முந்தைய பதிவின் தொடர்ச்சியாக ஹான் ஷானின் Cold Mountain தொகுப்பிலிருந்து மேலும் சில கவிதைகளைப் பார்க்கலாம்
If there’s something good, delight!
Seize the moment while it flies!
Though life can last a hundred years,
Who’s seen their thirty thousand days?
Just an instant then you’re gone.
Why sit whining over things?
When you’ve read the Classics through,
You’ll know quite enough of death.
ஏதாவது நன்றாக இருந்தால், ஆனந்தம் கொள்
பறந்து செல்லும் போதே அந்தக் கணத்தைப் பற்றிக் கொள்
வாழ்க்கை நூறு வருடங்களாக இருக்கலாம்
முப்பதாயிரம் நாட்களைக் கண்டவர் யார்?
ஒரு சிறு கணம்.. நீ போய்விடுவாய்
நின்று பலதுக்காகவும் புலம்புவது என்ன?
செவ்விலக்கியங்களைப் படித்து முடித்து விட்டால்
சாவைப் பற்றி போதுமான அளவு தெரிந்து கொண்டு விடுவாய்
Where’s the trail to Cold Mountain?
Cold Mountain? There’s no clear way.
Ice, in summer, is still frozen.
Bright sun shines through thick fog.
You won’t get there following me.
Your heart and mine are not the same.
If your heart was like mine,
You’d have made it, and be there!
குளிர் மலைக்குச் செல்லும் பாதை எங்கே?
குளிர் மலைக்கா? சரியான பாதை என்று இல்லை
பனி, கோடையில் கூட இன்னமும் உறைந்தே இருக்கிறது
அடர்ந்து மூடிய பனி ஊடே சூரிய ஒளி
செல்கிறது
என்னைத் தொடர்வதால் நீங்கள் அங்கே வந்து சேர முடியாது
உங்கள் மனதும் எனதும் ஒன்றல்ல
உங்கள் மனது எனது போலிருந்தால்
நீங்கள் அங்கே வந்து அடைந்திருப்பீர்களே
Cold Mountain’s full of strange sights
Men who go there end by being scared.
Water glints and gleams in the moon,
Grasses sigh and sing in the wind.
The bare plum blooms again with snow,
Naked branches have clouds for leaves.
When it rains, the mountain shines –
In bad weather you’ll not make this climb
குளிர் மலை முழுதும் வினோதக் காட்சிகள்
அங்கே போகும் மனிதர்கள் பயத்தில் தான் முடிந்து போகிறார்கள்
நிலவின் வெளிச்சத்தில் நீர் பளபளத்து மின்னுகிறது
புல்லெல்லாம் பெருமூச்சு விடுகின்றன
மேலும் காற்றில் பாடுகின்றன
ப்ளம் மலர்கள் மீண்டும் பனியோடு பூக்கின்றன.
இலையற்ற கிளைகள் மேகங்களை இலையாகக் கொண்டன
மழை பெய்யும் போது மலை பளபளக்கிறது
மோசமான வானிலையில் நீங்கள்
இது போல மலேயேற மாட்டீர்கள்
அருமை. பகிர்தலுக்கும் மொழிபெயர்ப்புக்கும்.
ReplyDeleteநன்றி
Deleteநன்றி
ReplyDeleteLovely Translation as always. Your selections are always profound and different.
ReplyDeleteThank you. I took the cue from Sti S Ramakrishnan. Selection, of course, is mine
Deleteஅருமையான தேர்வு. நல்ல மொழி பெயர்ப்பு. ரசித்தேன். வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ராம்
Delete