பாரதியின் பாடல்களை ஆழ்ந்து கற்க என ஒரு காலம் இருந்தது. கிட்டத்தட்ட நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால். பகைவனுக்கு அருள்வாய் என்ற பாடல் மனதைக் கவர்வதாக இருந்தது.
உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்தபின் உள்ள நிறைவாமோ என்ற வரிகள் சிந்திக்க வைத்தது. “அவனது உள்ள நிறைவிலும் ஓர் கள்ளம் புகுந்தது” என்று கல்கி தனது கதை ஒன்றில் அப்படியே பாரதியின் வரியை எடுத்தாண்டிருந்தார்.
சாதாரணமாக கர்நாடக இசைக் கச்சேரிகளில் குறிப்பிட்ட சில பாரதி பாடல்களே ஆட்சி செய்யும். சின்னஞ்சிறு கிளியே என்ற பாடல் யாரும் சாதாரணமாகக் கச்சேரிகளில் பாடக் கேட்கலாம்.
பகைவனுக்கருள்வாய் என்ற பாடலைச் சஞ்சய் சுப்ரமணியன் பாடக் கேட்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.
பாடல் வரிகளையும் அதன் ஆங்கில வடிவத்தையும் பார்க்கலாம்.
பின்பு சஞ்சய் பாடுவதைக் கேட்கலாம்.
பகைவனுக் கருள்வாய்-நன்னெஞ்சே!
பகைவனுக் கருள்வாய்!
புகை நடுவினில் தீயிருப்பதைப்
பூமியிற் கண்டோமே-நன்னெஞ்சே!
பூமியிற் கண்டோமே.
பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கின்றான்-நன்னெஞ்சே!
பரமன் வாழ்கின்றான்
சிப்பியிலே நல்ல முத்து விளைந்திடுஞ்
செய்தியறியாயோ?
நன்னெஞ்சே!
குப்பையிலே மலர் கொஞ்சுங் குருக்கத்திக்
கொடி வளராதோ?-நன்னெஞ்சே!
உள்ள நிறைவிலோர் கள்ளம் புகுந்திடில்
உள்ள நிறைவாமோ?-நன்னெஞ்சே
தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும் சேர்த்தபின் தேனாமோ?-நன்னெஞ்சே!
வாழ்வை நினைத்தபின் தாழ்வை நினைப்பது
வாழ்வுக்கு நேராமோ?-நன்னெஞ்சே!
தாழ்வு பிறர்க்கெண்ணத் தானழிவா னென்ற
சாத்திரங் கேளாயோ?-நன்னெஞ்சே!
தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு
சிந்தையிற் போற்றிடுவாய்-நன்னெஞ்சே!
அன்னை பராசக்தி அவ்வுரு வாயினள் அவளைக் கும்பிடுவாய்-நன்னெஞ்சே!
Bless your enemy
My heart
Bless your enemy
The eye discerns
The raging fire
Inside of the smoke
The Greatest one
The Love dwells deep inside
The bitter enmity
The purest pearl
From the oyster comes
Don't you know, my heart?
The flower blooms
From trash and slime
Don't you know, my heart?
If stealth enters
The heart's content
Will it be heart's content?
A drop of poison
In the honey pure,
Will it be honey again?
To think of lowness
When life ahead
Will it be fair to life?
A tiger out to devour you
You praise her with love
Mother Shakthi takes that form
Bow before Her, My heart!
In English
T Santhanam
👌
ReplyDelete🙏
Deleteபாரதியின் நீண்ட பாடல் வரிகள். நிதானமாகப் படித்தேன். அருமையான மொழி பெயர்ப்பு. சஞ்சயின் இந்தப் பாட்டு கேட்டதில்லை.
ReplyDeleteநல்ல பதிவு. ரசித்தேன்.
நன்றி ராம்
Delete