வைக்கம் முகமது பஷீர். இந்தப் பெயரை நினைத்த மாத்திரம் எங்கள் தாத்தாவிற்கு ஒரு யானை இருந்தது என்ற புத்தகத் தலைப்பு ஞாபகம் வரும். பல வருடங்களுக்கு முன்னால் புத்தகக் கடையில் இந்தப் புத்தகத்தை புரட்டி இருக்கிறேன். ஆனால் வாங்கினேன் இல்லை. பஷீர் மலையாளத்தில் எழுதியது தமிழாக்கம் செய்யப்பட்டிருந்தது.
தொண்ணூறுகளில் அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய மதிலுகள் என்ற திரைப்படத்தை தூர்தர்ஷனில் ஒளிபரப்பினார்கள். பார்த்தேன். அற்புதமான படம். ஆகஸ்ட் புரட்சியில் ஈடுபட்டதற்காக பிரிட்டிஷ் அரசு கைது செய்து சிறை வைத்த ஒருவனின் கதைதான் மதிலுகள். அது வைக்கம் முகமது பஷீரின் கதை. பஷீர் ஏனைய அரசியல் கைதிகளோடு சிறையில் இருக்கிறார். ஜெயிலர், ஜெயில் உயரதிகாரி அவரது மனைவி எல்லோரும் பஷீரின் தீவிர வாசகர்கள். அதனால் சிறை வாசத்தில் அவருக்கு சலுகைகள் பல உண்டு. மீன் துண்டு கூடுதலாக சோற்று உருண்டை, பீடி இதெல்லாம் எத்தனை பெரிய சலுகைகள். பஷீருக்கு மிகவும் கடினமான வேலைகள் சிறையில் இல்லை. அவருக்குப் பிடித்த மாதிரி பல வகை ரோஜாப் பதியன்களை நட்டு நீரூற்றி வருவது அவரது வாடிக்கை.
அவ்வப்போது அவரை ஒத்த அரசியல் கைதிகளோடு அளவளாவுவது உண்டு.
ஒருமுறை அவர் கேட்கிறார். உங்களில் யாராவது காந்தியைப் பார்த்தது உண்டா? ஒரு சில கைகள் உயருகின்றன. உங்களில் யாராவது காந்தியின் அருகே சென்று அவரைத் தொட்டது உண்டா? ஒரு கை கூட உயரவில்லை. பஷீர் மட்டும் கை உயர்த்துகிறார். ஒரு முறை காந்தி வைக்கம் வந்தபோது நான் அவரைத் தொட்டிருக்கிறேன்.
இப்படி எல்லாம் சிறையில் பேசி மகிழ்கிறார்கள். அவரவர் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் அவரது சகாக்கள் அனைவரும் விடுதலை ஆகிவிடுகிறார்கள். பஷீரைத் தனிமை வந்து சூழ்கிறது. தான் வளர்த்த ரோஜாக்களோடு பேசுகிறார். சதா கிரீச்சிட்டுத் திரியும் அணில்களோடு பேசுகிறார். ரோஜாச் செடிகளின் வரிசையை ஒட்டி ஒரு பெரிய மதில் சுவர் இருக்கிறது. அந்தச் சுவரின் மறுபுறம் பெண் கைதிகளின் செல் இருப்பது பஷீருக்குத் தெரிய வருகிறது. ஓரு நாள் அவர் விசிலடித்தபடி செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டிருக்கிறார்.
அப்போது சுவற்றிற்கு அப்பால் இருந்து ஒரு பெண் குரல் கேட்கிறது..
காட்சியைப் பாருங்கள்.
இது போன்ற நெகிழ்ச்சியான காட்சியைப் பார்க்க முடியுமா? தெய்வமே என்று அந்தப் பெண்ணின் குரல் போல நமக்கும் அரற்றத் தோன்றுகிறது.
மகமது குட்டி அதாவது மம்முட்டியின் அற்புதமான நடிப்பைப் பாருங்கள்.
குரல் வழியாக அந்தப் பெண்ணை அறிகிறார். அவளோடு நேசம் கொள்கிறார். ரோஜாச் செடிகளை சுவருக்கு அப்பால் வீசி எறிந்து அவளுக்குப் பரிசளிக்கிறார். அவரோடு பேச வேண்டும் என்றால் இலையும் பூக்களும் அற்ற வெற்றுக் கொம்பை அந்தப் பெண் உயரே உயரே வீசுவாள். அது ஒரு சங்கேதம். உடனே பஷீர் நீண்டு உயர்ந்திருக்கும் அந்தப் பழைய சுவர் ஒரம் சென்று அவளோடு பேசுவார்.
இப்படி இருக்க பஷீர் எதிர்பாராத விதமாக அவருக்கு விடுதலை கிடைத்து விடுகிறது. அந்தப் பெண்ணிடம் சொல்லக் கூட அவகாசம் இல்லை.
இது தெரியாமல் அந்தப் பெண் உயரே உயரே ரோஜாக் கொம்புகளை வீசியபடியே இருக்கிறாள். சமிக்ஞையைப் புரிந்து கொண்டு பஷீர் மதிலோரம் வந்து பேசுவார் என்று காத்திருக்கிறாள். அவள் ஒரு ஆயுட்கால கைதி. தனிமையைத் தின்று வாழும் ஒரு உயிர்.
நான் சில வருடங்கள் முன் தான் பார்த்தேன். ஆஹா கவிதையாய் ஒரு நட்பு.. மம்முட்டியின் வெட்கச் சிரிப்பு அழகு. நாரயணி . சுந்தரமான பேரு, 22 சுந்தரமான வயசு... சிறு பிள்ளை போல அந்த கொம்பு விழுந்ததும் விரைவது...லலிதா குரல் மட்டும்... ரொம்பவே ரசித்துப் பார்த்த படம்.
ReplyDeleteஅற்புதம். பல வருடங்கள் கழித்து பார்க்க வாய்த்தது. ஆமாம் அந்தக் குரல்... எனிக்குக் கரையான் தோணின்னு
Deleteதோணுன்னு
DeleteBack when I visited New York in 1993/94, I bought three video tapes from an Indian store in Queens - Mathilukal, Pather Panchali and Aval Appadithan. I was quite surprised to see such a collection there. The shopowner was equally amused at my list - he asked me, 'What, do you work for the Indian consulate?'. Lost Aval Appadithan tape but still have the other two 😀
ReplyDelete-Cheenu
Nice. Aval appadithan is available in yourube. I saw recently
DeleteSanthanam, waiting for your writeup on Pather panjali.. Andha kuttys and especially andha patti semma..
DeleteOk
Deleteஆத்தாடி...
ReplyDeleteஆத்தாடி
என்ன சொல்ல
வணக்கங்கள் அய்யா
கரைந்து போகிறேன் நானும் கல்லையும் கரைக்கும் அந்த தெய்வமே என்றொரு சொல்...
எஸ் வி வேணுகோபாலன்
நன்றி எஸ்.வி.வி படித்து விட்டு உடனே எழுதியதற்கு. உடனுக்கு உடன் பாராட்டும் குணம் உங்களுக்கு
Deleteபடித்தேன். அந்த வீடியோவும் பார்த்தேன். இந்தப்படம் நான் பார்த்திருக்கிறேன். மம்முட்டி இயல்பான நடிப்பு அழகு. அந்தப் பெண்ணின் பதில் ரசிக்கக்கூடியது. நல்ல பதிவு
ReplyDeleteநன்றி ராம்
Delete