Skip to main content

நிழலுக்கும் அப்பால்

 



உலகத்தை, அன்றாட வாழ்க்கையை நான் ஒரு மாபெரும் மர்மம் என்றே அனுபவம் கொள்கிறேன். ஒவ்வொன்றும் ரகசியம் போலவே எனக்குத் தெரிகிறது. சமயத்தில் காற்று தழுவுவதுகூட மர்மமாகத்தான் இருக்கிறது. அனைத்திலும் சாவித்துளை இருக்கிறது; ஆனால், சாவியில்லை. இதுதான் என்னுடைய அனுபவமாக இருக்கிறது


இப்படிச் சொல்வது

வே.நீ.சூர்யா. இவருடைய கவிதை உலகம் மாறுபட்டது. இவருடைய கவிதை மொழி பிரத்தியேகமானது. நம்மோடு நெருக்கம் கொண்டு பேசுவது. இவருடைய அக உலகம் நம்மைப் பிரமிக்க வைக்கிறது.  இவர் வரைந்து காட்டும் காட்சிகள் சிலவற்றைப்  பாருங்கள் 


நிழலுக்கு அப்பால் எறியப்பட்டிருந்த ஆழியலைகளின் சுவரொட்டி ஒட்டிய பிரதேசங்கள்


இரவுக் கடலில் புதையுண்ட மலை


புலி உறுமும் நீல மலையில் தொலைந்து போன ஆட்டுக்குட்டி



இவர் ஆண்டவரிடம் கேட்பது என்ன தெரியுமா? 


உன் அருள் இல்லாமல் மின்னும் ஒரே ஒரு கணம்.


சில கவிதைகளைப் பார்க்கலாம்


பழைய கோவிலில் ஒரு சாயங்காலம்


நம் இருப்பே பாற்கடலா 

இம்மாலைப் பொழுது கயிறா 

நித்திய ஏக்கம்தான் மந்திர மலையா

நாம் நூறுநூறு நபராக

இரண்டு பக்கங்களிலும் நிற்கின்றோமா?

விழிகளை மூடிக் கொள் அன்பே 

இந்த உடைந்த உலகம் ஒரு கை எனில் 

நம் காதல் இன்னொரு கை

இதோ கரம் குவித்து ஒரு பிரார்த்தனை 

சாரல் மழையில் பைய நடக்க ஆரம்பிக்கிறோம்

வழியில் எல்லா சிற்பங்களிலும் ஒரு மர்மப் புன்னகை

செவிகளுக்குள்ளோ

மங்கிய மாலை வெளிச்சத்தின் நதிக்கரையில் 

மின்மினிகள் துணையிருக்க

நீ காத்திருக்கும்

வேறு ஏதோ காலத்தின் இடையறாத அழைப்புகள்

என் உடல் உன்னை நோக்கி புறப்படும்

ஒரு படகு என மாறுவதற்கு முன்

வா இங்கிருந்து மறைந்து விடலாம்


இந்தக் கவிதையைப் படிக்கும் போது  ஏனோ திருவட்டாறு கோயில் ஞாபகம் வந்தது


பின்னும் ஒரு கவிதை   கவிதையின் தலைப்பு என்ன தெரியுமா?  


நிழலாக இருப்பது நன்று நிழலாகக் கூட இல்லாமல் இருப்பது நன்று   


தலைப்பு ஒரு சில வார்த்தைகள் இல்லை. முழுமையான இரண்டு வரிகள்.


கவிதையைப் பார்க்கலாம்


என்னுடையது அதோ அந்த நிழல் மட்டுமே

மற்றபடி இச்சுவர் ஏந்தியிருக்கும் 

இருக்கையின் நிழல்களோ 

அதிலொன்றில் கைவைத்தபடி  அமர்ந்திருக்கும் நிழலுருவமோ என்னுடையதில்லை எவருடைய சாயையாகக் கூட இருக்கட்டுமே

எனக்குப் பிரச்னையும் இல்லை

அந்நிழலுக்குப் பக்கத்தில்

ஒரு நிழல் போல் அமர்கிறேன் 

அனைத்தும் குணமாகிவிடும் போலிருக்கிறது




காற்றில் இறகுபோல அல்ல; பறவை மாதிரி செல்லவே பிடித்திருக்கிறது. இப்படிச்

சொல்லும் இந்தப் பொறியியல் பட்டதாரி நமக்குக் காட்டுவது புதியதோர் உலகம்.


வெல்க  வே நீ சூர்யா!



Comments

  1. சாவித்துளை இருக்கிறது. சாவியில்லை.// அருமை.

    அவன் அருளே மின்னும் எந்த ஒரு கணமும் என்பது என் கருத்து. இவன் வித்தியாசமாக ஆசைப் படுகிறான்,.

    ReplyDelete
    Replies
    1. அவரவர் அறிவகை

      Delete
    2. அவரவர் தமதமது அறிவறி வகைவகை
      அவரவர் இறையவர் எனவடி அடைவர்கள்
      அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
      அவரவர் விதிவழி அடைய நின்றனரே.

      - திருவாய்மொழி

      Delete
  2. வித்தியாசமான ரசிக்கத்தக்க கவிதை. வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...