி வருவது அவரது வாடிக்கை. 


அவ்வப்போது அவரை ஒத்த அரசியல் கைதிகளோடு அளவளாவுவது உண்டு.

ஒருமுறை அவர் கேட்கிறார். உங்களில் யாராவது காந்தியைப் பார்த்தது உண்டா? ஒரு சில கைகள் உயருகின்றன. உங்களில் யாராவது காந்தியின் அருகே சென்று அவரைத் தொட்டது உண்டா? ஒரு கை கூட உயரவில்லை. பஷீர் மட்டும் கை உயர்த்துகிறார். ஒரு முறை காந்தி வைக்கம் வந்தபோது நான் அவரைத் தொட்டிருக்கிறேன்.


இப்படி எல்லாம் சிறையில் பேசி மகிழ்கிறார்கள். அவரவர் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவரது சகாக்கள் அனைவரும் விடுதலை ஆகிவிடுகிறார்கள். பஷீரைத் தனிமை வந்து சூழ்கிறது. தான் வளர்த்த ரோஜாக்களோடு பேசுகிறார். சதா கிரீச்சிட்டுத் திரியும் அணில்களோடு பேசுகிறார். ரோஜாச் செடிகளின் வரிசையை ஒட்டி ஒரு பெரிய மதில் சுவர் இருக்கிறது. அந்தச் சுவரின் மறுபுறம் பெண் கைதிகளின் செல் இருப்பது பஷீருக்குத் தெரிய வருகிறது. ஓரு நாள் அவர் விசிலடித்தபடி செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கிறார்.

அப்போது சுவற்றிற்கு அப்பால் இருந்து ஒரு பெண் குரல் கேட்கிறது..


காட்சியைப் பாருங்கள்.




இது போன்ற நெகிழ்ச்சியான காட்சியைப் பார்க்க முடியுமா?  தெய்வமே என்று அந்தப் பெண்ணின் குரல் போல நமக்கும் அரற்றத் தோன்றுகிறது.


மகமது குட்டி அதாவது மம்முட்டியின் அற்புதமான நடிப்பைப் பாருங்கள்.


குரல் வழியாக அந்தப் பெண்ணை அறிகிறார்.  அவளோடு நேசம் கொள்கிறார். ரோஜாச் செடிகளை சுவருக்கு அப்பால் வீசி எறிந்து அவளுக்குப் பரிசளிக்கிறார்.  அவரோடு பேச வேண்டும் என்றால் இலையும் பூக்களும் அற்ற வெற்றுக் கொம்பை அந்தப் பெண் உயரே உயரே வீசுவாள். அது ஒரு சங்கேதம். உடனே பஷீர் நீண்டு உயர்ந்திருக்கும் அந்தப் பழைய சுவர் ஒரம் சென்று அவளோடு பேசுவார்.


இப்படி இருக்க பஷீர் எதிர்பாராத விதமாக அவருக்கு விடுதலை கிடைத்து விடுகிறது. அந்தப் பெண்ணிடம் சொல்லக் கூட அவகாசம் இல்லை. 


இது தெரியாமல் அந்தப் பெண் உயரே உயரே ரோஜாக் கொம்புகளை வீசியபடியே இருக்கிறாள். சமிக்ஞையைப் புரிந்து கொண்டு பஷீர் மதிலோரம் வந்து பேசுவார் என்று காத்திருக்கிறாள். அவள் ஒரு ஆயுட்கால கைதி. தனிமையைத் தின்று வாழும் ஒரு உயிர்.










Comments

  1. நான் சில வருடங்கள் முன் தான் பார்த்தேன். ஆஹா கவிதையாய் ஒரு நட்பு.. மம்முட்டியின் வெட்கச் சிரிப்பு அழகு. நாரயணி . சுந்தரமான பேரு, 22 சுந்தரமான வயசு... சிறு பிள்ளை போல அந்த கொம்பு விழுந்ததும் விரைவது...லலிதா குரல் மட்டும்... ரொம்பவே ரசித்துப் பார்த்த படம்.

    ReplyDelete
    Replies
    1. அற்புதம். பல வருடங்கள் கழித்து பார்க்க வாய்த்தது. ஆமாம் அந்தக் குரல்... எனிக்குக் கரையான் தோணின்னு

      Delete
  2. Back when I visited New York in 1993/94, I bought three video tapes from an Indian store in Queens - Mathilukal, Pather Panchali and Aval Appadithan. I was quite surprised to see such a collection there. The shopowner was equally amused at my list - he asked me, 'What, do you work for the Indian consulate?'. Lost Aval Appadithan tape but still have the other two 😀
    -Cheenu

    ReplyDelete
    Replies
    1. Nice. Aval appadithan is available in yourube. I saw recently

      Delete
    2. Santhanam, waiting for your writeup on Pather panjali.. Andha kuttys and especially andha patti semma..

      Delete
  3. ஆத்தாடி...
    ஆத்தாடி

    என்ன சொல்ல
    வணக்கங்கள் அய்யா
    கரைந்து போகிறேன் நானும் கல்லையும் கரைக்கும் அந்த தெய்வமே என்றொரு சொல்...

    எஸ் வி வேணுகோபாலன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி எஸ்.வி.வி படித்து விட்டு உடனே எழுதியதற்கு. உடனுக்கு உடன் பாராட்டும் குணம் உங்களுக்கு

      Delete
  4. படித்தேன். அந்த வீடியோவும் பார்த்தேன். இந்தப்படம் நான் பார்த்திருக்கிறேன். மம்முட்டி இயல்பான நடிப்பு அழகு. அந்தப் பெண்ணின் பதில் ரசிக்கக்கூடியது. நல்ல பதிவு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...