உலகத்தை, அன்றாட வாழ்க்கையை நான் ஒரு மாபெரும் மர்மம் என்றே அனுபவம் கொள்கிறேன். ஒவ்வொன்றும் ரகசியம் போலவே எனக்குத் தெரிகிறது. சமயத்தில் காற்று தழுவுவதுகூட மர்மமாகத்தான் இருக்கிறது. அனைத்திலும் சாவித்துளை இருக்கிறது; ஆனால், சாவியில்லை. இதுதான் என்னுடைய அனுபவமாக இருக்கிறது
இப்படிச் சொல்வது
வே.நீ.சூர்யா. இவருடைய கவிதை உலகம் மாறுபட்டது. இவருடைய கவிதை மொழி பிரத்தியேகமானது. நம்மோடு நெருக்கம் கொண்டு பேசுவது. இவருடைய அக உலகம் நம்மைப் பிரமிக்க வைக்கிறது. இவர் வரைந்து காட்டும் காட்சிகள் சிலவற்றைப் பாருங்கள்
நிழலுக்கு அப்பால் எறியப்பட்டிருந்த ஆழியலைகளின் சுவரொட்டி ஒட்டிய பிரதேசங்கள்
இரவுக் கடலில் புதையுண்ட மலை
புலி உறுமும் நீல மலையில் தொலைந்து போன ஆட்டுக்குட்டி
இவர் ஆண்டவரிடம் கேட்பது என்ன தெரியுமா?
உன் அருள் இல்லாமல் மின்னும் ஒரே ஒரு கணம்.
சில கவிதைகளைப் பார்க்கலாம்
பழைய கோவிலில் ஒரு சாயங்காலம்
நம் இருப்பே பாற்கடலா
இம்மாலைப் பொழுது கயிறா
நித்திய ஏக்கம்தான் மந்திர மலையா
நாம் நூறுநூறு நபராக
இரண்டு பக்கங்களிலும் நிற்கின்றோமா?
விழிகளை மூடிக் கொள் அன்பே
இந்த உடைந்த உலகம் ஒரு கை எனில்
நம் காதல் இன்னொரு கை
இதோ கரம் குவித்து ஒரு பிரார்த்தனை
சாரல் மழையில் பைய நடக்க ஆரம்பிக்கிறோம்
வழியில் எல்லா சிற்பங்களிலும் ஒரு மர்மப் புன்னகை
செவிகளுக்குள்ளோ
மங்கிய மாலை வெளிச்சத்தின் நதிக்கரையில்
மின்மினிகள் துணையிருக்க
நீ காத்திருக்கும்
வேறு ஏதோ காலத்தின் இடையறாத அழைப்புகள்
என் உடல் உன்னை நோக்கி புறப்படும்
ஒரு படகு என மாறுவதற்கு முன்
வா இங்கிருந்து மறைந்து விடலாம்
இந்தக் கவிதையைப் படிக்கும் போது ஏனோ திருவட்டாறு கோயில் ஞாபகம் வந்தது
பின்னும் ஒரு கவிதை கவிதையின் தலைப்பு என்ன தெரியுமா?
நிழலாக இருப்பது நன்று நிழலாகக் கூட இல்லாமல் இருப்பது நன்று
தலைப்பு ஒரு சில வார்த்தைகள் இல்லை. முழுமையான இரண்டு வரிகள்.
கவிதையைப் பார்க்கலாம்
என்னுடையது அதோ அந்த நிழல் மட்டுமே
மற்றபடி இச்சுவர் ஏந்தியிருக்கும்
இருக்கையின் நிழல்களோ
அதிலொன்றில் கைவைத்தபடி அமர்ந்திருக்கும் நிழலுருவமோ என்னுடையதில்லை எவருடைய சாயையாகக் கூட இருக்கட்டுமே
எனக்குப் பிரச்னையும் இல்லை
அந்நிழலுக்குப் பக்கத்தில்
ஒரு நிழல் போல் அமர்கிறேன்
அனைத்தும் குணமாகிவிடும் போலிருக்கிறது
காற்றில் இறகுபோல அல்ல; பறவை மாதிரி செல்லவே பிடித்திருக்கிறது. இப்படிச்
சொல்லும் இந்தப் பொறியியல் பட்டதாரி நமக்குக் காட்டுவது புதியதோர் உலகம்.
வெல்க வே நீ சூர்யா!
Superb amazing
ReplyDeleteThank you
Deleteசாவித்துளை இருக்கிறது. சாவியில்லை.// அருமை.
ReplyDeleteஅவன் அருளே மின்னும் எந்த ஒரு கணமும் என்பது என் கருத்து. இவன் வித்தியாசமாக ஆசைப் படுகிறான்,.
அவரவர் அறிவகை
Deleteஅவரவர் தமதமது அறிவறி வகைவகை
Deleteஅவரவர் இறையவர் எனவடி அடைவர்கள்
அவரவர் இறையவர் குறைவிலர் இறையவர்
அவரவர் விதிவழி அடைய நின்றனரே.
- திருவாய்மொழி
வித்தியாசமான ரசிக்கத்தக்க கவிதை. வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ராம்
Delete